Sri Lanka asks EU to help stop LTTE funding | புலிகளுக்கு நிதி கொடுப்பதை தடுக்க வேண்டும்: இலங்கை வலியுறுத்தல்| Dinamalar

புலிகளுக்கு நிதி கொடுப்பதை தடுக்க வேண்டும்: இலங்கை வலியுறுத்தல்

Added : ஜூலை 20, 2013 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 புலிகளுக்கு நிதி கொடுப்பதை தடுக்க வேண்டும்:  இலங்கை வலியுறுத்தல்

கொழும்பு:"விடுதலைப் புலிகள் அமைப்புக்கு, ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்கள் நிதி கொடுப்பதை தடுக்க வேண்டும்' என, ஐ.நா., பிரதிநிதிகளிடம், இலங்கை வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த, ஆறு உறுப்பினர் அடங்கிய குழு, இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் நடக்கும், நிவாரண பணிகளை ஆய்வு செய்வதற்காக வந்துள்ளது.

இந்த குழுவினரை சந்தித்து பேசிய பின், இலங்கை வெளியுறவு அமைச்சர், பெரீஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:இலங்கையில், போர் முடிவுக்கு வந்தபின், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், முழு வீச்சில் நிவாரண பணிகள் நடக்கின்றன. இவற்றை, ஐ.நா., குழு பார்வையிட்டது, எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.இலங்கைக்கு வெளியில், பல்வேறு நாடுகளில், விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் செயல்படுகின்றன. இந்த அமைப்புகள், விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நிதி கொடுக்கின்றன. இதை தடுக்க வேண்டும் என, ஐ.நா., அதிகாரிகளிடம், வலியுறுத்தினோம். இந்த அமைப்புகளின் ஆதரவு மூல, புலிகள் அமைப்பு, தொடர்ந்து தீவிரமாக செயல்படுகிறது.இவ்வாறு, பெரீஸ் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
maravan - dublin,அயர்லாந்து
04-செப்-201319:11:06 IST Report Abuse
maravan முதலில் தமிழர்களும் , சிங்களவர்களுக்கும் ஒரே சட்டம் போடுங்கள். சம உரிமை தாருங்கள்...
Rate this:
Share this comment
Cancel
D.V.நன்றுடையான் - mumbai,இந்தியா
04-செப்-201312:46:27 IST Report Abuse
D.V.நன்றுடையான் உங்களுக்கு எப்படி மற்ற நாடுகள் ஆதரவு கொடுகுதோ அதே மாதிரி புலிகளுக்கு அணைத்து மக்களும் ஆதரவு கொடுகிறார்கள் கொடுப்பார்கள் அது தான் ஞாயம்...
Rate this:
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
21-ஜூலை-201316:09:21 IST Report Abuse
விருமாண்டி இது எங்கள் நாட்டு பிரச்சனை அல்ல . இது உங்கள் பிரச்சனை .எங்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை தமிழர்களால் தான் தினமும் துன்பப்படுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X