E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதிய உயர்வு அறிவிப்பு: அரசு ஊழியர் சங்கங்கள் வரவேற்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2013
23:26

சென்னை: தமிழகத்தில், ஆறாவது ஊதியக் குழுவிலிருந்த, முரண்பாடுகளைக் களைந்து, அரசு ஊழியர்களுக்கு, புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம், லட்சக்கணக்கான அரசு ஊழியர் பயன் பெறுவர். புதிய ஊதிய உயர்வை அறிவித்த, முதல்வருக்கு, அரசு ஊழியர் சங்கங்கள் நன்றி தெரிவித்து உள்ளன.


குழு நியமனம்:



மத்திய அரசின், ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைத்தபடி, 2009ம் ஆண்டு, தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. இதில், பல குறைபாடு இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும், அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இது குறித்து விசாரிக்க, தி.மு.க., அரசு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜிவ் ரஞ்சன் தலைமையில், ஒரு நபர் கமிஷன் குழுவை நியமித்தது. இக்குழு அனைத்து வகையான, அரசு ஊழியர் சங்கங்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை பெற்றது. அந்த மனுக்கள் அடிப்படையில், குழு, அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. குழு பரிந்துரையின் பேரில், பல அரசு ஆணைகள் வெளியிடப்பட்டன. அதிலும், முரண்பாடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்சூழலில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வர் ஜெயலலிதா, புதிதாக பொறுப்பேற்றதும், அரசு செலவினத் துறை முதன்மை செயலர் கிருஷ்ணன் தலைமையில், 2012, ஏப்ரல் மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், நிதித் துறை கூடுதல் செயலர் பத்மநாபன், இணைச் செயலர் உமாநாத், ஆகியோர் இடம் பெற்றனர். இக்குழுவினரும், பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களிடம், கருத்து கேட்டனர். அவர்கள் கோரிக்கை அடிப்படையில், அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அறிக்கையை பரிசீலித்த முதல்வர், குழு கூறியதன் அடிப்படையில், ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, புதிய ஊதிய உயர்வுக்கு, அரசாணை வெளியிட உத்தரவிட்டார். அதன்படி நேற்று, வேளாண் பொறியியல் துறை, கால்நடைத் துறை, விவசாயம் மற்றும் மண் வள பாதுகாப்புத் துறை, கூட்டுறவு தணிக்கைத் துறை, பொது சுகாதாரத் துறை, வணிக வரித் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொல்பொருள் துறை, கூட்டுறவுத் துறை, வரலாறு ஆய்வுத் துறை என, துறை வாரியாக, 30 அரசாணைகள் வெளியிடப்பட்டன. மேலும், பல அரசாணை, துறை வாரியாக வெளியிடப்பட உள்ளது.

இதன் மூலம், அரசு ஊழியர்களுக்கு, 200 ரூபாயிலிருந்து 3,000 வரை, ஊதிய உயர்வு கிடைக்கும். குறிப்பாக, அடிப்படை ஊழியர்கள் அதிகம் பயன் பெறுவர். ஒரே பதவியில், 10 ஆண்டு பணி முடித்து, தேர்வு நிலை ஊழியர்களாக உள்ளனர். இவர்களுக்கு, 6 சதவீதம், ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சம்:



நேற்று வெளியிடப்பட்ட அரசாணைகளின் சிறப்பம்சங்கள்:


* தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலைக்கு, ஊதிய உயர்வு, 3 சதவீதத்துடன், கூடுதலாக, 3 சதவீதம் ஊதிய


உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.


* முதன் முறையாக, அலுவலக உதவியாளர்களுக்கு, சிறப்புத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சாதாரண உதவியாளர்களுக்கு, 50 ரூபாய்; தேர்வு நிலையில் உள்ளோருக்கு 75 ரூபாய்; சிறப்பு நிலையில் உள்ளோருக்கு, 100 ரூபாய் கிடைக்கும்.


* புதிய ஊதிய உயர்வு, 2006ம் ஆண்டிலிருந்து அமலுக்கு வரு கிறது. பணப் பயன், இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அமலுக்கு வரும்.


* தட்டச்சர் மற்றும் அடிப்படை ஊழியர்கள், 1998ம் ஆண்டுக்கு முன் சேர்ந்திருந்தால், அவர்களுக்கான சிறப்பு ஊதியம், 100 சதவீதம்; 1998ம் ஆண்டுக்கு பின் சேர்ந்திருந்தால், 50 சதவீதம் உயர்த்தப்படும்.


* புதிய ஊதிய உயர்வு நிர்ணயத்தில், முரண்பாடு இருந்தால், ஆறு மாதங்களுக்குள், முறையீடு செய்ய, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வருக்கு நன்றி:



ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்து, புதிய ஊதிய உயர்வை அறிவித்த முதல்வருக்கு, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம், தமிழக ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மைய சங்கம், தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கை துறை அலுவலர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மைய சங்கம் உட்பட, பல்வேறு சங்கங்கள் நன்றி தெரிவித்து உள்ளன.

துணை செயலர்கள் அதிருப்தி:



தலைமைச் செயலகத்தில், துணைச் செயலர்களாக உள்ளோருக்கும், இணைச் செயலர்களாக உள்ளோருக்கும், ஊதிய வித்தியாசம், 25 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது. இவ்வேறுபாட்டை களைய வேண்டும் என, துணைச் செயலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக, அரசாணை எதுவும் வெளியாகாததால், துணைச் செயலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பெரிய மாற்றம் இல்லை: ஆசிரியர்கள் கருத்து:



"சம்பள உயர்வில், ஆசிரியர்களுக்கு, பெரிய அளவில், மாற்றம் எதுவும் இல்லை' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: "பத்து ஆண்டு, 20 ஆண்டு பணி முடித்த, தேர்வுநிலை, சிறப்பு நிலை ஊழியர்களுக்கு, அடிப்படை சம்பளத்தில், 3 சதவீதத்தில் இருந்து, 6 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இது, அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கும் பொருந்தும். அந்த வகையில், ஆசிரியர்களுக்கு, 1,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய், கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வு பெற, தர ஊதியம் உயர வேண்டும். இந்த தர ஊதிய அளவில், எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோல், வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி, கல்விப்படி ஆகியவற்றில், மாற்றம் வரும் என, எதிர்பார்த்தோம். அதுபோல், இந்த படிகளில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. உதவி தொடக்கக் கல்வி அலுவலரின் தர ஊதியம், 4,700 ரூபாயாக, மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இவரின் கீழ் வேலை பார்க்கும் கண்காணிப்பாளரின் தர ஊதியம், 4,800 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்களின் தர ஊதியம், 4,900 ரூபாயில் இருந்து 5,100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் அளவில், தர ஊதியம் உயர்த்தப்பட்டபோதும், இதை, ஆசிரியர்களுக்கு உயர்த்தவில்லை. இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (28)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mani k - trichy,இந்தியா
30-ஜூலை-201311:04:32 IST Report Abuse
mani k அரசு ஊழியர்களின் நியாயமான வேண்டுகோளை அரசு ஏற்றுக்கொண்டு நிறைவெர்ரியதர்க்கு நன்றி.மேலும் உள்ள குறைபாடுகளை நீக்கி எல்லோரும் பயன் பெற ஆணை வழங்கும்படி பணிஉடன் வேண்டுகிறேன்.நன்றியுடன் .கி.மணி.திருச்சி,..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
chandrasekaran - chennai,இந்தியா
26-ஜூலை-201313:34:46 IST Report Abuse
chandrasekaran காவல் மற்றும் தீயணைப்பு துறைக்கு சம்பள உயர்யு இல்லையா ??????
Rate this:
4 members
1 members
6 members
Share this comment
Cancel
Raju Perur Coimbatore - Coimbatore,இந்தியா
26-ஜூலை-201312:09:16 IST Report Abuse
Raju Perur Coimbatore அரசு அலுவலங்களில் நான் பலமுறை ஊழியர்களுக்கு வேலையில் உதவியுள்ளேன். 70% ஊழியர்கள் வேலை செய்வதில்லை. 30% பேர் வேலை பளு அதிகம் உள்ளவர்கள். அதிக லஞ்சம் மேற்கூறிய 70% பேர் கேட்கிறார்கள், 30% பேர் 10,20,50 லஞ்சம் பெறுகிறார்கள். கடை நிலை ஊழியன் மக்களிடம் நேரடி தொடர்பில் இருப்பவன். அதிகம் பயம் இருக்கும். உயர் அதிகாரிகள் கடை நிலை ஊழியனின் லஞ்சத்தில் பங்கு கேட்பார்கள். ஏன், இட மாறுதலுக்கு கூட லஞ்சம் தரவேண்டும். சும்மாவா லஞ்சம் கேட்கிறார்கள். 30% பேர் உண்மையில் லஞ்சம் வாங்க விருப்பம் இல்லாமல் வேறு வழி இன்றி வாங்குகிறார்கள். நமக்கு தான் பண பிரச்சனையா?
Rate this:
7 members
1 members
8 members
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
26-ஜூலை-201311:51:53 IST Report Abuse
Rajasekaran Palaniswamy ஒரு ரூபாய்க்கும், 5 ரூபாய்க்கும், 12 ரூபாய்க்கும் வயிறு நிறைய முழு சாப்பாடு கிடைக்கும் இந்த கால கட்டத்தில் இந்த ஊதிய உயர்வு மிகவும் கண்டிக்கத்தக்கது. எந்த புள்ளி விவர அடிப்படையில் இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டது என்று அரசு விளக்க முடியுமா? ஐயா வக்கீல்களே... இதை யாராவது ஒரு புண்ணியவான் கோர்டுக்கு எடுத்துகொண்டு செல்ல கூடாதா?
