Advertisement
"புல் மீல்ஸ்' விவகாரத்தில் "அந்தர்பல்டி' அடித்தது காங்கிரஸ்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

28 ஜூலை
2013
01:07
பதிவு செய்த நாள்
ஜூலை 27,2013 23:49

வறுமைக்கோடு பற்றி, திட்டக் கமிஷன் தெரிவித்த கருத்தை நியாயப்படுத்த முற்பட்டு, அதில், தோற்றுப் போய் விட்டதால், இந்த விவகாரத்தில், காங்கிரஸ் பல்டி அடித்துள்ளது. அதனால், இந்தப் பிரச்னை, புதிய வடிவத்தை எட்டியுள்ளது.

"நாள் ஒன்றுக்கு, நகரங்களில், 32 ரூபாயும், கிராமங்களில், 27 ரூபாயும், சம்பாதிப்பவர்களாக இருந்தால், அவர்கள் எல்லாம் வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளவர்கள்' என, சமீபத்தில், மத்திய திட்டக் கமிஷன் தெரிவித்திருந்தது. இந்தக் கருத்துக்கு, நாடு முழுவதும், பலத்த எதிர்ப்பு கிளம்பியது.ஆனாலும், திட்டக் கமிஷனின் கருத்தை, நியாயப்படுத்தும் முயற்சியில், காங்கிரஸ் ஈடுபட்டது. "திட்டக் கமிஷன் கூறுவது சரியே' என்ற ரீதியில், கருத்துகளைத் தெரிவிக்க, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களும், களமிறக்கி விடப்பட்டனர்.

கடும் எதிர்ப்பு:



இதையடுத்து, காங்., தலைமையகத்தில் நிருபர்களைச் சந்தித்த, அந்தக் கட்சியின் தகவல் தொடர்பாளர், ராஜ் பப்பர், "12 ரூபாய்க்கு, "புல் மீல்ஸ்' கிடைக்கிறது' என்றார்.உடன், பா.ஜ., போன்ற எதிர்க்கட்சிகளும், காங்கிரசின் நட்பு கட்சிகளும், ராஜ் பப்பரின் கருத்தை ஏற்க மறுத்து, கடும் எதிர்ப்பை பதிவு செய்தன. அதனால், இந்த விவகாரத்தில், அப்படியே அந்தர் பல்டி அடிக்க வேண்டிய கட்டாயம், காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டில்லியில், நேற்று நிருபர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கபில் சிபல், ""மத்திய திட்டக் கமிஷனின் கருத்து, சரியானது அல்ல. வறுமைக்கோடு குறித்து, தீர்க்கமாக இன்னும் ஆராய்ந்து, அதன்பின், முடிவுக்கு வர வேண்டும். 32 ரூபாய் மற்றும் 27 ரூபாய் சம்பாதிப்பதால், ஒருவர், வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளவராகி விட முடியாது,'' என்றார்.

காங்கிரஸ் பொதுச் செயலர்களில் ஒருவரான திக்விஜய் சிங், ""வறுமை என்பது, ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு விதமாக உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு போன்ற விஷயங்களும் கூட, இதில் அடக்கம். எனவே, சொற்ப ரூபாய் சம்பாதிப்பதை வைத்து, வசதி படைத்தவர்களாகக் கூறுவது தவறு; மத்திய திட்டக் கமிஷனின் கருத்து, சரியானதாக இல்லை,'' என்றார்.

இதையடுத்து, நிருபர்களிடம் பேசிய, மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், ராஜிவ் சுக்லா கூறியதாவது:

கண்டுக்காதீங்க ப்ளீஸ்!




தற்போது வெளியாகியுள்ள கருத்துகள், மத்திய திட்டக் கமிஷனுடையது அல்ல. திட்டக் கமிஷனால் நியமனம் செய்யப்பட்ட, டெண்டுல்கர் கமிட்டியின் கருத்துகளே. இந்த கமிட்டி அளித்துள்ள கருத்துகள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை, மத்திய அரசு ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.வறுமைக்கோடு குறித்து ஆராய, ரங்கராஜன் தலைமையிலான குழு ஒன்று, பிரதமரால் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு, தன் பணியை, அடுத்த ஆண்டு மே மாதம், முடிக்கும். எனவே, அந்த குழுவின் பரிந்துரையே, இறுதியானது. இப்போது வெளியாகியுள்ள கருத்தை, பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார்.

மத்திய திட்டக் கமிஷனின் கருத்தை, நியாயப்படுத்த முற்பட்டு, அது நிறைவேறாமல் போய், எதிர்பாராத வகையில், சர்ச்சையும் உருவானதால், அப்படியே தன் நிலைப்பாட்டை, மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம், காங்கிரசுக்கு ஏற்பட்டுவிட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

"டி.ஆர்.பி., மதிப்பை உயர்த்த திரித்து கூறும் மீடியாக்கள்' :



""மீடியாக்கள், தங்களின், டி.ஆர்.பி., மதிப்பை உயர்த்த, செய்திகளைத் திரித்து வெளியிடுகின்றன,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர், திக்விஜய் சிங் கூறினார்.மத்திய பிரதேச மாநிலம், மாண்ட்சோர் நகரில், இரண்டு நாட்களுக்கு முன் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய, திக்விஜய் சிங், ""காங்., - எம்.பி., மீனாட்சி நடராஜன் கடின உழைப்பாளி, காந்தியவாதி. நான் அரசியலில் பழையவன்; அவரோ, மெருகேற்றப்பட்ட நகை போல ஜொலிக்கிறார்,'' என, பேசினார்.

இது, காங்கிரஸ் கட்சியினரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது. இதற்கு, பா.ஜ., உள்ளிட்ட, எதிர்க்கட்சிகள், கடும் கண்டனம் தெரிவித்தன. அதேநேரத்தில், ""திக்விஜய் சிங்கின் பேச்சில் தவறில்லை,'' என, மீனாட்சி தெரிவித்தார்.

இந்நிலையில், "டுவிட்டர்' சமூக வலைதளத்தில், திக்விஜய் சிங், "மீடியாக்கள், தங்களின், டி.ஆர்.பி., மதிப்பை உயர்த்திக் கொள்ள, உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுகின்றன. காங்கிரஸ் எம்.பி., மீனாட்சி நடராஜன், "சுத்தத் தங்கம்' போன்றவர், அப்பழுக்கற்றவர் என, நான் கூறியதை, மீடியாக்கள் வேறு மாதிரியாகத் திரித்து, செய்தி வெளியிட்டு உள்ளன' என, தெரிவித்து உள்ளார்.

- நமது டில்லி நிருபர் -



தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K Sanckar - Bengaluru ,இந்தியா
30-ஜூலை-201310:11:28 IST Report Abuse
K Sanckar 2014 பாராளுமன்ற தேர்தலிலும் அந்தர் பல்டி அடிக்க போகிறது காங்கிரஸ். மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
28-ஜூலை-201315:36:01 IST Report Abuse
K.Balasubramanian முதலில் திட்ட கமிசனை சில நாள் வாயடைக்க ஏற்பாடு செய்யவும் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
28-ஜூலை-201310:28:49 IST Report Abuse
Baskaran Kasimani தட்டு முழுவதும் இட்லி வைத்து கட்டு கட்டு என்று கட்டும் இவர் போன்றவர்கள் தின்றே தீர்த்து விடுவார்கள். ஆனால் ஏழைகளை மட்டும் இவர்களுக்கு தெரியவே தெரியாது...
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Fa Daf - bangalore,இந்தியா
28-ஜூலை-201308:30:46 IST Report Abuse
Fa Daf போய் அம்மா உணவகத்தில் சாப்பிடுங்க யர்ர் உங்களை அன்னை ஹோட்டல் போக சொன்னது . அன்னை ஐரோபிய பெண் ஐந்து நட்சத்திர ஹோட்டல் தான் போவர்கள். உன்னுடிய ருபாய் 5 , 12 டிப்ஸ் கொடுக்ககொட போதாது
Rate this:
4 members
0 members
22 members
Share this comment
Cancel
senthil - yishun,சிங்கப்பூர்
28-ஜூலை-201308:05:59 IST Report Abuse
senthil தனி நபர் வருமானமே கணக்கு பண்ண தெரியலே .,இவங்கள எப்படி இந்த துறையிலே வேலை கொடுத்தாங்க ??? ரொம்ப கஷ்டம்தான் ... நம்ப நாட்டோட நிலைமை .
Rate this:
0 members
0 members
20 members
Share this comment
Cancel
Mr. Right - Delhi, ,இந்தியா
28-ஜூலை-201306:30:08 IST Report Abuse
Mr. Right வறுமைக்கோடு, எல்லைக்கோடு 2 மே காங்கிரசுக்கு சிக்கல்தான்.... வருமைகோட்டில் காங்கிரசார் எல்லை மீறுகின்றனர்.... எல்லை கோட்டில் அண்டை நாட்டினர் எல்லை மீறுகின்றனர்.... இது மிகவும் கவலை அளிக்கிறது.. இப்படிக்கு பிரதமர்...
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel
ramalingam - chennai,இந்தியா
28-ஜூலை-201305:47:56 IST Report Abuse
ramalingam தனி நபரின் வருமானம் எந்த அளவுக்கு இருந்தால் போதும் என்பதே ஒரு திட்ட கமிஷன் துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கு தெரியவில்லை என்றல் இவர்கள் எல்லாம் நாட்டை எப்படி திட்டமிட்டு நடத்தமுடியும்.
Rate this:
1 members
0 members
41 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
28-ஜூலை-201305:11:35 IST Report Abuse
villupuram jeevithan இவ்வளவு காலம் கருணாவுடன் கூட்டணி இருந்தும் சரியா பல்டி அடிக்கத் தெரியவில்லையே காங்கிரசுக்கு?
Rate this:
3 members
0 members
31 members
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
28-ஜூலை-201305:07:22 IST Report Abuse
Samy Chinnathambi காங்கிரஸ் கட்சிக்கு ஒழுங்கா ஆள தெரிந்து இருந்தால் ஏன் நம்ப நாடு அறுபது சதவீதத்திற்கு மேற்பட்ட ஏழைகளை இத்தனை வருடங்களாக தாங்கி கொண்டு இருக்கிறது...நம் நாடு பணக்கார நாடாக இருந்த பொது சுற்றி இருந்த நாடுகள் எல்லாம் ஏழை நாடுகளாக இருந்தன...இப்போது சுற்றி உள்ள நாடுகள் பணக்கார நாடுகளாகவும் , இந்தியா ஏழை நாடாக உள்ளது....இன்னமும் காங்கிரஸ் கட்சியை ஆள விட்டால் இந்த நாடு இன்னும் இருபது ஆண்டு கழித்தும் எழுபது சதவீத மக்கள் ஏழைகளாக தான் இருப்பார்கள்.....பட்ஜெட் தொகை முழுவதையும் திருடி தின்று விட்டால் பின்பு எப்படி ஏழைகளுக்கான திட்டம் தீட்ட முடியும்..
Rate this:
2 members
0 members
66 members
Share this comment
Mani Pangan - Obajana,நைஜீரியா
28-ஜூலை-201308:13:44 IST Report Abuse
Mani Panganடாஸ்மாக் அனைத்திலும் ரேசன் கார்ட் என்ற அடையாள அட்டையை கட்டாயப்படுத்தினால் தெரியும் நாட்டில் எத்தனை பேர் வறுமைக்கோடு என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள் என்று... ...
Rate this:
4 members
0 members
10 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
28-ஜூலை-201304:15:03 IST Report Abuse
Thangairaja டி.ஆர்.பி., மதிப்பை உயர்த்தவும், தனியாரால் நியமிக்கப்படும் நிறுவன செய்திகளை ஊடுருவ செய்யவும் எல்லாவித தகிடு தத்தங்களையும் கையாள சில செய்தி நிறுவனங்கள் உறுதி பூண்டுள்ளது நிதர்சனமான உண்மை. மக்கள் அதை நம்பி முடிவெடுத்தால் நட்டாற்றில் விடப்படுவர். மண்டேக் சிங் அலுவாலியா ஒன்றும் காங்கிரசின் கொள்கை பரப்பாளர் கிடையாது. சரியான கருத்துக்களையே சொல்லி வரும் திக் விஜய் சிங் போன்றோர் விமர்சிக்கும் அளவுக்குத்தான் திட்டக்கமிஷனின் வறுமைக்கோட்டு வரையறை இருக்கிறது.
Rate this:
39 members
1 members
3 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.