Narendra Modi address students of Pune on Sunday | இளைஞர்களின் குரலையே பிரதிபலிக்கிறேன்: மோடி பேச்சு| Dinamalar

இளைஞர்களின் குரலையே பிரதிபலிக்கிறேன்: மோடி பேச்சு

Updated : ஜூலை 14, 2013 | Added : ஜூலை 14, 2013 | கருத்துகள் (59)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
Narendra Modi address students of Pune on Sunday

புனே: இளைஞர்களின் குரலையே பிரதிபலிக்கிறேன், அவர்களின் கனவுகளையே நான் பேசுகிறேன். இளைஞர்களின் சக்தி மேம்படுத்தப்பட வேண்டும் , சீனாவை போல் கல்வியில் புரட்சி ஏற்படுத்த வேண்டும், இதற்கான தரமான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று புனேயில் கல்லூரி மாணவர்கள் இடையே பேசிய மோடி தெரிவித்தார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஃபெர்குசன் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசினார் அப்போது அவர் கூறியதாவது;
சமூக வலைதளங்கள் :

சுந்திர போராட்ட காலத்தில் இந்த கல்லூரி மாணவர்களின் பங்கு மறக்க முடியாதது. காரணம் ,சுந்திர போராட்ட வீரர் வீர்சவார்கர் இந்த கல்லூரியில் தான் படித்தார். அவர் படித்த இக்கல்லூரியில் பேசும் அரிய வாய்ப்பை நான பெற்றுள்ளேன். இன்றைய இளைஞர்களை ஒன்றிணைக்க சமூக வலைதளங்கள் தான் முக்கிய காரணி,அதனை நான் தீவிரமாக செயல்படுத்தி வருகிறேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை இதனை நான் தொடர்பு வைத்துள்ளேன்.
இக்கல்லூரிக்கு நான் வருகை தரும் முன்பு பேஸ் புக் வாயிலாக தான் மாணவர்களிடம் தொடர்பு கொண்டேன். தினமும் எனக்கு 2500 ‌இளைஞர்கள் , ஆலோசனைகளை சமூக வலைதளம் மூலம் வழங்கி வருகின்றனர். இளைஞர்களின் கருத்துக்களுக்கு நான் முன்னுரிமை ‌கொடுக்கிறேன். அவர்களின் கருத்துக்களை பிரதிபலிக்கிறேன். இதனை நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் ஆலோசனை கேட்டறிகிறேன். சமூகவலைதளம் இன்று முக்கிய பங்காற்றுகிறது. இளைஞர்கள் தான் இந்த நாட்டின் வருங்கால சக்தி. இந்த உலகில் எதையும் சாதிக்க கூடிய திறமை இளைஞர்களிடம் தான் உள்ளது.
நமது தலைவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டுள்ளனர். இந்த நாட்டு இளைஞர்கள் நாட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என நினைக்கின்றனர். கல்வி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கும் கருவிகளாக மாறி விட்டன. மனிதர்களை உருவாக்கும் எண்ணம் இல்லை. நான் இன்று அரசியல் எதுவும் பேச விரும்வில்லை.
சீனாவின் கல்வி கொள்கைக்கு பாராட்டு

: சீன கல்வி மிகச்சிறந்ததாக உள்ளது. சீனா கடந்த 10 ஆண்டுகளில் கல்வி முறையை மாற்றியுள்ளது. சீனா தனது நாட்டின் சீரமைக்கும் வழியை பார்க்க வேண்டும். ஆங்கில மொழி அறிவை வளர்க்க வழி செய்கின்றனர். கல்வி முன்னேற்ற கொள்கையில் நாம் சீனாவை பின்பற்ற வேண்டும். நாம் இந்தியாவை 21 ம் நூற்றாண்டை வழி நடத்தி செல்ல வேண்டும். நாம் சுதந்திரம் அடைந்தது முதல் இன்னும் கல்வியில் பெரும் மாற்றத்தை கொண்டு வரவில்லை. மருத்துவ படிப்பிற்கு நமது குழந்தைகள் வெளிநாடுகள் செல்ல வேண்டியுள்ளது. மொத்த பொருளாதார உற்பத்தியில் 25 சதம் கல்விக்கானதாக இருக்க வேண்டும். நமது கொள்கைகள் சரியில்லை. பழங்கால கல்வி முறை மாற வேண்டும்.தென்கொரியாவை பாருங்கள் :

மிகச்சிறிய நாடான தென்கொரியா உலக அளவில்சிறந்து விளங்குகிறது. அந்நாடு ஒலிம்பிக் போட்டியை சிறப்பாக நடத்தி புகழை தட்டிச்சென்றது. ஆனால் நாம் காமன் வெல்த் விளையாட்டு போட்டி நடத்தி கேவலத்திற்குள்ளானோம். இந்தியாவை முன்னேற்ற வேண்டும். நமக்கு சரியான வழிமுறைகள் வேண்டும். பார்மஸி செக்டர் குஜராத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அமைந்து விட்டது. இந்தியா ஆயுதங்களுக்கு அதிகம் செலவழிக்கிறது. வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை விட அதிகம். இந்தியா அண்டைய நாடுகளுடன் நட்புறவில் இல்லை.

சுற்றுலாத்துறை மிக பலம் வாய்ந்தது. ஆனால் இந்தியாவில் இது முன்னேற்றம் காணவில்லை. ஆய்வுகள், கண்டுபிடிப்புகள், புதுபடைப்புகள், போன்றவற்றுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. புதுமைகள் கண்டுபிடிக்கப்பட்டால் விவசாயத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல முடியும். ஆனால் இது குறித்து யாரும் கவலைப்படவில்லை.

கடல் சார்ந்த படிப்புகள் :

கடல் மற்றும் துறைமுகம் சார்ந்த படிப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் 3 ல் இரண்டு பங்கு கடல் பகுதிகள் ஆனால் சிங்கப்பூர் சிறிய கடல் பகுதியை கொண்டு மிகுந்த கடல்வழி வர்த்தகம் செய்கிறது. சிறந்த கல்வியும், சிறந்த கல்வியாளர்களும் தேவை, நமது பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளிடம் இருந்து நல்ல கல்வியை எதிர்பார்க்கின்றனர். நமது நாட்டுக்கு அதிகம் டாக்டர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் நாம் அதிகம் டாக்டர்களை உருவாக்குவதில்லை, பலரும் அதிகாரத்திற்கு வர விரும்புகின்றனர். ஆனால் நான் அதிகாரமளிக்க விரும்புகிறேன். எதிர்மறை கருத்துக்களை நான் ஏற்க மாட்டேன். பாதுகாப்பு தொழில்நுட்ப படிப்பு இந்திய பாதுகாப்பு பல்கலை.,யில் இல்லை. பாதுகாப்பு துறையில் கடந்த 10 ஆண்டுகளாக உயர் பொறுப்பு நிரப்பப்படாமல் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா ஒரு பல்கலை., நிறுவியது. ஆனால் சீனா 32 பல்கலை., நிறுவியுள்ளது. மேற்கத்திய கலாச்சாரம் தேவையில்லை. நவீனமயமாதல் தான் வேண்டும்.


இவ்வாறு மோடி பேசினார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gopi - trichy  ( Posted via: Dinamalar Blackberry App )
15-ஜூலை-201300:42:37 IST Report Abuse
gopi i like this really super mr MODI
Rate this:
Share this comment
Cancel
Sham - Ct muththur,இந்தியா
14-ஜூலை-201319:47:39 IST Report Abuse
Sham பாரதத்தின் விடிவெள்ளி...இப்போது நம் தேசத்தின் ஒரே நம்பிக்கை நட்ச்சத்திரம்..திரு.மோடிஜி அவர்களுக்கு, நம் தேசத்தின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் விரும்பும்., தாய்த்திருநாட்டை உண்மையாக நேசிக்கும் இளைஞர்களோடு.., மற்றுமுள்ள அனைவருமே.... எந்த பாகுபாடும் பார்க்காமல்.. தோளோடு தோள்நின்று.... நம் தேசத்தை வளர்ச்சிப்பாதையில் முன்னெடுத்துச்செல்ல... நிச்சயம்., உறுதுணையாக இருப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை... மற்றபடி காழ்ப்புணர்ச்சியுடன், மதவெறிபிடித்த,தேசவிரோத இத்தாலி ஊழல் காங்கிரஸ் அடிமைகளின் வெற்றுக் கூச்சலையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை... வாய்மையே வெல்லும்.. ஜெய்ஹிந்த்..
Rate this:
Share this comment
Cancel
sairam - muscat,ஓமன்
14-ஜூலை-201319:46:46 IST Report Abuse
sairam vetti நமதை......... மோடியின் வளர்ச்சி பாதையில் இந்திய....
Rate this:
Share this comment
Cancel
ram prasad - Sri rangam,இந்தியா
14-ஜூலை-201317:24:23 IST Report Abuse
ram prasad அப்துல் கலாம் அறிவானவர் திறைமையானவர் அப்படிப்பட்டவரை பிரதமர் வேட்பளாராக ப ஜ க அறிவிக்க வேண்டியது தானே ரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கு அப்துல்கலாமை பயன்படுத்தும் பா ஜ க , அதிகாரம் உள்ள பதவிக்கு அவரை பயன் படுத்த தயங்குவது ஏன் ?
Rate this:
Share this comment
Subramanian S - Northampton, UK,இந்தியா
15-ஜூலை-201304:07:11 IST Report Abuse
Subramanian Sஒரு தலைவனுக்கு இருக்கும் தகுதியும் ஒரு அறிவியல் நிபுணருக்கு இருக்கும் தகுதியும் வேவேரானவை. தலைவன் வழிநடத்தி செல்பவன்...
Rate this:
Share this comment
Cancel
Pushparaj Ramakrishnan - Mannachanallur,இந்தியா
14-ஜூலை-201317:03:57 IST Report Abuse
Pushparaj Ramakrishnan இன்றைய இளைஞர்கள் உங்கள் தலைமையேற்க தயாராகவே உள்ளனர். மதசார்பின்மை பேசி பாரத்ததை படுகுழியில் தள்ளிய காங்கிரஸை வீட்டுக்கு அனுப்ப உங்கள் தலைமை அவசியம்.
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
14-ஜூலை-201317:42:26 IST Report Abuse
சு கனகராஜ் நாட்டை துண்டாட நினைப்பவர்களை ஓட ஓட விரட்டுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
bharath G - chennai,இந்தியா
14-ஜூலை-201316:52:12 IST Report Abuse
bharath G Narara modi ji, who always thinks about development of india and people. there may be several people still yelling at him. really i do not understand why, no one gives very good reason why they do not accept modi as prime minister of this country which means are they going to give another chance for congress to catch the rule again.if that happens. undoubtedly india will go down, he is not a secular kind of guy, what happened is happened leave the past. think for the future,definitely we must need people like narra modi to become PM, whether people like it or not . he always been a very different politician than others. think before e your vote. india needs to be developed. how long we will be in developing stage.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
14-ஜூலை-201316:51:15 IST Report Abuse
N.Purushothaman இன்றைய இளையவர்கள் ராகுல் பக்கம் நிற்ப்பதை விட மோடி பக்கமே நிற்கின்றனர்....
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
14-ஜூலை-201317:42:58 IST Report Abuse
சு கனகராஜ் மோடிக்கு ஆதரவு பெருகி கொண்டே இருக்கிறது...
Rate this:
Share this comment
Cancel
Z Y - mokkai,அர்ஜென்டீனா
14-ஜூலை-201316:45:24 IST Report Abuse
Z Y ஏலே எப்படி எல்லாம் தடுமாறுகிறான் பாரு
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
14-ஜூலை-201317:43:35 IST Report Abuse
சு கனகராஜ் ஊழல்வாதிகள்தான் எங்கே மோடி தங்களுக்கு இடைஞ்சலாய் வந்து விடுவாரோ என்று எண்ணி எதிரிகின்றனர்...
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
14-ஜூலை-201316:33:59 IST Report Abuse
Skv நம்பால் தமிழ்நாட்டிலே பல இளையோர்களை c /o டாஸ்மாக் நு சொல்லவச்ச தலைவன் தலைவிய விட 100$ மோடி பெஸ்ட் . நானு இன்று தவளே இவர் பெச்சூம் கேட்டேன் மாயாவதியின் பேச்சும் கேட்டேன் , மாயாவின் பேச்சு ந.1 அபத்தம் , மோடி பேச்சு நல்லாவே இருந்துச்சு அனாவசியமா ஒண்ணுமே பேசலே
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
14-ஜூலை-201317:44:57 IST Report Abuse
சு கனகராஜ் மோடியை குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது ...
Rate this:
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
14-ஜூலை-201316:15:27 IST Report Abuse
JALRA JAYRAMAN சீனாவை உதாரணம் காட்டுகிறார், அது கம்யூனிஸ்ட் நாடு எதிர்த்து கேள்வி கேட்பவர் நிலை என்ன என்று இவருக்கு தெரியாதா, இங்கு உயர் நீதி மன்றம், உச்ச நீதிமன்றம், எதிர்கட்சிகள், மனித உரிமை, சுற்றுசூழல் எல்லாவற்றையும் தாண்டி தான் திட்டங்களை அமல்படுத்த வேண்டி உள்ளது, அதனால் COST ESCLATE ஆகிறது, ஜனநாய நாடுகளை உதாரணம் காட்டுங்கள்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை