ACTION TO STOP CORRUPTION IN TASMAC | தவறு செய்யும் "பார்' உரிமையாளர் மீது "குண்டாஸ்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தவறு செய்யும் "பார்' உரிமையாளர் மீது "குண்டாஸ்'

Updated : ஜூலை 22, 2013 | Added : ஜூலை 20, 2013 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தவறு செய்யும் "பார்' உரிமையாளர் மீது "குண்டாஸ்'

முதல் முறையாக, முறைகேடுகளில் ஈடுபடும், டாஸ்மாக் ஊழியர்களை சிறைக்கு அனுப்பவும், அனுமதி இன்றி செயல்படும், "பார்' உரிமையாளர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவும், டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள், விரைவில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில், 6,800க்கும் மேற்பட்ட, டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில், மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் என, 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், பணிபுரிந்து வருகின்றனர்.டாஸ்மாக் நிறுவனம், மேற்பார்வையாளரிடம், 50 ஆயிரம் ரூபாய், விற்பனையாளரிடம், 15 ஆயிரம் ரூபாய், உதவி விற்பனையாளரிடம், 10 ஆயிரம் ரூபாய் என, ஊழியர்களிடம் இருந்து, 80 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை, காப்பு தொகையாக வசூலித்து, வங்கியில் டிபாசிட் செய்துள்ளது. இந்த பணத்திற்கு, ஆண்டுக்கு, 6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.கடைகளில் பணிபுரியும் ஊழியர், "சரக்கின்' அளவு மற்றும் விற்பனையான பணத்தின் மதிப்பை குறைத்து காட்டுதல், கூடுதல் விலைக்கு மது வகைகளை விற்பனை செய்வது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக, தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து, டாஸ்மாக் கடைகளையும் ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கடைகள் ஆய்வின் போது, பணம் மற்றும் சரக்கின் இருப்பு, 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால், 21 சதவீத அபராத தொகை மற்றும் பணத்தை, 15 நாட்களுக்குள் திரும்ப செலுத்தினால், நடவடிக்கை இல்லை; 25 ஆயிரம் ரூபாய் வரை இருந்தால், 21 சதவீத அபராத தொகை, "சஸ்பெண்ட்' மற்றும் காப்பு தொகை பறிமுதல் போன்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இருப்பு தொகை, 50 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் இருந்தால், டிஸ்மிஸ், காப்பு தொகை பறிமுதல், காவல் துறை மூலம் நடவடிக்கை எடுத்து, சிறைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், மது வகைகள் மீது, ஐந்து முதல், 10 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்றால், ஆறு மாதங்களுக்கு, "சஸ்பெண்ட்' நடவடிக்கை, 10 ரூபாய்க்கு மேல் இருந்தால், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, விசாரணையில் புகார் உறுதியானால், "டிஸ்மிஸ்' நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, "பல முறை எச்சரித்தும், ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, சென்னையில் உள்ள கடைகளில், நிலுவை தொகை வசூலிக்கும் பணி துவங்கியுள்ளது. விரைவில், அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது' என்றார்.


"குண்டாஸ்' பாயும்:


மேலும், அந்த அதிகாரி கூறியதாவது:அனுமதி பெற்று நடந்து வரும் பார்களில், முறைகேடுகள் நடந்தால், பார்களின் உரிமம் ரத்து செய்யப்படும். உரிமம் இல்லாமல் செயல்படும் பார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, இந்த பார்கள், போலீஸ் துணையுடன்," சீல்' வைக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்படும். மூன்று முறைக்கு மேல், வழக்கு பதிவு செய்யப்படும், பார் உரிமையாளர்களை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, போலீசுக்கு சிபாரிசு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahesh Venkataseshan - Dar Es Salam,தான்சானியா
21-ஜூலை-201312:24:02 IST Report Abuse
Mahesh Venkataseshan ஆமா, பார் வைத்து நடத்துவது மட்டும் தவறு இல்லையா ? அப்போ அந்த குண்டாஸ் சட்டம் என்றால் என்ன ?
Rate this:
Share this comment
Cancel
unlocked - Chennai  ( Posted via: Dinamalar Android App )
21-ஜூலை-201309:47:02 IST Report Abuse
unlocked we are ready to pay govt. but not shop guy..extra 2-5 for quarter and 10 for beer.... let's see how govt officials take action....
Rate this:
Share this comment
Cancel
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
21-ஜூலை-201307:31:09 IST Report Abuse
பி.டி.முருகன்    சீக்கிரமாக இதை செய்யுங்க.அபோது மாத்திரமே குடிமகன்களை காப்பாற்ற முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X