Advertisement
272 இடங்களை கைப்பற்ற பாரதிய ஜனதா வியூகம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

30 ஜூலை
2013
02:49
பதிவு செய்த நாள்
ஜூலை 27,2013 23:52

புதுடில்லி:வரவிருக்கும் லோக்சபா தேர்லில், 272 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்ற, பாரதிய ஜனதா வியூகம் வகுத்துள்ளது. இதற்காக, நாடு முழுவதும் உள்ள கட்சியின் ஆதரவாளர்கள், பல்துறை வல்லுனர்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதிகளின் கருத்தை கேட்டுள்ள அக்கட்சி, இளைஞர்களை அதிக அளவில் ஈர்த்து வெற்றியை தங்கள் பக்கம் திருப்ப பலவிதமான பிரசாரங்களில் ஈடுபட முடிவு செய்து உள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதத்துடன், நடப்பு 15வது லோக்சபாவின் பதவிக் காலம் நிறைவடைகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த,பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அடுத்த ஆண்டு வரை காத்திராமல், முன்கூட்டியே தேர்தலை சந்திக்க உள்ளது என, பரவலாக பேசப்படுகிறது.அதனால் தான், பா.ஜ.,வும், தேர்தல் பிரசாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, பிரசாரக் குழு தலைவராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நியமித்துள்ளது. அவர் தலைமையிலான, பா.ஜ., இளைஞர் பட்டாளம்,ஆட்சியைக் கைப்பற்ற சூளுரைத்துள்ளது.

இரண்டாவது பெரிய கட்சி:



நடப்பு லோக்சபாவில், 116 இடங்களில் வெற்றி பெற்று, இரண்டாவது பெரிய கட்சியாக விளங்கும் பா.ஜ., வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், தனித்து, 272 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று,ஆட்சியைக் கைப்பற்ற விரும்புகிறது.அதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம், டில்லியில் நேற்று முன்தினம் நடந்தது. நாடு முழுவதும், 21 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் இருந்து வந்திருந்த பா.ஜ., ஆதரவு, பல்துறை வல்லுனர்கள், குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், இணையதள வடிவமைப்பாளர்கள், மொபைல் போன் தொழில்நுட்பத்தில் சிறந்தவர்கள் போன்றோர், இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இளைஞர்களை ஈர்க்கும் வகையில்,எப்படி, இணையதளம், மொபைல் போன் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் என, அவர்கள் விவாதித்துள்ளனர். உலக நாடுகள் எந்த நாட்டிலுமே இல்லாத வகையில், மொத்த மக்கள் தொகையில், 65 சதவீத இளைஞர்களைக் கொண்டுள்ள நம் நாட்டில், இளைஞர்களை ஈர்த்து விட்டாலே, ஆட்சியைப் பிடித்து விடலாம் என்பது தான், பா.ஜ.,வின் இப்போதைய எண்ணம்.

அதற்காக, இளைஞர்களை எளிதாக ஈர்க்கும் வகையில், அவர்கள் அதிகம் பயன்படுத்தும், தகவல் தொடர்பு சாதனங்களான, இணையதளம், மொபைல் போன் போன்றவற்றின் மூலம், கச்சிதமான தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு, இளைஞர்களை ஈர்ப்பது என, இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.கூட்டத்தை துவக்கி வைத்து பேசிய, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளர்களில் ஒருவராகவும் கூறப்படும், பிரபல வழக்கறிஞர் அருண் ஜெட்லி, நாடு இப்போது சந்திக்கும் பிரச்னைகள்,காங்கிரஸ் கட்சியின் ஊழல்கள், நாட்டின் பொருளாதார நிலை, வளர்ந்த நாடுகளின் முன்னேற்றம் போன்றவற்றை, இளைஞர் மத்தியில் எடுத்துச் செல்லும் வகையில்,தகவல் தொழில்நுட்ப ஊடகங்களில் தேர்தல் பிரசாரம் அமைய வேண்டும் எனவலியுறுத்தினார்.

இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு:



மேலும், லோக்சபா தேர்தலில், அதிக இளைஞர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் எனவும், அந்த கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது. எனவே, கட்சிக்கு கூடுதலாக, அதிக எண்ணிக்கையில், இளைஞர்களை ஈர்க்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.எனினும், பாரம்பரிய தேர்தல் பிரசார வழிமுறைகளான, பொதுக்கூட்டங்கள், பேரணிகள், வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு போன்றவற்றையும் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் அரசின் ஊழல்கள், இளைஞர்கள் மத்தியில் அலசப்பட்டுள்ளதால், அதையே சற்று கூடுதலாக விவாதித்து, ஓட்டுகளை தங்கள் பக்கம் ஈர்க்க, இந்தகூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அதிக அளவில், முன்னிறுத்தினால் தான், கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை, அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். ஏனெனில், தொடர்ந்து, நான்காவது முறையாக வெற்றி பெற்று, குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ள மோடியை தவிர்த்து, பிறரை, பிரதமர் வேட்பாளராக அறிவித்தால், கட்சியின் வெற்றிக்கு பின்னடைவு ஏற்படும் என்ற ரீதியிலும் அந்த கூட்டத்தில் பேசப்பட்டதாக, டில்லிவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மேலும், மன்மோகன் சிங் அரசுக்குஎதிரான தாக்குதலை தீவிரப்படுத்த, கூடுதல் செய்தித் தொடர்பாளர்களை நியமித்து, அவர்களில் பலரை, இளைஞர்களாக நியமிக்கவும், இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.



தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (24)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
28-ஜூலை-201316:47:33 IST Report Abuse
Pannadai Pandian 272 சீட்டுக்களை பிடிப்பது கடினம் என்றாலும் நரேந்திர மோடியை முன்னிறுத்தி பிரச்சாரத்தை ஹை டெக் லெவெலில் கொண்டு சென்றால் 250 இடங்களை தொட்டுவிடலாம். வட மாநிலங்கள் அனைத்திலும் மோடி பெயருக்காக வாக்குகள் விழும் பிஜேபி சீட்டுகள் பிடிக்கும். பீகாரில் நிதிஷ் கட்சியை விட பிஜேபி அதிக இடங்களில் வெல்லும். அதே போல மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மபி, உபி, டெல்லி, பஞ்சாப் ஆகிய இடங்களில் சாலிடாக சீட்டுகள் கிடைக்கும். வங்கத்தில் திதி தோர்ப்பார். தமிழகத்தில் 35 சீட்டுகளை பிடித்து மோடிக்கு ஆதரவாய் ஜெயா திகழ்வார். கர்நாடகத்தில் பிஜேபி அதிகப்படியான சீட்டுகளை பிடித்து மறுபடியும் தன் பலத்தை நிரூபிக்கும்.
Rate this:
96 members
1 members
48 members
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
28-ஜூலை-201315:33:33 IST Report Abuse
K.Balasubramanian 272 நல்ல தொகை .ஆசைபடுவதில் தவறில்லை . பலமான அணிகள் வேண்டும் மக்களை சிந்திக்க நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும் .இறை அருள் கிட்டட்டும் .
Rate this:
22 members
0 members
31 members
Share this comment
Cancel
A. Sivakumar. - Chennai,இந்தியா
28-ஜூலை-201315:11:35 IST Report Abuse
A. Sivakumar. பா.ஜ.க இதற்காக ரொம்பவெல்லாம் கஷ்டப்படத் தேவையில்லை... காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே ரொம்பவும் பாடுபட்டு பா.ஜ.க.விடம் அடுத்த ஆட்சியைக் கொடுத்துவிடும்... திரு.மோடியிடம் இழக்கப்போகும் ஆட்சியைத் திரும்பப்பெறக் காங்கிரஸ் ரொம்பவும் கஷ்டப்படவேண்டியிருக்கும், அத்தோடு நிறைய ஆண்டுகளுக்குக் காத்திருக்கவும் வேண்டியிருக்கும்... பொறுத்திருந்து பார்ப்போம்...
Rate this:
40 members
0 members
76 members
Share this comment
rajen.tnl - tirunelveli,இந்தியா
28-ஜூலை-201316:12:55 IST Report Abuse
rajen.tnlஇது மிகவும் உண்மையான கருத்து ..............
Rate this:
6 members
0 members
19 members
Share this comment
Cancel
Rss - Mumbai,இந்தியா
28-ஜூலை-201314:36:02 IST Report Abuse
Rss இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து பாஜக வெற்றி பெற போராட வேண்டும் மோடி பிரதமாராக வந்தால் இனி எல்லாம் நன்றாக நடக்கும்
Rate this:
51 members
0 members
55 members
Share this comment
sundar iyer - chennai,இந்தியா
31-ஜூலை-201311:07:26 IST Report Abuse
sundar iyerஇப்படித்தான் ஒவ்வொரு தேர்தலிலும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
karthikeyan - singapore,சிங்கப்பூர்
28-ஜூலை-201306:34:38 IST Report Abuse
karthikeyan மோடி தலைமையில் இந்தியா. நிச்சயம் பொற்கால ஆட்சி தருவார். அந்நிய சக்திகளிடம் மீண்டும் நாம் அடிமை ஆக கூடாது. சிந்தித்து வாக்களிக்கவும். இத்தாலி நாட்டு சோனியா நம் நாட்டை விற்று விடுவார் அவருக்கு நாட்டு பற்று நிச்சயம் வராது, இருக்காது .
Rate this:
30 members
0 members
50 members
Share this comment
Ram kumar - chennai,இந்தியா
31-ஜூலை-201315:55:36 IST Report Abuse
Ram kumarmika periya pakal kanavu...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
haja kuthbu - bandar seri bagawan.brunei  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூலை-201305:21:30 IST Report Abuse
haja kuthbu pagal kanavu...hahaha......
Rate this:
164 members
1 members
310 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
28-ஜூலை-201305:18:30 IST Report Abuse
villupuram jeevithan மோடிக்கு இருக்கும் வேகம், தேசப் பற்று மற்ற பிஜேபியினருக்கு இருக்குமா என்பது சந்தேகமே? எத்தனை எடுயூரப்பா இருக்கிறார்களோ? காமிரா முன்பு லஞ்சம் வாங்கும் தலைவர்கள் உடைய கட்சி தான். ஜெயா போல் அவ்வப்போது களை எடுத்தால் நல்லது.
Rate this:
17 members
78 members
84 members
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
28-ஜூலை-201304:51:13 IST Report Abuse
Samy Chinnathambi எனக்கு என்னமோ இந்த எண்ணிக்கையே கம்மியாக தெரிகிறது. மோடி வேட்பாளர் ஆகும் பட்சத்தில் பி.ஜே.பி கூட்டணி கட்சிகளின் துணையுடன் 300 இடங்களை வெல்லும்....காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் (திமுக, மயாவதி, பரூக், பவார், ரெட்டி) இணைந்து நூத்தி சொச்சம் இடங்களை தான் வெல்லும் வரும் தேர்தலில்...
Rate this:
328 members
0 members
488 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
28-ஜூலை-201304:31:10 IST Report Abuse
Thangairaja ஆசையோ அலை போல ....இந்த அலையில் நுரை அதிகம்........சில வினாடிகளிலேயே உடைந்து போகும். அமெரிக்காவிலிருந்து இயக்கப்படும் குஜராத் மிஷனை சேர்ந்தவர்கள் யாரும் வந்து ஓட்டுப் போடப் போவதில்லை. அதிகமாக துள்ளிக் குதிக்கும் தமிழக இளசுகள் இரட்டை இலை கரையேற பாடுபடுவார்கள். பிறகு எங்கிருந்து மெஜாரிட்டி காண்பது.உணர்வை தூண்டி ரத்த சொந்தங்களை எல்லாம் தேத்தி எடுத்தாலும் 200ஐ தாண்டுவது பகீரத பிரயத்தனம்.
Rate this:
315 members
6 members
513 members
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
28-ஜூலை-201303:14:15 IST Report Abuse
Sekar Sekaran மிகசுலபமான வெற்றியை பெற்றுவிடலாம் இந்த முறை. காங்கிரஸ் மீதான கடுமையான அதிருப்தி நாடெங்கும் உள்ளது. ஊழல்களை தெளிவாக எடுத்து சொன்னாலே போதும்..விலைவாசி உயர்வை தக்க விதத்தில் எடுத்து சொன்னாலே போதும்..ச்சீனா ஆக்கிரமிப்பை சொல்லி..நாட்டின் பாதுகாப்பினை எடுத்து சொன்னாலே போதும் காங்கிரஸ் புதைக்கப்படும்..இவற்றை எளிதாக சொல்லி குறிப்பிட்ட இலக்கையும் தாண்டி வெற்றிபெறலாம்தான்..ஆனால் உங்களுக்குள் ஒற்றுமை இல்லையே..ஒருவரை ஒருவர் காலைவாரி விடத்தானே முயற்சி செய்கின்றீர்கள்..இல்லையேல் ஆங்காங்கே மாநில கட்சிகள் வெற்றிபெற்றுவிடும். காங்கிரசும் ஓரளவு வெற்றிபெற கராணமாக உங்களுக்குள் இல்லாத ஒற்றுமை இன்மையே காரணமாக இருக்கும். அன்னிய சக்தியின் கீழ் உள்ள காங்கிரஸ் தோற்க்கடிக்கப்பட்டே தீரவேண்டும். இன்றைய நிலையை ஒற்றுமையாக எடுத்து சொன்னாலே போதும்..500 தொகுதியை வென்றுவிட முடியும்..நிதர்சனம்..இலக்கை மாற்றி அமையுங்கள்..
Rate this:
253 members
1 members
601 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.