Rate this:
5 members
1 members
9 members
Share this comment
Cancel
gummanguthu gopi - abudhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஜூலை-201311:16:40 IST Report Abuse
gummanguthu gopi என்ன கொடுத்தாலும் இவர்களுடைய லஞ்சம் குறையபோவதில்லை. வேலையும் செய்ய போவதில்லை. இதுதான் சாக்கு என்று வியாபாரிகளும் விலை ஏற்றி விடுவர். பாதிக்க போவது பெரும்பான்பை மக்கள் தான்.
Rate this:
4 members
1 members
11 members
Share this comment
Cancel
periasamy - sivagangai,இந்தியா
26-ஜூலை-201311:10:01 IST Report Abuse
periasamy உதவி தொடக்கக் கல்வி அலுவலரின் தர ஊதியம், 4,700 ரூபாயாக, மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இவரின் கீழ் வேலை பார்க்கும் கண்காணிப்பாளரின் தர ஊதியம், 4,800 ரூபாயாக மாற்றப்பட்டு இந்த கங்காணிகள் கிம்பளமும் வந்குவார்கர்கள்
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
Dhanabal - Thoothukudi,இந்தியா
26-ஜூலை-201310:55:00 IST Report Abuse
Dhanabal அரசு ஊழியர்களின் நியாயமான குறைகளை , அரசு களைவதில் தவறேதும் இல்லை .அதே வேளையில் லஞ்ச லாவண்யத்திற்கு இடமளிக்காமல் , மக்களின் குறைகளை களைவது தங்களது தலையாய கடமை என்பதை அரசு ஊழியர்களும் நினைவில் கொள்ள வேண்டும் ...
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
B.Madhavan, - chennai ,இந்தியா
26-ஜூலை-201310:26:58 IST Report Abuse
B.Madhavan, நன்றி நன்றி நன்றி
Rate this:
3 members
0 members
1 members
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
26-ஜூலை-201310:14:57 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஏற்புடையதல்ல.., அரசுக்கு நிர்வாக பணியாளர்கள் செலவு மேலும் கூடுதலாகிறது. இதற்காக மக்களிடம் நேர்முக மறைமுக வரிகள் உயர்ந்து கடுமையாக விலைவாசி உயர்வுக்கு காரணமாக அமைகிறது. இதனால் பொதுமக்களின் தினசரி குடும்ப செலவு அதிகமாகும். பொதுமக்கள் உழைக்கும் உழைப்புக்கு வருமானம் இருபதில்லை. பொருள்கள் வாங்கும் சக்தி குறைந்து விடும். வறுமைக்கு உள்ளகுவார்..,தம் வருமானத்தில் செலவு செய்யமுடியாமல் பட்டினி சாவுகள் ஏற்பட காரணமாகவும் அமையும்.., மத்திய,,மாநில அரசு பணிகளில் ஊழியர்கள் பணி செயல் குறைவு.., பணி சம்பளம் மிக அதிகம்.., பெற்று கொண்டு பொதுமக்களை வறுமையில் சாகடிக்க அரசு நிர்வாக பணிசெலவு காரணமாகவும் அமைகிறது. மத்திய மாநில அரசு ஊழியர்கள் தனியார் துறை ஊழியர்கள் சம்பளவிகிதம் அடிப்படையில் முன்றில் ஒருபகுதி மத்திய மாநில அரசு ஊழியர்கள் சம்பள விகிதங்கள் இருக்க வேண்டும். பொதுவாக அரசு பணி என்பது பொதுமக்களுக்காக சேவை உணர்வுடன் ஒரு செவிலியர் பணி போன்றதாகும் என்பதை மக்கள் வாக்குகளை பெற்றுக்கொண்டு மக்கள் சார்பில் பணிபுரியும் அரசியல் பணியாளர்கள் இதை நன்கு உணரவேண்டும். பொதுமக்கள் உண்மை நிலை அம்மா உணவகங்களில் குறைந்த விலையில் சாப்பிடும் நிலை.., இனி அதற்கும் கூட சாப்பிட முடியாமல் போக பொதுமக்கள் கையில் காசு இல்லாமல் போகும். பெருமளவில் அதிகரித்து இருக்கும் அரசு ஊழியர்கள் சம்பளம் பொதுமக்கள் நலன் கொண்டு குறைக்க பட வேண்டும் - பூபதியார்
Rate this:
4 members
0 members
7 members
Share this comment
Cancel
G.Loganathan - Coimbatore,இந்தியா
26-ஜூலை-201310:04:10 IST Report Abuse
G.Loganathan தேர்தல் வருகிறது ஊதிய உயர்வு கொடுத்து ஓட்டு வாங்க திட்டம். விலைவாசி ஏறியாச்சு. தனியார் பனியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு என்ன - யார் ஊதிய உயர்வு கொடுக்கப்போகிறார்கள்?. இதைவிட கொடுமை வங்கி வட்டியில் வாழ்க்கை நடத்தும் முதியோர் நிலை என்ன?......... அரசாங்க ஊழியர்கள் நடத்தும் அட்டகாசத்திற்கு ஊதிய உயர்வா?
Rate this:
2 members
0 members
7 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.