Shocker: Over 200% rise in women murders in Mumbai in a year | பெண்கள் கொலை பல மடங்கு அதிகரிப்பு ; சந்தேகம்- கள்ள உறவு- மேலான காரணம் | Dinamalar
Advertisement
பெண்கள் கொலை பல மடங்கு அதிகரிப்பு ; சந்தேகம்- கள்ள உறவு- மேலான காரணம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மும்பை: மகாராஷ்ட்டிர மாநிலம் மும்பை நகர் பகுதியில் பெண்கள் கொலை செய்யப்படுவது ஆண்டுக்கு 3 மடங்காக உயர்ந்து வருவதாக போலீஸ் விவர அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2011ல் 9 பேர் கொலை 2012 ல் 30 பேராக உயர்ந்திருக்கிறது. 2008 முதல் 2013 வரை 81 பெண்களும், 66 குழந்தைகளும், 992 ஆண்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் மே மாதம் வரை 17 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இது போன்ற கொலைகள் கள்ள உறவு மற்றும் காதல் ஏமாற்றம் உள்ளிட்ட காரணமே முன் வரிசையில் நிற்கிறது. மகாராஷ்ட்டிர மாநிலத்தில் கொலைகள் நாளுக்குநாள் பல மடங்காக பெருகி வருவதாக தேசிய குற்றப்பதிவு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த அலுவலக ஆவணப்படி மாநிலத்தில் சராசரியாக மொத்தம் 83 பெண் மற்றும் குழந்தைகள் கொலை செய்ப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் மகாராஷட்டிரா டாப் லிஸ்டில் இருந்து வருகிறது. கடந்த 2008 முதல் 2012 வரை 5 ஆயிரத்து 158 பெண் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


பெரும்பாலான கொலைகள், சந்தேகம் , நம்பிக்கைக்கு கேடு, கள்ள உறவு, மற்றும் உறவு என்ற முறையில் ஏமாற்றுதல் ஆகிய பிரச்னைகளே முன்னோங்கி நிற்கிறது. என்று இது போன்ற பெண் கொலை காரணம் குறித்து ஆய்வு செய்த மனநல நிபுணர்கள், குற்றப்பிரிவு வல்லுனர்கள் மற்றும் புலனாய்வு துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஆண் நண்பரால் கொலை :சமீபத்தில் கூட ஜூலை 5 ம் தேதி கஞ்சுமார்க் என்ற பகுதியில் நள்ளிரவில் ஒரு குடும்ப பெண் பூஜா (வயது 19 ) அவரது ஆண் நண்பரால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்.


18 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்கள்: பெண்களுக்கு எதிராக இது போன்ற வன் செயல்கள் நடப்பது குறித்து ஆய்ந்து பார்த்ததில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களை அதிகம் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் பொறாமை முக்கிய இடம் பிடித்துள்ளது. 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கொலை செய்யப்படுவது சொத்து பிரச்னைக்காகவே இருக்கிறது. இதனை மாநகர குற்றப்பிரிவு கமிஷனர் ஹிமன்சுராய் ஆமோதிக்கிறார்,


சமீபத்திய புள்ளிவிவர அறிக்கையின்படி ; 2008 முதல் 2012 வரை 2 ஆயிரத்து 614 கொலை, இதில் 17 முதல் 30 வயது வரையிலான பெண்கள் ஆவர், 30 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் கொலை வழக்கு ஆயிரத்து 541, இது போல் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொலையானது தொடர்பான வழக்குகள் 700 .


இளம் பெண்கள் எதனையும் எதிர்த்து போராடும் எண்ணம், அநீதியை கண்டு வெகுண்டு எழுதல் மனம் கொண்டவர்களாக இருப்பதால் இது போன்ற வன்செயல்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும், இது போல் பெண்கள் எல்லா வயது காலங்களிலும் ஏதேனும் ஒரு பிரச்னையால் வன் செயல்களை சந்திக்க வேண்டியுள்ளது என்றும் பிரபல மன நல நிபுணர் டாக்டர் ஹரீஸ் ஷெட்டி கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில், இளம் வயதினர் இடையே உறவுகள் புளித்து போகும் போது இது போன்ற குற்றச்செயல்கள் எழுகிறது. என்றும் சொல்கிறார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan, Panagudi - Muscut,ஓமன்
14-ஜூலை-201317:28:55 IST Report Abuse
Nagarajan, Panagudi கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கைமுறையும் , பின்பற்றாத மதகோட்படுகளாலும் மனித சமுதாயம் நாகரிகம் என்ற பெயரில் முறையற்ற வாழ்க்கையை வாழ்வதானாலும் ,அரசின் மக்கள் விரோத போக்கினாலும் / அடக்கு முறையாலும் / மனித இனம் குற்றங்களை செய்ய துணிகிறது .பெருநகர வளர்ச்சிக்கு மத்திய /மாநில அரசு எல்லா துறையிலும் தொழில் வளர்ச்சிக்கென புதிய திட்டங்கள் செயல்படுத்தியது. நகர்புற கேளிக்கையிற்காக பல்வேறு வகையில் அரசுக்கு வருமானம் வரும் வகையில் ஹோட்டல் ,ரெசார்ட் , கேளிக்கை விடுதிகள் மற்றும் மது விடுதிகள் போன்று எல்லாவற்றையும் திறந்த அரசாங்கம் ,பெரு நகர வளர்ச்சியின் அங்கமான நகர்புறத்தில் ஏற்கனவே நடைபெற்ற பாலியல் தொழிலை ஒழிக்க முயன்றதினாலும் / ஒழித்ததாலும் நகர்புறத்தில் வாழும் குடும்ப பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை அரசு மற்றும் காவல்துறை ஏற்படுத்திவிட்டது. இத்தகைய சம்பவங்கள் குறைக்க ,பாலியல் குற்றங்கள் குறைய ,குடும்ப பெண்கள் பாதுகாப்போடும் , நிம்மதியாக குடும்பம் நடத்த , நகர்புறத்தின் வெளிபகுதியில் பாலியல் தொழிலின் விழிப்புணர்வோடு தொழிலுக்கு அரசு அனுமதி அளித்தால் பெண்கள் மீதான கொலை குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது .(உதாரனமாக 2009 முன்பு மகாராஸ்ட்ராவில் பெண்கள் மீதான தாக்குதல் / குற்றங்களுக்கான வழக்குகலை ............)
Rate this:
3 members
0 members
38 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-ஜூலை-201316:46:31 IST Report Abuse
Nallavan Nallavan தமிழ் சேனல்களில் வரும் காட்சிகளை மட்டும் பார்த்து விட்டு பொதுவாகவே தொலைக்காட்சித் தொடர்கள் வக்கிரமாக உள்ளன என்று கூறமுடியாது. ஹிந்தி சேனல்களின் தொடர்கள் அவ்வாறு இல்லை .... மிஞ்சிப் போனால் இரு மருமகள்களுக்குள் அரசியல், ஒருவரை ஒருவர் கவிழ்க்க சதி என்று மட்டும் வருகிறது.
Rate this:
7 members
2 members
6 members
Share this comment
Cancel
Ravikumar - Purwakartha,இந்தோனேசியா
14-ஜூலை-201315:20:15 IST Report Abuse
Ravikumar இதற்க்கு முக்கிய காரணம் சினிமா & TV இல் ஒளிபரப்ப படும் வக்கிர காட்சிகள்.
Rate this:
1 members
0 members
21 members
Share this comment
Cancel
Balasubramanian Ramamoorthy - Mumbai,இந்தியா
14-ஜூலை-201314:54:36 IST Report Abuse
Balasubramanian Ramamoorthy உலகத்துல மது மாது மோகத்தால் கொலைகள் நடக்கும் நாடு இந்தியாவே ஏன்னா இந்தியாவை தவிர நிறைய நாடுகளில் செக்ஸ் காதல் மது மாது குடும்ப உணர்வுகள் எல்லாம் சும்மா சம்பிரதாயமே நமது நாட்டில் எப்போது நிறைய எதிர்பார்ப்புகளும் வெளிநாட்டு மோகமும் பாழாப்போன தொலைகாட்சி செரியால்களும் வந்ததோ அன்றே அழிந்தது கலாச்சாரம். ஆகையால் இதற்க்கு ஒரே தீர்வு எல்லா கட்டுபாடுகளும் நீக்கப்படவேண்டும் செக்ஸ் கல்வி பரப்பனும். மது கடைகள் திறந்தா மாதிரி prostitution அன்கீகாரிக்கபடவேண்டும் ஏதோ சிலர் கூப்பாடு போடுவார்கள் கூடங்குலத்தையும் வால்மர்டையும் கூட எதிர்பவர்கள் தான் நம் இந்தியர்கள் எப்போது நீதி மன்றம் குஷ்பூ சொன்ன கருத்தை அங்கீகரித்ததோ அன்றே எல்லாம் நலம் அதையே எல்லோரும் கடைபிடித்தால் கற்பழிப்பு கொலை சந்தேகம் ஏமாற்றுதல் எல்லாம் காணாமல் போய்டும் கற்காலத்தில் கூட மனிதனுக்கு பலபேருடன் உறவுகள் இருந்துள்ளது அப்போது கொலை நடக்கலை இப்போது ஒரு பெண்ணை சுற்றி பல ஆண்களும் அவர்கள் வாழும் சுற்றுசூழ்நிளையும் மாறுபடும்போது எல்லாம் சர்வ சாதரணமே ஒன்று இந்தியனா இருக்கணும் இல்லை அந்நியனா இருக்கணும் சும்மா இரண்டுக்கும் நடுவே நின்றால் காலி ஒன்றை மறைக்கும்போது திரையை விளக்கி பார்க்க தோன்றும் அதையே திறந்து காட்டும்போது சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று தோன்றும் சும்மா டாஸ்மாக் பற்றி குறைகூறுவதை நிறுத்தனும் அதனால் ஒரு கள்ளசாராய அரக்கன் அழிக்கபட்டான் சாவுகள் குறைந்தது அரசுக்கு வரவேண்டிய வருமானம் திரைக்கு பின்னால் சென்றது நின்றது பல முதலிகள் முழிபிதுங்கி நின்றது ஜெயாவின் அருமையான மூவ் ஒரு மாநில அரசே மத்திய அரசுக்கு சவாலாக நிதித்துறையில் சிறந்து விளங்க கைகொடுத்தது யோசியுங்கள்
Rate this:
4 members
1 members
9 members
Share this comment
Cancel
kalainathan - pioneer pongalur  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூலை-201314:36:25 IST Report Abuse
kalainathan கொலையில் எதாவது ஒரு வகையில் மது இப்போது வலுவாக எகிறிவிட்டது மதுவே மங்கையர் கொலையில் முதலிடம் வகிக்கும்
Rate this:
1 members
0 members
9 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
14-ஜூலை-201312:26:39 IST Report Abuse
kumaresan.m " இந்தியாவில் உள்ள ஆண்களின் எண்ண கண்ணோட்டத்தில் பெண்ணை போதை பொருளாக பார்ப்பதால் ஏற்படும் விளைவு ......பெண்ணை மதிக்க கற்று கொண்டால் இது போன்ற பிரச்சினைகள் முடிவுக்கு வந்து விடும் "
Rate this:
15 members
0 members
55 members
Share this comment
Cancel
Vaidyanathan - chennai  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூலை-201311:55:19 IST Report Abuse
Vaidyanathan என் தாழ்மையான கருத்து தொலைக்காட்சிகளில்வரும் வக்கீரம் கலந்த நெடுந்தொடர்களே
Rate this:
3 members
0 members
49 members
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
14-ஜூலை-201311:41:25 IST Report Abuse
Ashok ,India தமிழகத்தில் நடக்கும் பெரும்பால பெண்கள் கொலைக்கு மதுவே காரணம் . அதிகமான மது அருந்தி விட்டு இறைச்சி உண்பதால் கொழுப்பு உடலில் சேர்ந்து கொள்கிறது. இதனால் செக்ஸ் ஈடுபாடு குறைந்து ஆண்மை இல்லாத ஆண்களால் தங்கள் மனைவியை எப்போதும் சந்தேகம் கொண்டு தொல்லை தருவதால் கொலையில் முடிகின்றது வாழ்க்கை. அரசு ஒரு பக்கம் இலவச தாலி வழங்கினாலும் மறு பக்கம் தாலி இல்லாத பெண்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அரசுக்கு வருமானம் பார்க்க இயற்கை வளங்கள் பல கோடி கணக்கில் இருக்க பல குடும்பங்களை அழித்து வருமானம் பார்க்க வேண்டுமா?? .
Rate this:
15 members
0 members
183 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூலை-201311:21:00 IST Report Abuse
Srinivasan Kannaiya கள்ள உறவு மற்றும் காதல் ஏமாற்றம் போன்றவைகள் சரியான வளர்ப்பு இல்லாததால் தான் ஏற்படுகிறது.. சுதந்திரம் என்ற பெயரில் வாழ்க்கையை சீரழித்து கொள்ளுகிறார்கள்..பெற்றோர்களே கவனமாக இருங்கள்..
Rate this:
1 members
2 members
58 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்