ஏழைகள் சாப்பாடு குறித்த விவகாரம் விஸ்வரூபம் : 1 ரூபாய்க்கு கிடைக்கிறது என்கிறார் பரூக்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:குறைந்த விலை சாப்பாடு குறித்த பிரச்னை, மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காங்., தலைவர்களைத் தொடர்ந்து, காங்., கூட்டணியில் அங்கம் வகிக்கும், மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லாவும், ஏழைகளின் சுயமரியாதையுடன் விளையாடியுள்ளார். "1 ரூபாய்க்கு கூட சாப்பாடு கிடைக்கிறது. சாப்பாட்டின் விலை எல்லாம், அதை சாப்பிடுபவர்களின் மனதைப் பொறுத்தது' என, தத்துவத்தை உதிர்த்துள்ளார். இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.


திட்டக் கமிஷன் அறிக்கை:

மத்திய திட்டக் கமிஷன், மூன்று நாட்களுக்கு முன், அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், "நம் நாட்டில் ஏழைகள் எண்ணிக்கை குறைந்து விட்டது; தனி நபர் வருவாய் அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில், 27 ரூபாயும், நகர்ப்புறங்களில், 33 ரூபாயும் சம்பாதிப்பவர்கள், ஏழைகளாகக் கருதப்பட மாட்டார்கள்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.திட்டக் கமிஷனின் இந்த அறிக்கை, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. "1 கிலோ வெங்காயம், 50 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் நிலையில், 27 ரூபாய் சம்பாதிப்பவர்கள், ஏழைகள் இல்லை என, திட்டக் கமிஷன் அறிவித்துள்ளது, வேடிக்கையாக உள்ளது' என, பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும், கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், பாலிவுட் நடிகரும், காங்., கட்சியைச் சேர்ந்தவருமான, ராஜ் பப்பர், "மும்பையில், 12 ரூபாய்க்கு முழுச் சாப்பாடு கிடைக்கிறது; வயிறார சாப்பிடலாம்' என, கூறியிருந்தார்.காங்., கட்சியின் ராஜ்யசபா எம்.பி., யான, ரஷீத் மசூத், "டில்லியில், 5 ரூபாய்க்கு மதிய சாப்பாடு கிடைக் கிறது. இந்த உண்மை தெரியாமல், எதிர்க்கட்சியினர் கூப்பாடு போடுகின்றனர்' என, கூறியிருந்தார்.


எதிர்க்கட்சிகள் கண்டனம் :

காங்., தலைவர்களின் இந்த பேச்சுக்கு, எதிர்க்கட்சியினர் கண்டனக் குரல் எழுப்பினர்."காங்., கட்சியில் பணக்காரர்கள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு ஏழைகளின் கஷ்டம் தெரிவது இல்லை. இதனால் தான், ஏழைகளை அவமதிக்கும் வகையில், 12 ரூபாய்க்கு சாப்பாடு கிடைக்கிறது; 5 ரூபாய்க்கு சாப்பாடு கிடைக்கிறது என்கின்றனர்' என, எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.ஆனாலும், காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சியினரின், கிண்டலுக்கு முடிவு ஏற்படுவதாக தெரியவில்லை.தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், மத்திய புதுப்பிக்க தக்க எரிசக்தி துறையின் அமைச்சருமான, பரூக் அப்துல்லாவும், தன் பங்கிற்கு ஏழைகளை நேற்று கிண்டலடித்தார்.

அவர் கூறுகையில், ""சாப்பாடு விஷயம் என்பது, அவரவர் மனதைப் பொறுத்தது. 1 ரூபாய் இருந்தால் கூட போதும்; வயிறார சாப்பிடலாம். ஆனால், அதற்கு மனது இருக்க வேண்டும். 100 ரூபாய்க்கும் சாப்பாடு கிடைக்கிறது,'' என்றார்.

பரூக் அப்துல்லாவின் இந்த பேச்சுக்கு, பல தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. "பிச்சைக்காரர்கள் கூட, 1 ரூபாயை வாங்க முன்வருவது இல்லை. இந்நிலையில், 1 ரூபாய்க்கு சாப்பாடு கிடைப்பதாக அவர் கூறியுள்ளது, ஆச்சர்யம் அளிக்கிறது' என, எதிர்க்கட்சியினர், காட்டமாக தெரிவித்து உள்ளனர்.


காங்கிரஸ் பின்வாங்கியது:

சாப்பாடு விவகாரம் தொடர்பான சர்ச்சையிலிருந்து, காங்கிரஸ் கட்சி, பின்வாங்கியுள்ளது.
காங்., கட்சியின் மீடியா பிரிவு தலைவர், அஜய் மேக்கன் கூறுகையில், ""சில தலைவர்கள், 5 ரூபாய், 12 ரூபாய்க்கு சாப்பாடு கிடைப்பதாகக் கூறிஉள்ளனர். அது, அவர்களின் சொந்த கருத்து. கட்சிக்கும், அவர்களின் கருத்துக்கும், எந்த சம்பந்தமும் இல்லை,'' என்றார்.

காங்., கட்சியின் செய்தித் தொடர்பாளர், ரேணுகா சவுத்ரி கூறுகையில், ""ராஜ் பப்பர், தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து விட்டார். எனவே, இனியும், இந்த விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்,'' என்றார்.


5 ரூபாய்க்கு சாப்பாடா? நிதிஷ் குமார் பாய்ச்சல்:

பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான, நிதிஷ் குமார் கூறியதாவது:ஏழைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, மத்திய திட்டக் கமிஷன் வெளியிட்டு உள்ள அறிக்கை, சிரிப்பை வரவழைக்கிறது. பீகாரில், 2008ம் ஆண்டு, ஏழ்மை பற்றிய சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது. அதில், 'மக்கள் கவுரவமாக வாழும் உரிமை பெற்றதன் அடிப்படையிலேயே ஏழ்மையை கணக்கிட வேண்டும்' என, அறிவிக்கப்பட்டது.டில்லியில், 5 ரூபாய்க்கும், மும்பையில், 12 ரூபாய்க்கும் உணவு கிடைப்பதாக, காங்., தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது நகைப்புக்குரிய உதாரணங்கள். மத்திய அரசின் இந்த வறுமைக் கோடு குறித்த அறிக்கையை, நாங்கள் ஏற்க மாட்டோம். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார்.

சாப்பாடு விவகாரம் தொடர்பாக, நான் தெரிவித்த விஷயங்கள், யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக வருந்துகிறேன். நான் தெரிவித்த கருத்துக்களால், காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதை, நான் விரும்பவில்லை
ராஜ் பப்பர் , காங்., செய்தித் தொடர்பாளர்

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (22)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kesav - colorado springs,யூ.எஸ்.ஏ
28-ஜூலை-201302:06:46 IST Report Abuse
kesav இந்தியா மக்கள் நிலைமை ரொம்ப பரிதாபம்
Rate this:
Share this comment
Cancel
BLACK CAT - Marthandam.,இந்தியா
27-ஜூலை-201311:37:26 IST Report Abuse
BLACK CAT ஏழைகள் சாப்பாடு 1 ரூபாய்க்கு கிடைக்கிறது என்கிறார் பரூக் ....... பரூக் இப்படி கூறியதால் அவருக்கு மலிவான அரசியல் விளம்பரம் கிடைத்து விட்டது ...... நமக்கும் பரூக் என்று ஒரு காங்கிரஸ் அரசியல் வியாதி இருப்பது தெரிந்து விட்டது ...
Rate this:
Share this comment
Cancel
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
27-ஜூலை-201310:45:17 IST Report Abuse
சொல்லின் செல்வன் சரியா சொன்னிங்க தல. எதுக்கு ஒரு ரூபா? அதுகூட தேவையில்ல. கோயில் வாசல்ல உக்காந்தா இலவச உண்டக்கட்டி கிடைக்கும். மக்களை தெம்பேற்றும் விதத்தில் நீங்களே ஒரு மாசம் ஒரு டெமோ பண்ணி காட்டுனா அப்ளாஸ் அல்லும்ல..
Rate this:
Share this comment
Cancel
karthik - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜூலை-201310:11:12 IST Report Abuse
karthik அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் கொடுக்கும் சலுகைகள் அனைத்தும் ரத்து செய்து ,தினமும் நடந்தோ ,சைக்கிள் மூலமோ வந்து பணிகளை செய்ய சொல்ல வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
karthik - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜூலை-201310:03:25 IST Report Abuse
karthik இந்த திட்ட கமிசனே வேஸ்ட்.
Rate this:
Share this comment
Cancel
T.Indran - Pudukottai,இந்தியா
27-ஜூலை-201309:11:38 IST Report Abuse
T.Indran காங்கிரஸ் ஆட்சியை தாங்கி பிடிக்க, பரூக்கின் உலக மகா உளறல் தான் இது. காரணம் சமீப காலத்தில் காங்கிரசாருக்கு ஏற்பட்டுள்ள மோடி ஜுரம்.
Rate this:
Share this comment
Cancel
sundar - Hong Kong,சீனா
27-ஜூலை-201308:25:06 IST Report Abuse
sundar 1 ரூபாய்க்கு சாப்பாடு என்றால், இவருக்கு மாத சம்பளம் 300 போதும்.
Rate this:
Share this comment
sivam - baghram,ஆப்கானிஸ்தான்
27-ஜூலை-201309:48:44 IST Report Abuse
sivamஅவரு ஒரு ரூபாய்க்கு சாப்பிடுருவாறு, ஆனா அவன் பொண்டாட்டி ,பிள்ளைகள் எல்லாம் எப்படி சாப்பிடும், அதுக்கு தான அவரு வேலை [ஊரை ஏமாத்துறது] பாத்துகிட்டு இருக்காரு...
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
27-ஜூலை-201307:33:45 IST Report Abuse
Skv மக்களின் காசுலே தின்னு கொளுத்து குடிச்சு கூத்தடிக்கும் அரசியல்வாதிக்கு என்ன தெரியும். ஓசிலே எல்லாம் கிடைச்சுடுது. முதல்லே வரச்ச ஊமைகுச்சியாட்டம் வருவானுக. சாவுரச்ச 6அடி உசரத்துக்கு 4அடி அகலமா ஆயிட்டு அசந்ஜ்ஜிவருவாணுக. இவனுகளுக்கா தெரியும் உழைக்கும் உழைப்பாளியின் பசி , 1 ரூவாயில சாயா கூட கிடைக்கதுங்கோ. இவனுகளால் ஒருவேளை பட்டினி இருக்க முடியுமா, உழைக்கும் உழவனுக்கு சோறும் இல்லே தண்ணியும் இல்லே என்ற நிலை. ப்ளீஸ் அரசியல்வாதிகளே டோன்ட் ஓபன் யுவர் மௌத்து
Rate this:
Share this comment
Cancel
Vivekanandan - Singapore,சிங்கப்பூர்
27-ஜூலை-201307:33:25 IST Report Abuse
Vivekanandan let him prove himself, give him 30 rupees, need to use it for 1 month for food expenses, bastard will die
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
27-ஜூலை-201306:54:59 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே பூனை கண்ணை மூடி கொண்டுவிட்டு ஐயோ உலகமே இருண்டு விட்டதே என்று நினைக்குமாம்? அது போல பல பூனைகளை படிப்பறிவில்லாத ஆட்டு மந்தைகள் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்ததற்கான பரிசு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்