E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மோடி பக்கம் சாய்கிறதா தி.மு.க.,: எம்.பி.,க்களுக்கு கருணாநிதி எச்சரிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

27 ஜூலை
2013
00:02
பதிவு செய்த நாள்
ஜூலை 25,2013 23:14

"குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்க நாட்டு விசா வழங்கக் கூடாது' என, அந்நாட்டு அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில், தி.மு.க., - எம்.பி.,க்கள் கையெழுத்திட்டிருப்பது, அக்கட்சிக்குள் சர்ச்சையை ஏற்பட்டுத்தியுள்ளது. "இக்கோரிக்கை கடிதத்தில், கையெழுத்திட்ட தி.மு.க., - எம்.பி.,க் கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, கட்சி தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.


மோடி குறித்து, கருணாநிதி எடுத்துள்ள இம்முடிவால், தி.மு.க.,வின் அரசியல் நிலை என்ன என்ற கேள்வியை, கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் எழுப்புகின்றனர்.


9 தமிழக எம்.பி.,க்கள்:



"நரேந்திர மோடிக்கு, அமெரிக்க விசா வழங்கக் கூடாது' என, 64 எம்.பி.,க்கள், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதியதாக, தகவல் வெளியாகியுள்ளது. இக்கடிதத்தில், தமிழக காங்கிரசை சேர்ந்த, மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், ராமசுப்பு; தி.மு.க.,வை சேர்ந்த கே.பி.ராமலிங்கம், தாமரை செல்வன், தங்கவேல், நடிகர் ரித்தீஷ், அசன் அலி ஜின்னா; இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி., அப்துல் ரகுமான்; விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., திருமாவளவன் ஆகிய, ஒன்பது தமிழக எம்.பி.,க்கள் கையெழுத்திட்டிருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க.,- எம்.பி.,க்கள், ""நாங்கள் கையெழுத்திடவில்லை. எங்களது, கையெழுத்து மாதிரிகளை, வெட்டி, ஒட்டி விட்டனர்,'' என, தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் எம்.பி., ராமசுப்பு, ""நரேந்திர மோடிக்கு எதிராக கையெழுத்திட்டது, என் தனிப்பட்ட விருப்பம்; இதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை.'' என, கூறியுள்ளார். திருமாளவனும், ரகுமான் கானும், ""மோடிக்கு எதி ராக கையெழுத்திட்டதில் தவறில்லை,'' என, நியாயப்படுத்திஉள்ளனர்.


மோடிக்கு ஆதரவா?



இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: "குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்க விசா அளிக்கக் கூடாது' என, இந்திய எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு, அந்நாட்டு அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இக்கடிதத்தில், தி.மு.க., - எம்.பி.,க்கள் கையெழுத்திட்டதாகவும் தெரிகிறது. இதுப்பற்றி, விசாரித்த போது, "கையெழுத்திடவில்லை' என, தி.மு.க., எம்.பி.,க்கள் மறுத்துள்ளனர். தி.மு.க.,வை பொறுத்தவரை, மத்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கையிலும் அதன் உள்விவகாரங்களிலும் குறுக்கிடுவதில்லை. அதேபோல, விசா பிரச்னையில் தலையிடுவதையும் தி.மு.க, ஏற்பதில்லை. நரேந்திர மோடிக்கு விசா அளிப்பது தொடர்பான பிரச்னையில், தி.மு.க., - எம்.பி.,க்கள் கையெழுத்திடுவதை கட்சித் தலைமை ஏற்கவில்லை. கட்சித் தலைமையை ஆலோசிக்காமல், எவரேனும் கையெழுத்திட்டிருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.


கருணாநிதியின் அறிக்கையால், மோடியை ஆதரிக்கும் முடிவை, தி.மு.க., எடுத்திருப்பதாக பேசப்படுகிறது. மேலும், மத்திய அரசின் வெளிநாட்டு கொள்கையில், தி.மு.க., குறுக்கிடுவதில்லை என, கருணாநிதி கூறியிருப்பது, ஈழத் தமிழர்கள் பிரச்னைக்கும் பொருந்துமா? அப்படியென்றால், ஈழத் தமிழர்களுக்காக, தி.மு.க., கொடுக்கும் குரல் உள்ளூர் அரசியலுக்கா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.


கட்டுப்படுத்தாது:



இதுபற்றி, தி.மு.க.,செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., கூறியதாவது: நரேந்திர மோடி என்ற தனிப்பட்ட நபரின், செயல்பாடுகளை எதிர்ப்பது தி.மு.க.,வின் வேலையல்ல. அவரின் கொள்கைகள், சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை கடுமையாக எதிர்கிறோம். விசா போன்ற வெளியுறவு கொள்கையை பற்றி தான், கட்சித் தலைவர் கருணாநிதி கருத்துக் கூறியுள்ளாரே தவிர, அதற்கு வேறு அர்த்தமில்லை. பார்லிமென்டில் எழுப்பப்படும் விவகாரங்கள் குறித்து, கட்சியின் பார்லிமென்ட் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் எம்.பி.,க்கள் ஆலோசித்து முடிவெடுப்போம். அதுபோன்ற முடிவு, மோடிக்கான விசா விவகாரத்தில் எழவில்லை. வேறு ஆவணங்களில் உள்ள தி.மு.க., எம்.பி.,க்களின் கையெழுத்தை வெட்டி, இந்த கடிதத்தில் ஒட்டியுள்ளனர் என்றே தெரிகிறது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி., அப்துல் ரகுமான், தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வென்றிருந்தாலும், எங்களைப் பொறுத்தவரை அவர், முஸ்லிம் லீக் எம்.பி., தான். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து, தி.மு.க., வெளியேறிய நிலையில், அக்கட்சி காங்கிரஸ் கூட்டணியில் தான் உள்ளது. எனவே, அப்துல் ரகுமான் கையெழுத்திட்டது, தி.மு.க., வை கட்டுப்படுத்தாது. இவ்வாறு, டி.கே.எஸ்எஸ். இளங்கோவன் கூறினார்.


- நமது சிறப்பு நிருபர் -






Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (27)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
27-ஜூலை-201304:46:40 IST Report Abuse
P. Kannan ஒரு சின்ன டெஸ்ட், காங்கிரஸ், நிலைமை எனக்கு சரியில்லை என்றால் என்னென்ன நடவடிக்கை எடுக்கும் என்று. அந்த இடைவெளியை சரிசெய்வதற்கு தான் இத்துணை அறிக்கை எல்லாம்.நான் தான் வரும் மக்களவை தேர்தலில் தமிழ் நாட்டில் அமையும் கூட்டணியின் தலைவன் என்பதை இன்னும் காங்கிரஸ் ஒத்துக்கொள்ளவில்லை. அதை உறுதி படுத்த எவ்வளவோ ஹோம் வொர்க் செய்ய வேண்டியுள்ளது. தமிழக மக்களுக்கும், இங்கு கருத்தை பதிவு செய்து கொள்பவர்களுக்கும் ஒன்றை தெளிவாக கூற விரும்புகிறேன் அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது நிரந்தர பகைவனும் கிடையாது. மற்றவையெல்லாம் தேர்தலுக்கு முன் கட்சியின் ஆட்சி மன்ற குழு, செயற்குழு , பொதுகுழு ,முக்கிய தலைவர்கள் எல்லாம் கூடி முடிவு செய்து கூட்டணி பற்றி முடிவு எடுக்க எனக்கு எல்லா அதிகாரமும் தருவார்கள். அரசியல் என்பது நீங்கள் நினைப்பது போல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவு செய்ய முடியாத ஒன்று. மோடிக்கு விசா வழங்குவது, வாங்குவது என்பது மோடியின் தனிப்பட்ட விஷயம். அதோடு இந்திய அரசு, அமெரிக்க அரசு முடிவு செய்ய வேண்டிய முக்கியமான கொள்கை முடிவு. அதில் திமுக எம்பிக்கள் நேரடியாக மூக்கை நுழைத்து இருந்தால் அது குற்றமே. அவர்கள் மீது கட்சி நடவடிக்கை இருக்கும். இலங்கை பிரச்சினை வேறு, திமுக, காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் பொழுதே இந்திய அரசு மனிதாப அடிப்படையிலும் , இலங்கையில் உள்ள நம் வம்ச வழியினர் , நலனை முன்னிட்டு அநேக நடவடிக்கைகளை எடுத்துள்ளது, தவறிய பட்ச்சத்தில், நானே முன்னின்று உலகே மறக்க முடியாத உண்ணாவிரதத்தை இந்த தள்ளாத வயதிலும் வெற்றிகரமாக நடத்தி வைத்தேன், யார் என்ன கூறினாலும் ஒரு அரசியல் வாதி என்ற முறையில் அகிம்சை வழியில் என் கருத்தை மக்கள் மன்றத்தில் நான் பதிவு செய்தது சரியே. தளபதி ஸ்டாலின் மூலமாக டெசோவில் ஈழ தமிழர்களின் நலனுக்காக போடப்பட்ட தீமானத்தை ஐநா சபை வரை கொண்டு சென்றோம். ஈழ பிரச்சினைக்காக காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வந்தோம். பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு என்று அண்ணா வழியில் நான் எப்போதும் கூறி வந்துள்ளேன். கட்சி என்பது வேறு அரசு என்பது வேறு. மக்கள் நன்மைக்காக இன்னொரு தேர்தலை மக்கள் வரிப்பணத்தை வீணடித்து நடத்துவதை தவிர்பதற்காக கட்சி கொள்கைகளை புறந்தள்ளி. நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் ஒத்த கொள்கையின் படி யாருடன் வேண்டுமானாலும் ஒரு கூட்டணி அரசு அமைத்து மக்கள் தொண்டு ஆற்றலாம். ஆகவே அது தேர்தல் சமயத்தில் கட்சியால் எடுக்கப்படும் முடிவு. மக்கள் இந்த விஷயத்தில் குழம்பாமல் திமுக மீது நம்பிக்கை வைத்து எப்பொழுதும் போல் தங்கள் ஆதரவை வரப்போகும் மக்களவை தேர்தலிலும் வழங்கவேண்டும் என்று உரிமையோடு உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன். நான் கட்டுமரம் என்பாதை தமிழக மக்கள் எப்பொழுது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் கட்டாயம் உங்களை கரை சேர்ப்பேன்.
Rate this:
0 members
1 members
6 members
Share this comment
Cancel
love - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜூலை-201300:57:29 IST Report Abuse
love மீண்டும் திமு க பிஜே பி யுடன் கூட்டணி வைக்காது.... வாஜ்பாயுடன் முடிவுற்றது ...
Rate this:
6 members
0 members
1 members
Share this comment
Cancel
T.Indran - Pudukottai,இந்தியா
26-ஜூலை-201309:37:57 IST Report Abuse
T.Indran லோக் சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. அதுக்குள்ளே மோடி பிரதமர் ஆயிடுவாரோ என்று பேஜார் ஆக வேண்டியதில்லை.
Rate this:
3 members
1 members
4 members
Share this comment
Cancel
NARAYANAN . 1958. - TIRUCHY.,இந்தியா
26-ஜூலை-201307:27:55 IST Report Abuse
NARAYANAN . 1958. அறிக்கையே இரு வேறு அறிக்கைகள். அதுவும் மாறுபட்டவை, அதிலும் ஒன்றுக்கொன்று முன்னுக்கு பின் முரணாக உள்ளது. எங்கோ தப்பு நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளமுடிகிறது.
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
Freethinker - Chennai,இந்தியா
26-ஜூலை-201307:14:49 IST Report Abuse
Freethinker கருணா மனசாட்சி : நானே எவ்வளவு கஷ்ட்டப்பட்டு நாலாபுறமும் துண்டு போட்டு வெச்சிருக்கேன். நம்ம எம்பிகளுக்கு ட்ரைனிங் பத்தாது. முரசொலி மாறன் இருந்திருந்தா இப்படியெல்லாம் கையெழுத்து போட்டிருபானுன்களா.... அப்ரெசெண்டிங்க ... அப்ரெசெண்டிங்க... நமக்குன்னு வந்து வாய்சிருகானுன்களே. இவனுங்கள வெச்சிட்டு நான் எப்படி கனிய கரையேத்த போறன்னு தெரியலையே...
Rate this:
0 members
2 members
16 members
Share this comment
Cancel
தமிழன் - Melanikuzhi(Ariyalur-DT),இந்தியா
26-ஜூலை-201307:11:46 IST Report Abuse
தமிழன் தலைவா நல்லா தூங்கு ................
Rate this:
6 members
2 members
34 members
Share this comment
kovandakurichy Govindaraj - jubail,சவுதி அரேபியா
26-ஜூலை-201314:11:39 IST Report Abuse
kovandakurichy Govindarajவெற்றிக் காற்று எந்த திசையில் வீசுதோ அந்த பக்கம் சாய்வது தானே கருணாநிதியின் குணம் .அதான் இப்போதே பண்டாரம் பரதேசி என்று சொன்னதை மறந்து விட்டு கூட்டணி மாற வாய்ப்பு தேடுகிறார் ...
Rate this:
2 members
2 members
34 members
Share this comment
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
26-ஜூலை-201306:41:43 IST Report Abuse
Vaduvooraan தேச பக்தி வீசை என்ன விலை என்று கேட்கிற கூட்டம் தேச பக்தி இல்லாது போனாலும் துரோக புத்தி இல்லாதிருக்கலாமே?
Rate this:
3 members
0 members
6 members
Share this comment
Cancel
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
26-ஜூலை-201306:34:38 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் கலைஞரோடு கூட்டணி கண்டு வெற்றி பெறுவதுக்கு பதிலாக எதிர்க் கட்சியாகவே இருக்கலாம்.....
Rate this:
3 members
0 members
12 members
Share this comment
Cancel
Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா
26-ஜூலை-201306:23:15 IST Report Abuse
Vilathur Nandhiyar இன்னிக்கு இதுக்கு மேட்டர் கிடைசுடிச்சு ...மோடி ஜாக்கிரதை ..ஏழரை நாட்டு சனியன் பார்வை உங்கள் மீது பட்டுவிட்டது ...
Rate this:
3 members
0 members
9 members
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
26-ஜூலை-201306:16:47 IST Report Abuse
N.Purushothaman யோவ்..இளங்கோவா....மோடி அவர்களின் கொள்கைகள் தேசிய கொள்கைகள்... சிறுபான்மையினருக்கு அவர் அப்படி என்ன துரோகம் செஞ்சிட்டாரு......ரயிலை கொளுத்தினது யார்....பெரும்பான்மை மக்கள் உள்ள இடத்தில இப்படி ஒரு சம்பவம் நடந்தால் சிறுபான்மையினருக்கு தானே பாதிப்பு அதிகம் வரும்.... சிறுபான்மையினரை ஒவ்வொருத்தராக தேடி பிடித்தா பாதுகாப்பு கொடுக்க முடியும்....கலவரத்தை அடக்கும் போது இரு தரப்பிலும் தான் உயிரிழப்பு ஏற்பட்டது...அத யாரும் ஏற்கவில்லை....ரயில கொளுத்தினத யாரும் கண்டிக்கல....ஆனா மோடியை மட்டும் குற்றம் சொல்லணும்....நல்லா இருக்கு உங்க நியாயம்....அதுக்காக மோடியை எதிர்க்கறதாக நினைத்து இந்திய அரசியலை உலக அளவில் கேவலபடுத்தலாம்.......வக்கிரமான எண்ணம்....
Rate this:
8 members
1 members
32 members
Share this comment
rajen.tnl - tirunelveli,இந்தியா
30-ஜூலை-201310:13:10 IST Report Abuse
rajen.tnlமிக அழகான நேர்த்தியான கருத்து.....இது தான் உண்மை .... ...
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
rajen.tnl - tirunelveli,இந்தியா
30-ஜூலை-201310:19:02 IST Report Abuse
rajen.tnl.ரயில கொளுத்தினத யாராவது கண்டித்தா சிறுபான்மை ஒட்டு போயுருமாம்...வெக்கம் கேட்ட அரசியல்வாதிகள் ...
Rate this:
0 members
1 members
12 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.