கட்டிலில் இருந்து விழுந்த நடிகை மஞ்சுளா மரணம் : இன்று இறுதிச்சடங்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டிலில் இருந்து விழுந்த நடிகை மஞ்சுளா மரணம் : இன்று இறுதிச்சடங்கு

Added : ஜூலை 24, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கட்டிலில் இருந்து விழுந்த நடிகை மஞ்சுளா மரணம் : இன்று இறுதிச்சடங்கு

சென்னை: படுக்கை அறை கட்டிலிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை மஞ்சுளா, 59, நேற்று காலை இறந்தார். அவரது இறுதிச்சடங்கு, சென்னையில் இன்று நடக்கிறது. மஞ்சுளா, சென்னை, ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இவர், இரண்டு தினங்களுக்கு முன், படுக்கை அறை கட்டிலிலிருந்து கீழே விழுந்ததால் பலத்த காயமடைந்து, சென்னை, போரூரில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து, நடிகர் அருண் விஜய், நிருபர்களிடம் கூறுகையில், ""என் சித்தி மஞ்சுளா, கட்டிலில் இருந்து கீழே விழுந்ததால், கட்டில் கால் அவரது வயிற்றில் குத்தி பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். வயிற்றில் அடிபட்டதால் ரத்தம் உறைந்துள்ளது. அதை அகற்ற மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்,'' என்றார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மஞ்சுளா நேற்று காலை, 11:30 மணிக்கு இறந்தார். இவரது உடல் ஆலப்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு, நேற்று மதியம் கொண்டு வரப்பட்டது.
திரையுலகத்தினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். போரூரில் உள்ள மின்சார மயானத்தில் இன்று, இறுதிச்சடங்கு நடக்கிறது. தமிழ்ச் சினிமாவில், "சாந்தி நிலையம்' படம் மூலம் துணை நடிகையாக மஞ்சுளா அறிமுகமானார். சிறிய வேடங்களில் நடித்து வந்த அவர், எம்.ஜி.ஆருடன், "ரிக்ஷாக்காரன்' படத்தில் கதாநாயகியாக நடித்த பின், பட வாய்ப்புகள் குவிந்தன. 1970 - 80ம் ஆண்டுகளில், முன்னணி நடிகையாக கொடி கட்டிப் பறந்தார். இவர், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜயகுமாருக்கும், மஞ்சுளாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும், "அல்லி தர்பார்' உட்பட, சில படங்களில் நடித்துள்ளனர். நடிகர் விஜயகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி, மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், காதலுக்கு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். பின் சமாதானமாகி, மஞ்சுளாவை, விஜயகுமார் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுக்கு, அனிதா, கவிதா என்ற மகள்களும், அருண் விஜய் என்ற மகனும் உள்ளனர். விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிக்கு, வனிதா, ப்ரிதா, ஸ்ரீதேவி ஆகிய, மூன்று மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalainathan - kalugumalai  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-201306:49:49 IST Report Abuse
kalainathan பரிதாமாக உள்ளது ! கட்டிலை சோதனைக்கு உட்படுத்துங்கள்
Rate this:
Share this comment
Cancel
sathis_kk - Singapore,சிங்கப்பூர்
24-ஜூலை-201306:39:11 IST Report Abuse
sathis_kk கட்டில் கால் என்ன கத்தியலய செய்திருக்கிறார்கள்? கட்டிலில் இருந்து விழுபவர் எப்படி கட்டிலின் கால் மீது விழ முடியும். கட்டிலில் இருந்து தவறி விழும்போது கீழிருந்த கூர்மையான பொருள் குத்தியதால் காயம் ஏற்ப்பட்டது என்று சொனால் கூட நம்பலாம்.... எங்கோயோ இடிக்கிறதே ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X