குமரி புத்தக கண்காட்சியில் அரிய தகவல்களுடன்இடம்பெறும் லட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள்: சிறப்பு பஸ் வசதிக்கும் ஏற்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குமரி புத்தக கண்காட்சியில் அரிய தகவல்களுடன்இடம்பெறும் லட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள்: சிறப்பு பஸ் வசதிக்கும் ஏற்பாடு

Added : ஜூலை 18, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

நாகர்கோவில்:நாகர்கோவிலில் நாளை துவங்கும் புத்தக திருவிழாவில் பல அரிய தகவல்களுடன் லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெறுகின்றன. புத்தக கண்காட்சியை கண்டுகழிக்க சிறப்பு பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கன்னியாகுமரி புத்தக திருவிழா நாளை துவங்கி வருகிற 28ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 5 மணிக்கு புத்தக திருவிழா துவக்கவிழா நடக்கிறது. விழாவிற்கு குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் தலைமை வகிக்கிறார். நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா இயக்குனர் சிக்கந்தர் வரவேற்று பேசுகிறார். அதன் தலைவர் சேதுமாதவன் விளக்கவுரை ஆற்றுகிறார். புத்தக அரங்கினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வைகைச்செல்வன் திறந்து வைக்கிறார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பச்சைமால் புத்தக திருவிழாவை துவக்கி வைக்கிறார். தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கும் புத்தக திருவிழாவில் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை கலை நிகழ்ச்சிகளும், 6 மணி முதல் 8 மணி வரை பிரபல கவிஞர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கும் சொல் அரங்கம் நடக்கிறது. புத்தக திருவிழாவில் பல அரிய வகை புத்தகங்களுடன் லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெறவுள்ளன.புத்தக திருவிழாவிற்காக நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் பிரமாண்ட அரங்கினை குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; புத்தக கண்காட்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பயனடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தக பிரியர்களின் வசதிக்காக ஐ.ஓ.பி. சார்பில் மொபைல் ஏ.டி.எம். வசதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 130 புத்தக ஸ்டால்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தின் அனைத்து பகுதியினரும் புத்தக திருவிழாவிற்கு வந்து செல்லும் வகையில் சிறப்பு பஸ் வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன பார்க்கிங் வசதியும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் கண்டுகழிக்கும் வகையில் 28 ஆயிரம் சதுர அடியில் புத்தக கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. புத்தக திருவிழாவிற்கு நுழைவு கட்டணம் ஏதும் இல்லை. அனுமதி இலவசம். இந்த அரிய புத்தக கண்காட்சியை குமரி மாவட்ட மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார். ஆய்வின்போது பி.ஆர்.ஓ. ஹரிராம், மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X