அணுஉலையில் மின்உற்பத்திக்கான பணிகள் தீவிரம்கூடன்குளத்தில் மீண்டும் பதட்டம்; போலீசார் குவிப்பு| Dinamalar

தமிழ்நாடு

அணுஉலையில் மின்உற்பத்திக்கான பணிகள் தீவிரம்கூடன்குளத்தில் மீண்டும் பதட்டம்; போலீசார் குவிப்பு

Added : ஜூலை 14, 2013 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

வள்ளியூர்:கூடன்குளம் அணுஉலையில் மின்உற்பத்திக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நெல்லை மாவட்டம் ரஷ்ய நாட்டு உதவியுடன் கூடன்குளத்தில் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டன. கடந்த 2011ம் ஆண்டு முதல் அணுஉலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் நிரப்ப அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் அணுசக்தி கழகம் அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அணுஉலை எதிர்ப்பு குழுவினர் பல்வேறு கட்டங்களாக போராட்டத்தை நடத்தினர். இதன் காரணமாக முதல் அணுஉலையில் உற்பத்தியை துவங்குவதற்கான பணிகள் முடங்கின.இந்நிலையில் முதல் அணுஉலையில் மின் உற்பத்தியை துவக்க, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது. இதனால் முதல் அணுஉலையில் மின்உற்பத்தியை துவக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்கு அணுஉலை எதிர்ப்புக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து இடிந்தகரையில் ஆலோசனையில் ஈடுபட்டனர். மின்உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டதை கண்டித்து நேற்று இடிந்தகரையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இன்று(14ம் தேதி) அணுஉலை எதிர்ப்பாளர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்த போவதாகவும், இதில் குமரி, தூத்துக்குடி மாவட்ட தலைவர்களும் பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது. இதனால் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீண்டும் அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராக உள்ளதாக தகவல் பரவியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போலீசார் குவிப்பு:இதற்கிடையே அணுஉலை எதிர்ப்பு குழுவினரால் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க அணுஉலை அமைந்துள்ள பகுதி முழுவதும் எஸ்.பி.,விஜயேந்திர பிதரி தலைமையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூடன்குளம் டவுன்ஷிப் பகுதி மற்றும் கூடன்குளம் வரும் முக்கிய ரோடுகளில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ரோடுகளின் வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே போலீசார் அனுமதிக்கின்றனர். போலீசாரின் கெடுபிடிகளால் கூடன்குளம் பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
15-ஜூலை-201307:57:23 IST Report Abuse
பி.டி.முருகன்    பாதுகாப்புக்காக ராணுவத்தையும் கூட கொண்டு வரலாம்.
Rate this:
Share this comment
Cancel
kalainathan - pioneer  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூலை-201313:25:11 IST Report Abuse
kalainathan அனுஉலையே வேண்டாம் என்று கூறிய உதயகுமார்...இப்ப உற்பத்தி் நிறைவாக இருந்தால் அனுமதி்ப்போம் என்று கூறுகிறார் அலோ எப்படியோ பாவப்பட்ட மக்களை ஒன்று தி்ரட்டி நீ அந்த ஏரியாவில் அடுத்த எலக்சனுக்கு கட்சிகாரங்ககிட்ட பேரம்பேசி தி்ட்டமிட்டு காயை நகர்த்தி் விட்டாய் உன்கூட இறுக்கிறவங்களை துன்பப்படுத்தாதேஅடுத்து நீ என்னென்ன வேலை செய்யப்போற சொல்லட்டுமா நான் சொல்றவங்களுக்குதான் உள்ளே வேலை கொடுக்கனும் உனக்கு லேபர்கமிசன் என பல தி்ட்டத்தோட வலம் வரும் நோக்கம் அனைவருக்கும் தெரிஞ்சி போச்சிஇனிமேலும் உன் நாடகம் செல்லாது.
Rate this:
Share this comment
Cancel
Lucas - chennai,இந்தியா
14-ஜூலை-201308:58:38 IST Report Abuse
Lucas தமழ் நாட்டு மக்களுக்குகாக மின்சாரம் என்றால் அவர்கள் ( கூடங்கூளம் மக்கள் ) உயிர்களை பறித்து கொண்டு வரும் அப்படிபட்ட மின்சாரம் எங்களுக்கு வேண்டாம் ...... மின்சாரம் தயாரிக்க பல வழிகள் உண்டு ........ மாத்தியோசி மச்சி ........ வழி பிறக்கும் .............................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை