காவிரி டெல்டா இல்லாத மாவட்ட பகுதிகளில் 17.3 லட்சம் பேருக்கு ரூ.801 கோடி வினியோகம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

காவிரி டெல்டா பாசனம் அல்லாத, 23 மாவட்ட பகுதிகளில் வறட்சி நிவாரணம் வழங்கும் பணி, 96 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதுவரை, 801 கோடி ரூபாய், 17.3 லட்சம் விவசாயிகளுக்கு, அவர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால், சென்னை தவிர, 31 மாவட்டங்களும் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. காவிரி டெல்டா மாவட்டங்களில், ஒரு ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய் என, 3.52 லட்சம் விவசாயிகளுக்கு, 524.25 கோடி ரூபாய், அவர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது."காவிரி டெல்பா பாசனம் இல்லாத, 23 மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு, 835.21 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்' என, அரசு அறிவித்தது. இடம், பயிருக்கு ஏற்ப, ஏக்கருக்கு, 3,000, 4,000, 5,000 ரூபாய் வரை, வருவாய்த் துறை மூலம், நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. 96 சதவீதம் பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டு விட்டதாக, அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:டெல்டா பாசனம் அல்லாத, 23 மாவட்ட பகுதிகளுக்கு, வறட்சி நிவாரணம் வழங்கும் பணி, பெருமளவு முடிந்துள்ளது. நிர்ணயித்த, 835.21 கோடி ரூபாயில், இதுவரை, 801.45 கோடி ரூபாய், 17.31 லட்சம் விவசாயிகளுக்கு, அவர்களின் வங்கி கணக்கில், நேரடியாக சேர்க்கப்பட்டு விட்டது. அறிவித்ததில், 96 சதவீத நிவாரணம் வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள நிவாரணத் தொகையும், ஒரு மாதத்திற்குள், உரியவர்களுக்கு வழங்கப்பட்டு விடும்.இவ்வாறு அவர் கூறினார்.

அதிகபட்சமாக, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு, 131.41 கோடி ரூபாய், திருப்பூர் மாவட்டத்திற்கு, 94.44 கோடி ரூபாயும், மிகக் குறைவாக, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு, 1.82 லட்ச ரூபாயும், தேனி மாவட்டத்திற்கு, 24.60 லட்ச ரூபாயும் நிவாரணம் தரப்பட்டுள்ளது.

பல மாவட்டங்கள், டெல்டா மற்றும் டெல்டா அல்லாத பகுதி பட்டியல் என, இரண்டு பட்டியல்களிலும் இடம் பெற்றுள்ளது குறித்து கேட்ட போது,"ஒரே மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனம் மூலமும், டெல்டா பாசனம் இன்றி, குளம், குட்டைகள், போர்வெல் மூலம் விவசாயம் நடக்கும் பகுதிகளும் உள்ளன. எனவே, ஒரே மாவட்டம் இரு பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது' என்றனர்.

நிவாரணத் தொகையை வங்கி கணக்கில் சேர்க்க, விவசாயிகளிடம் பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு இருந்தது. சில பகுதிகளில், வருவாய்த்துறை ஊழியர்கள் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.

- நமது நிருபர் -

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
villupuram jeevithan - villupuram,இந்தியா
27-ஜூலை-201306:06:27 IST Report Abuse
villupuram jeevithan இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் ஏன் மத்திய அரசு கூட இவ்வளவு நிவாரண தொகையை தனிப்பட்டவருக்கு கொடுத்ததில்லை.
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
27-ஜூலை-201302:28:46 IST Report Abuse
Sekar Sekaran தினமலரும் இது போன்ற செய்திகள் வெளியிடாமல் போனால்..அம்மாவின் அற்புதமான இந்த நடவடிக்கை வெளி உலகிற்கு தெரியாமலே போயிருக்கும். கருணா ஆட்சி என்றால் இந்நேரம் மிரட்டி உருட்டி நடிகர்களையும் நடிகைகளையும் மேடையேற்றி..காக்கை கூட்டத்தையும் கவிதை பாட சொல்லி மிகப்பிரம்மாண்டமான முறையில் விளம்பரப்படுத்தியிருப்பார்கள்.விவசாயிகளின் வயிற்றுக்கு பால் வார்த்த புண்ணியவதி அம்மா அவர்கள்..மிகப்பெரிய உதவி இது..மத்திய அரசாங்கம் வெறும் அறிக்கையை மட்டுமே பெற்றுசென்றதே தவிர உதவி செய்ய முன்வரவில்லை..அரசியல் காரணமே. ஆனால் அம்மாவுக்கு தெரியும் பசியின் வலி என்னெவென்று..சமயமறிந்து செய்த உதவி போற்றதளுக்கு உரியதே..நன்றி அம்மாவுக்கும் தினமலருக்கும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்