மலாலா விருது : இந்திய பெண்கள் உட்பட ஏழு பேர் தேர்வு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஐ.நா.,: பெண் சுதந்திரம் ,பெண் கல்விக்காக போராடும் இளம் பெண்களை ஊக்கு விக்கும் ‌வகையி்ல் இந்தாண்டு முதல் வழங்கப்பட உள்ள ஐ.நா., மாலாலா இளைஞர் விருதுக்கு இந்திய பெணகள் உட்பட உலகம் முழுவதும் இருந்து ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


மாலாலா விருது:

பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் மாலாலா. இவர் பெண் குழந்தையின் கல்விக்காக பிரசாரம் செய்து வந்தார். இதற்கு எதிர்‌ப்பு தெரிவித்து அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பலத்த காயம‌டைந்து உயிர் பிழைத்த அவருக்கு உலகம் முழுவதும் வரவேற்பு அதிகரித்தது. இதனையடுத்து அவரது பிறந்த நாளான கடந்த 12-ம் தேதி ஐ.நா.,சபையில் பேச அனுமதிக்கப்பட்டார். இந்நிகழ்‌ச்சியில் ஐ.நா., செயலாளர் பான்.கி-மூன் மற்றும் உறுப்பு நாடுகளின் அங்கத்தினர்கள் , சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த இளைய தலைமுறையினர் பங்கு கொண்டனர்.
‌தொடர்ந்து பேசிய மாலாலா தனது உரையில் தீவீரவாதத்திற்கு எதிரான கருத்துக்களை காந்தி, அன்னை தெரசா ஆகியோரிடமிருந்து கற்றுகொண்டதாக கூறினார்.


இந்திய பெண் குழந்தைகள் தேர்வு:

உ.பி., மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள நங்லகும்பா கிராமத்தை சேர்ந்தவர் பெர்மான் இவரது மகள் ரஷியாசுல்தான்(15). சிறுவயது முதல் கால்பந்து தயாரி்க்கும் ‌தொழிலை செய்துவந்தார். பின்னர் தன்னார்வ தொண்டு நிறுவனம மூலம் கல்வி கற்க துவங்கினார். அதனை தொடர்ந்து தனது முயற்சியால் ‌48 குழந்தை தொழிலாளர்களை கல்வி கற்க உதவி செய்துள்ளார். இதற்காக அவர் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்வதற்காக நேபாளம் உட்பட பல்வேறு இடங்களில் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான பிரசாரத்தை நடத்தியுள்ளார்.


பெங்களூர் பெண் தேர்வு:

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பார்வையற்ற மாணவி அஸ்வினி (21) பெண் குழந்தைகளி்ன் கல்விக்காக விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் தற்போது லி‌யோனார்டு செசையர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பெண்கள் கல்வி மேம்பாட்டிற்கு உதவி செய்துவருகிறார்.


உலக பெண் குழந்தைகள் தேர்வு :

அ‌தே‌‌போல் நேபாளத்தை சேர்ந்த ஊர்மிளா என்ற பெண் சிறு வயதில் குழந்தைதொழிலாளியாக தந்தை மூலம் விற்கப்பட்டார். இவர் 12 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி பெண்கல்விக்காக தீவிர பிரசாரம் செய்து வருகிறார். வங்க தேசத்தை சேர்ந்த கேசாப் (18). இவர் பெண் குழந்தையின் திருமணத்திற்கு எதிராக போராடியதற்காக இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் மலாலா மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது அவருக்கு அருகில் இருந்த அவரது நண்பி ஷஷியாவும் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவர்களை அடுத்து ‌மொராக்கோ நாட்டை சேர்ந்த ரவுயா, சியாராலியோனே நாட்டை சேர்‌நத அமினாடா, ஆகியோரும் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இளங்கோ - chennai,இந்தியா
15-ஜூலை-201300:13:54 IST Report Abuse
இளங்கோ அனைவருக்கும் வாழ்த்துக்கள்.பெண் சுதந்திரம் என்று சொல்ல தேவையில்லை.ஆண், பெண் என்று பிரித்து பார்கவும் வேண்டாம். இந்த சமுதாயத்தில் பெண்களின் பங்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை.தரமான கல்விக்கு பாடுபடும் இவர்கள் செயல் பாராட்டுக்குரியது.
Rate this:
Share this comment
Cancel
rajasekar - abbasiya,குவைத்
14-ஜூலை-201312:25:20 IST Report Abuse
rajasekar மாலாலா இந்த சின்ன வதிலே சரித்திரத்தில் இடம்பிடித்துவிட்டால்.. மலாலாவின் தந்தையிடம் பிள்ளைகளை எப்படி வர்க்கவேண்டும்னு கத்துகொங்கள் இந்திய பெற்றோர்களே.. 10 வதிற்குள் மொபைல் போன்..ipod ..boy fri ..girl .. fri .. எழுந்ததிலிருந்து துங்கும் வரை ஆட்டம் பாட்டம்.. சினிமா காதல் ...டிவி மோகம்..ஸ்டார் சிங்கர்..ஸ்டார் டான்சர் ...ஒரு வீணாப்போன நடிகன்கிட்ட பரிசுவன்குரதுதான் லட்சியம்னு பிள்ளைகளா வளர்க்காமல் சமூக பொறுப்பை ..அதன் முக்கியத்துவத்தை சொல்லி வார்க்கவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
14-ஜூலை-201310:13:56 IST Report Abuse
சு கனகராஜ் விருதுக்கு தேர்வு செய்த அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்கள் சாதனை தொடரட்டும்
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
14-ஜூலை-201308:38:00 IST Report Abuse
kumaresan.m " இவர்களின் செயல்பாடுகள் பிறரையும் ஈடுபட தூண்டுகிறது .....இது போன்ற இளைய தலைமுறைகள் நம் உலகத்திற்கு தேவை என்று சொன்னால் மிகையல்ல "
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
14-ஜூலை-201308:36:28 IST Report Abuse
kumaresan.m " விருது பெறப்போகும் இளம் வயது சாதனையாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .....உங்களின் முயற்சி மென்மேலும் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்
Rate this:
Share this comment
Cancel
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
14-ஜூலை-201308:17:02 IST Report Abuse
R.BALAMURUGESAN ...மலாலாவுக்கும் மற்றும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மற்ற பெண்களுக்கும் வாழ்த்துக்கள் பல...
Rate this:
Share this comment
Cancel
LOTUS - CHENNAI,இந்தியா
14-ஜூலை-201307:44:55 IST Report Abuse
LOTUS பழமைவாதிகளின் நெற்றியில் அறையப்பட்ட ஆணி.....அதன் பெயர்... மலாலா ........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்