Pakistan President Asif Ali Zardari may leave country after completing term | பதவி காலம் நிறைவுக்கு பின் நாட்டை விட்டு வெளியேற சர்தாரி முடிவு| Dinamalar

பதவி காலம் நிறைவுக்கு பின் நாட்டை விட்டு வெளியேற சர்தாரி முடிவு

Updated : ஜூலை 14, 2013 | Added : ஜூலை 14, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 பதவி காலம் நிறைவுக்கு பின் நாட்டை  விட்டு வெளியேற சர்தாரி முடிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் சர்தாரி பதவி காலம் முடிந்த பின்னர் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் நாட்டிற்கு பொதுத்தேர்தல் கடந்த மே மாதம் நடந்தது. இதி்ல் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி பெரும்பான்மை பெற்றது.மீண்டும் பிரதமராக அக்கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப் ‌பதவியேற்றார்.
ஊழல் வழக்குகள் நிலுவை
இத்தேர்தலில் அதிபர் சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி படுதோல்வியடைந்தது. எனினும் தற்போது நாட்டின் அதிபராக சர்தாரி உள்ளார். இவரது பதவி காலம் செப்டம்பர் 8-ம் தேதியுடன் நிறைவடைகிறது.இதையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது நெருக்கமான சட்ட வல்லுனர்கள் சில ஆலோசனை வழங்கியுள்ளனர். இது தொடர்பாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் கூறுகையில், சர்தாரி மீது சுவிட்சர்லாந்தில் நடந்த ஊழல் வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்குகளை விசாரிக்க உத்தரவிடாத அவரது ஆதரவு கட்சியின் பிரதமர்கள் அனைவரும் சுப்ரீம்‌ கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவரது உயிருக்கு பயங்கரவாதிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அவரது தலைமை பாதுகாப்பு அதிகாரி பிலால் ஷேக், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதே‌ போன்று தான் கராச்சியில் கடந்த 2008-ம் ஆண்டு மற்றும் 2011-ம் ஆண்டுகளில் முறையே காலித் ஷாஹன்ஷா, இம்ரான் ஜாங்கி ஆகிய அவரது ‌தலைமை அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நாட்டை விட்டு வெளியேற முடிவு
இதனால் வரும் செப்டம்பர் 8-ம் தேதியுடன் அதிபர் பதவி காலம் நிறைவடைவதால் ,ஓய்வுக்கு பின்னர் சர்தாரி நாட்டை விட்டு வெளியேறுவது அவருக்கு நல்லது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனவே பதவி காலம் நிறைவடைந்த பின்னர் சொந்த நாட்டிலேயே பிரச்னைகளை எதிர்கொள்வதை விட நாட்டை விட்டு வெளியேறுவது தான் நல்லது எனவும் சர்தாரி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vasu Murari - Chennai ,இந்தியா
15-ஜூலை-201304:45:25 IST Report Abuse
Vasu Murari பாகிஸ்தானில் சட்டம் மற்றும் நீதி அவ்வளவு பலகீனமானதா? ஊழல் புரிந்த நாட்டின் ஒரு தலைவரை அவரது பதவிக் காலம் முடிந்தவுடன் நாட்டை விட்டு ஓடிவிட சட்டம் வழிவகுக்குகிறதா? அப்போ அது ரொம்ப மோசமான நாடுதான் சாமி.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூலை-201319:38:13 IST Report Abuse
Srinivasan Kannaiya போனால் திரும்பி வராதீர்கள்... வந்தால் முஷாரப்பின் கதிதான் உங்களுக்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை