சிக்கன் வாங்கலியோ., சிக்கன் ., மம்தா புறப்பட்டார்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோல்கட்டா: தமிழக முதல்வர் ஜெ., மலிவு விலை உணவகம் துவக்கி நடத்தி வருகிறார். மேலும் குடி தண்ணீரும் விற்க திட்டமிட்டுள்ளார். இது போல மேலே ஒரு படி போய் உடலுக்கு சத்து தரும் சிக்கன், மீன் மற்றும் காய்கறிகளை விற்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெ., மலிவு விலையில் இட்லி, சாம்பார் சாதம், தயிர்சாதம் விற்கும் திட்டத்தை துவக்கியதில் ஏழை மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இது போல் மக்களை கவர மேற்கு வங்க முதல்வர் மம்தா திட்டமிட்டுள்ளார். இதன்படி மொபைல் வேன் மூலம் சிக்கன், மீன்,காய்கறிகள் விற்க திட்டமிட்டுள்ளார். முதல்கட்டமாக வரும் ரமலான் தினத்தன்று, கோல்கட்டா மாநகரில் விற்கப்படுகிறது. சந்தை விலையை விட 20 முதல் 25 சதவீதம் குறைத்து விற்க முடிவு செய்துள்ளார். இம்முயற்சிக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கும் பட்சத்தில் மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவு படுத்த முடிவு செய்துள்ளதாக அவரது அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் வரவேற்றாலும், இங்குள்ள வர்த்தகர்கள் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.


இலவசம் லஞ்சமா? தேர்தல் கமிஷன் ஆலோசனை ; இதற்கிடையில் தேர்தல் வாக்குறுதியில் இலவசங்களை அறிவிப்பதை கட்சிகளை கட்டுப்படுத்தும் விதிமுறைகளை தேர்தல் கமிஷன் வகுக்க வேண்டும் என கடந்த 5-ம் தேதி சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் நடக்க உள்ள சர்வ கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நகலை அனுப்பி அழைப்பு விடுக்க உள்ளது.

இதில் தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளிடம் , கருத்துக்களை கேட்டு, அதன்படி இலவச அறிவிப்புகள் குறித்த விதிமுறைகளை எவ்வாறு வகுக்க வேண்டும் என தீர்மானிக்க உள்ளதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டு இறுதியில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களும், 2014-ல் பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதால் கட்சியின் இலவச திட்டங்களை நெறிமுறைப்படுத்த தேர்தல் கமிஷன் தீவிரம் காட்டி வருகிறது. இதில் சில அரசியல் கட்சிகள் உடன்பட மறுப்பதாக தெரிகிறது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan.m - hochimin ,வியட்னாம்
14-ஜூலை-201319:47:43 IST Report Abuse
kumaresan.m " இது போன்ற நல்ல விசயங்களை மத்திய அரசும் செய்தால் மக்களுக்கு ஆகும் செலவுகள் குறையும் அல்லவா ???
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூலை-201317:25:26 IST Report Abuse
Srinivasan Kannaiya ஜெயலலிதா மாதிரி இதை எல்லாம் இலவசமாக கொடுத்து பெரிய பலூன் ஊதலாமே.. பின்னால் ஆட்ச்சிக்கு வரவன் எக்கேடோ கெட்டு போறான் ..
Rate this:
Share this comment
Cancel
Rama Ram - singapore,சிங்கப்பூர்
14-ஜூலை-201317:10:37 IST Report Abuse
Rama Ram இந்தியா அம்மாவை பாலோ பன்னுது
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-ஜூலை-201316:59:39 IST Report Abuse
Nallavan Nallavan Babe, this chick is very tasty
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
14-ஜூலை-201316:51:36 IST Report Abuse
சு கனகராஜ் அம்மான்னா சும்மா இல்ல டா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்