Need common polling in Sri lanka: Karunanidhi | இலங்கையில் பொது ஓட்டெடுப்பு: கருணாநிதி அடுத்தகட்ட யோசனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இலங்கையில் பொது ஓட்டெடுப்பு: கருணாநிதி அடுத்தகட்ட யோசனை

Added : ஜூலை 26, 2013 | கருத்துகள் (74)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இலங்கை, பொது ஓட்டெடுப்பு, கருணாநிதி, யோசனை,Need, common,  polling, Sri lanka, Karunanidhi

சென்னை:"அனைத்து நாடுகளிலும், வாழும் இலங்கை தமிழர்களிடையே, பொது ஓட்டெடுப்பு நடத்தி, அவர்களின் கருத்தைக் கேட்டு தீர்வு காண்பது தான், இலங்கை தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும்' என, தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவே, தற்போது, அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, "இலங்கையிலே, 13 து சட்டத் திருத்தம் நீர்த்துப் போகாமல் பாதுகாக்கப்பட வேண்டும்' என, பிரதமருக்கு அவசர கடிதம் எழுதி, அதற்கு பிரதமரும் பதில் எழுதியிருக்கிறார்.சட்டசபையில், இலங்கை பிரச்னைக்காக, பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என, தீர்மானம் கொண்டு வந்தபோது, தமிழ் ஈழமே கிடைத்து விட்டது என்பதைப் போல, மகிழ்ச்சி அடைந்து, வானத்திற்கும், பூமிக்குமாக எகிறிக் குதித்தனர்.இலங்கை தமிழர் பிரச்னைக்கு, 13வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம், முழு அரசியல் தீர்வாக அமையாது. இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும், இலங்கை தமிழர்களிடையே பொது ஓட்டெடுப்பு நடத்தி, அவர்களுடைய கருத்தைக் கேட்டு தீர்வு காண்பது தான், இலங்கை தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும் என்பது தான், "டெசோ' அமைப்பின் நிலைப்பாடு.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ABDUL SADHIK, CHENNAI - CHENNAI,இந்தியா
30-ஜூலை-201316:10:10 IST Report Abuse
ABDUL SADHIK,  CHENNAI இலங்கை தமிழர் பிரச்னைக்கு, 13வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம், முழு அரசியல் தீர்வாக அமையாது. இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும், இலங்கை தமிழர்களிடையே பொது ஓட்டெடுப்பு நடத்தி, அவர்களுடைய கருத்தைக் கேட்டு தீர்வு காண்பது தான், இலங்கை தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும் என்ற டெசோவின் கருத்து வரவேற்கத்தக்கது. இந்தக் கருத்தை தமிழக அரசும், தமிழத்திலுள்ள இதர அரசியல் கட்சிகளும் ஒட்டுமொத்தமாக ஏற்று மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கச் செய்தால் இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் விடிவு ஏற்படும்.
Rate this:
Share this comment
Cancel
Eswaran Eswaran - Palani,இந்தியா
28-ஜூலை-201303:43:32 IST Report Abuse
Eswaran Eswaran நம்ம நாட்டுப் பிரச்சினையே நமக்குத் தீர்க்க முடியாம இருக்குது . இதுல பக்கத்து நாடான இலங்கையில நமக்கென்ன வேலை?
Rate this:
Share this comment
Cancel
shanmugham - Chennai,இந்தியா
27-ஜூலை-201311:25:48 IST Report Abuse
shanmugham இந்த மஞ்ச துண்டுக்கு, "ஓடி போனவங்க திரும்பி வரபோவது இல்லை. எனவே இனி அவங்களுக்கும் இலங்கைக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது." தெரியாதா ?
Rate this:
Share this comment
Cancel
shanmugham - Chennai,இந்தியா
27-ஜூலை-201311:24:34 IST Report Abuse
shanmugham இந்த மஞ்ச துண்டு இலங்கை தமிழர்கள் மேல் ரொம்ப அக்கறை கொண்டவர். கடந்த எலெக்சன்ல தோத்ததற்காக இப்படி நாடகம் போட்டு மக்களின் ஓட்டை வாங்க அடித்தளம் போடுகிறார்.
Rate this:
Share this comment
Cancel
KUMUKKI - male,மாலத்தீவு
27-ஜூலை-201311:22:01 IST Report Abuse
KUMUKKI இவருக்கு இலங்கையில் தபால்தலை வெளியிட சொல்லி விடலாம்...
Rate this:
Share this comment
Cancel
Raja Singh - Chennai,இந்தியா
27-ஜூலை-201311:14:38 IST Report Abuse
Raja Singh தாத்தா பாடும் பாட்டு...
Rate this:
Share this comment
Cancel
Raja Singh - Chennai,இந்தியா
27-ஜூலை-201311:13:13 IST Report Abuse
Raja Singh மத்திய அரசின் வெளி விவகார கொள்கையில் தலையிட மாட்டேன் என்று சொன்னவர் இப்போ காமடி பண்ணுறாரா , கருணாநிதி அவர்களே உங்களுக்கு வயது ஆகிவிட்டது ...
Rate this:
Share this comment
Cancel
Ma. PARAIYARAIVON - Thoothukudi,இந்தியா
27-ஜூலை-201311:05:41 IST Report Abuse
Ma. PARAIYARAIVON என் கருத்தை மட்டும் நம்ம தலீவருக்கு தபால்ல( ஆஸ்திரியா நாட்டு ஸ்டாம்ப் ஒட்டி ) அனுப்பி வச்சிருங்க.
Rate this:
Share this comment
Cancel
Ma. PARAIYARAIVON - Thoothukudi,இந்தியா
27-ஜூலை-201311:01:43 IST Report Abuse
Ma. PARAIYARAIVON இன்னைக்கு போதும்னு நினைக்கிறேன், பாவம் வயசானவரு, பொழைச்சி போகட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
27-ஜூலை-201310:59:26 IST Report Abuse
Rangarajan Pg இங்கு தமிழக தமிழர்கள் திண்டாடுகிறார்கள். எந்த ஒரு நல்ல விஷயமும் தமிழகத்தில் நடப்பதில்லை. சுகாதாரம் அதலபாதாளத்தில் உள்ளது. சுற்றுப்புற சுழல் கேவலமாக உள்ளது. நல்ல சாலை வசதி இல்லை. விலைவாசி கன்னாபின்னாவென்று எகிறுகிறது. மழைகாலங்களில் சாலைகளில் நீர் தேங்குகிறது. வெயில் காலங்களில் தண்ணீர் கஷ்டம் ஏற்பட்டு மக்கள் சாலைகளில் தண்ணீர் குடம் வைத்து அலைகிறார்கள். எந்த ஒரு முறைபடுத்துதல் எந்த விஷயத்திலும் இல்லை. எல்லாமே ஏனோ தானோ என்றிருக்கிறது. மக்களின் சகிப்பு தன்மையால் எந்த வித போராட்டமும் செய்யாமல் மக்கள் காலத்தை தள்ளி கொண்டிருக்கிறார்கள். எல்லாவிதத்திலும் நம் தமிழகம் பின்தங்கி இருக்கிறது. பொதுமக்களை பற்றிய அக்கறை எந்த ஒரு ஆட்சியாளருக்கும் அதிகாரிகளுக்கும் இல்லை. நல்ல விஷயங்கள் பொது மக்களை அடையவேண்டும், வரி கட்டும் மக்கள் அந்த வரிபணத்துக்கு உண்டான பயன்பாட்டை பெற வேண்டும் என்ற நினைப்பு யாருக்கும் இல்லை. இதை எல்லாம் நம் கருணா கண்டு கொள்ள மாட்டார். தற்போது விடுதலை புலிகளின் தொல்லை இல்லாமல் ஓரளவு அவர்கள்வரை பிரச்சினை இல்லாமல் வாழும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக இந்த போலி தமிழ் தலைவர் கண்ணீர் சிந்துகிறார். டெசோ நாடகம் நடத்துகிறார். லோக்கல் தமிழர்களை கண்டு கொள்ள மாட்டார். GLOBAL இலங்கை தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்துவாராம். என்ன தமாஷ் இது? போலியான ஒரு மனிதர் தனது 90 ஆவது வயதிலாவது சிறிது திருந்தி இதுநாள் வரை இவரது அரசியல் பிழைப்பை நடத்த ஒரு வகையில் துணை புரிந்த மக்களுக்கு இனியாவது இவர் ஏதாவது நல்லது நினைக்க வேண்டும். நல்லது நினைக்காவிட்டாலும் பரவாயில்லை. இவர் சற்று ஒதுங்கி இருந்தாலே போதும். நல்லது தானாக நடக்கும். அறவே வெருக்கபடவேண்டிய மனிதர் இவர். இந்த வயதை ஒத்த மனிதர்கள் மீது வரும் மதிப்பு மரியாதை கூட இந்த ஆளுக்கு கொடுக்க வேண்டும் என்று தோன்றுவதில்லை. அந்த அளவுக்கு கேவலமான பிறவி இவர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை