கடலில் மூழ்கி பலியான மாணவர்கள் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு| Dinamalar

தமிழ்நாடு

கடலில் மூழ்கி பலியான மாணவர்கள் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு

Added : ஜூலை 14, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தூத்துக்குடி:தூத்துக்குடியில் நேற்று முன்தினம் கடலில்மூழ்கி பலியான பள்ளி மாணவர்களின் உடல்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.மதுரை திருநகரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் கல்விச்சுற்றுலா தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தனர். தூத்துக்குடி துறைமுகத்தை பார்த்துவிட்டு துறைமுக கடற்கரைக்கு வந்தனர். அப்போது ஒரு சில மாணவர்கள் கடலில் இறங்கி குளித்துள்ளனர்.துறைமுக கடற்கரை ஆழமான பகுதிஎன்பதாலும் கடலில் நேற்று முன்தினம் காற்றினால் பெரியஅளவில் அலைகள் ஏற்பட்டதாலும் அலையில் சிக்கி பரமேஸ்வரன், விஷ்ணுதரன்,தேவானந்த், சதீஷ்குமார் ஆகிய 4 மாணவர்கள் பலியாகினர். மேலும் 2 மாணவர்கள் கடலில் மூழ்கி மயக்கமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பலியான மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நள்ளிரவில் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.மாணவர்களின் உடல்களை வாங்கும்போது பெற்றோர்களும், உறவினர்களும் கதறிஅழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. நேற்று அதிகாலையில் திருநகருக்கு வந்த மாணவர்களின் உடல்கள் அவரவர்வீடுகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மாணவர்கள் இறந்ததையடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kamaraj dasan - Trichy,இந்தியா
15-ஜூலை-201309:59:51 IST Report Abuse
Kamaraj dasan இந்த காலத்து பிள்ளைகள் பெரியவர்கள் சொல்வதை மதிப்பதே இல்லை. சூழ்னிலை அறிந்து செயல்படும் அறிவும் இல்லை. அலை அடிக்கும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற புத்தி இல்லை . அழைத்து சென்ற வாத்திகளுக்கும் அறிவு இல்லை
Rate this:
Share this comment
Cancel
kalainathan - pioneer  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூலை-201309:56:00 IST Report Abuse
kalainathan வருந்துகிறேன் தயவு செய்து சுற்றுலா அழைத்து செல்லும்போதுஆசிரியர்கள் சென்றாலும் செல்வது சுற்றுலா என்பதால் அவர்கள் தங்களது சுகம் முக்கியம் என இருக்கும் நேரத்தி்ல்இந்தமாதி்ரிகள் நடக்கவாய்ப்புள்ளது எனவே பெற்றோர்களையும் அழைத்து செல்வது நல்லது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை