தெலுங்கானா விவகாரத்தில் காங்., முடிவு : அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகும்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:தெலுங்கானா விவகாரத்தில், நெருக்கடி அதிகரித்ததை அடுத்து, காங்., கட்சியின் உயர்மட்டக் குழு, நேற்று அவசர ஆலோசனை நடத்தியது. இதில், இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டதாகவும், எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகும் என்றும், தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, கடந்த, 50 ஆண்டு கால, தெலுங்கானா விவகாரத்துக்கு, தீர்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

"ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்' என, தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த, பொதுமக்கள், அரசியல்வாதிகள், 50 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.இந்த காரணத்துக்காகவே, சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.,) என்ற கட்சி உருவானது. ஆனாலும், மத்திய அரசு, இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காமல், தள்ளிப் போட்டு வந்தது.இந்நிலையில், 2009ல், தெலுங்கானா போராட்டம், விஸ்வரூபமெடுத்தது, சந்திரசேகர ராவ், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். கலவரம் வெடித்ததால், விரைவில் தனி மாநிலம் உருவாக்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு அறிவித்தது. கலவரம் அடங்கியதும், தெலுங்கானா விவகாரத்தையும் மத்திய அரசு வழக்கம் போல், மறந்து விட்டது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, தெலுங்கானா போராட்டம், மீண்டும் தீவிரமடைந்தது. தெலுங்கானா கோரிக்கையை, மத்திய அரசு அலட்சியப்படுத்துவதாக கூறி, தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்., மூத்த தலைவர்கள் சிலர், காங்கிரசிலிருந்து வெளியேறி, டி.ஆர்.எஸ்., கட்சியில் சேர்ந்தனர்.

மற்றொரு பக்கம், "ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமே தொடர வேண்டும். தெலுங்கானா தனி மாநிலம் அமைத்தால், அதை எதிர்த்து, கடும் போராட்டம் நடத்துவோம்' என, கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவர்கள், போர்க்கொடி தூக்கியுள்ளனர்.மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜெகன்மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சியை சேர்ந்த, 17 எம்.எல்.ஏ.,க்கள், நேற்று முன்தினம், தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர்.ஆந்திராவின் கடலோர மாவட்டமான, நெல்லூரைச் சேர்ந்த, காங்., எம்.எல்.ஏ.,க்கள், பிரபாகர் ரெட்டி, கிருஷ்ணா ரெட்டி ஆகியோர், தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களின் பதவிகளை ராஜினாமா செய்வதாக, நேற்று அறிவித்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தெலுங்கானா விவகாரம் குறித்து, இறுதி முடிவு எடுப்பதற்காக, காங்., கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம், நேற்று டில்லியில் கூடியது. பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, பொதுச் செயலர் திக்விஜய் சிங், ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நீண்ட நேர ஆலோசனைக்கு பின், திக்விஜய் சிங் கூறுகையில், ""தெலுங்கானா விவகாரத்தில், அனைத்து ஆலோசனைகளும் முடிந்து விட்டன. காங்., கட்சி தலைமை மற்றும் மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும், இதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம்,'' என்றார்.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan S - Chennai,இந்தியா
27-ஜூலை-201308:10:57 IST Report Abuse
Nagarajan S ஒரு பக்கம் தெலுங்கானா தனிமாநிலம் அறிவிக்கப்படப்போவதாகவும்,மறுபுறம் ராயல சீமா மற்றும் கடலோர ஆந்திர அரசியல் வாதிகளை தனிமாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்ய வைப்பதும் என்ன அரசியல் விளையாட்டோ? இதனால் பாதிக்கபடபோவது தங்கள் கட்சி தான் என்று இதன் தீவிரம் தெரியாமல் காங்கிரஸ் கட்சி தவறாக காய் நகர்த்திக்கொண்டிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
27-ஜூலை-201306:47:10 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே ஒரே மொழி பேசும் மக்களிடத்தில் பிரிவினை எப்படி விளையாடுகிறது பாருங்கள், நீங்க என்னவோ செய்து கொண்டு போங்கள், ஆனால் கிருஷ்ணா நதியும், கோதாவரி நதியும் தெலுங்கான பகுதிக்குள் வந்து செல்லும், மீண்டும், ஒரு கருநாடகா,தமிழக போர் மேகங்களை ஊடகங்கள் ஊக்குவிக்காமல் இருந்தா சரி.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
27-ஜூலை-201306:28:15 IST Report Abuse
K.Sugavanam தெலங்கானா உதயம்??? ஆனா மோசமான முன்னுதாரணமா அமையும்...
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
27-ஜூலை-201305:52:54 IST Report Abuse
villupuram jeevithan 9 ஆண்டுகளாய் தூங்கிவிட்டு ஓட்டுக்காக தேர்தல் நேரத்தில் ஒரு குழப்பமான முடிவை அறிவித்துவிட்டு ஓட்டை பெற முயற்சிப்பீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Venkat - Chennai,இந்தியா
27-ஜூலை-201301:13:35 IST Report Abuse
Venkat காங்கிரஸ் - அடுத்த வெற்றியை நோக்கி ஒரு படி எடுத்து வைக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்