DMK opposes congress | தி.மு.க., வேகமாக எதிர்ப்பதால் யாருடன் காங்., கூட்டணி? | Dinamalar
Advertisement
தி.மு.க., வேகமாக எதிர்ப்பதால் யாருடன் காங்., கூட்டணி?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த பின், தி.மு.க., - காங்., கட்சிகள் இடையே மீண்டும் கூட்டணி மலரும் என்ற எதிர்பார்ப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

காங்கிரசுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்ற அடிப்படையில், அக்கட்சியை வேகமாக தி.மு.க., எதிர்த்து வருவதால், காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுமா அல்லது தே.மு.தி.க.,வுடன் கூட் டணி அமைத்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில், மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், அகில இந்திய காங்கிரஸ் செயலர் திருநாவுக்கரசர் ஆகியோர் விரும்புகின்றனர். மற்ற கோஷ்டித் தலைவர்கள் தி.மு.க., கூட்டணியை விரும்பவில்லை.தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்கு, தனித்துப் போட்டியிட வேண்டும் அல்லது தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கருதுகிறார். அதனால் தான், தி.மு.க., கூட்டணியை அவர் விரும்பவில்லை.

ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு கடைசி நேரத்தில் காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆதரவு அளித்த காங்கிரசுடன் கூட்டணி இல்லை என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் அறிவித்தார். ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிட்ட, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி இல்லை என, தி.மு.க., வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை. மாறாக, தே.மு.தி.க.,வை பாராட்டி வருகிறது.மத்திய அரசை பிரச்னை அடிப்படையில் எதிர்ப்பதில், தி.மு.க., வேகம் காட்ட ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, ராணுவத் துறையிலும், தொலைத்தொடர்புத் துறையிலும் அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கு, கருணாநிதி கண்டித்து அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முன், முதல் நாளே கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, அமெரிக்கா செல்ல, "விசா' கொடுக்கக் கூடாது என, எழுதிய கடிதத்தில் தி.மு.க., - எம்.பி.,க்கள் கையழுத்திட்டிருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கருணாநிதி எச்சரிக்கை விட்டிருந்தார். லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின், பிரதமர் பதவிக்கு மோடி தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரது அதிருப்திக்கு தி.மு.க., ஆளாகி விடக்கூடாது என்பதற்காகத் தான், மோடிக்கு ஆதரவாக கருணாநிதி குரல் கொடுத்து உள்ளார்.

இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:தி.மு.க., - காங்., கூட்டணி மீண்டும் மலருவதற்குரிய வாய்ப்பு, தற்போதைய சூழ்நிலையில் மிகவும் குறைவாக இருக்கிறது. தி.மு.க.,வை பொறுத்தவரையில், தே.மு.தி.க.,வை கூட்டணியில் இழுத்துக் கொண்டால் போதும் என கருதுகிறது. அதனால் தான், மத்திய அரசை எதிர்ப்பதில், தி.மு.க., வேகத்தை அதிகரித்துள்ளது. பா.ஜ., பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலைக்கு கண்டனம், மோடி விசா கையெழுத்து விவகாரத்தில் தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு எச்சரிக்கை என, மெல்ல மெல்ல பா.ஜ., ஆதரவான நடவடிக்கைகளில் தி.மு.க., மூக்கை நீட்டுகிறது.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க, தி.மு.க., விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டால் கூட, சில தொகுதிகளை கைப்பற்றக் கூடும் என கருத்து கணிப்பு வெளிவந்திருப்பது, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனுக்கு உற்சாகம் அளித்துள்ளது.அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுக்கும் நடுநாயகமாக காங்கிரஸ் கட்சியை வழி நடத்திக் கொண்டு செல்வதால் தான், காங்., கட்சிக்கு ஓட்டு வங்கி அதிகரித்துள்ளது என, ஞானதேசிகன் கருதுகிறார். லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதம் இருப்பதால், அதற்குள் அரசியல் அரங்கில், பல மாற்றங்கள் நிகழக் கூடும். காங்கிரஸ் கட்சியை தி.மு.க., கழற்றி விட்டால், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் அல்லது காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் -

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (30)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RATHINAM.NN - TIRUPUR,இந்தியா
25-அக்-201321:36:18 IST Report Abuse
RATHINAM.NN இந்த மனிதர் தன்னை இன்னும் மக்கள் நம்புகிறார்கள் என்று இவர் நம்புவது அந்தோ பரிதாபம்.
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
28-ஜூலை-201314:41:10 IST Report Abuse
suresh திமுக,காங்கிரஸ் மறுபடியும் சேர்ந்து விடக்கூடாது என்று சில சக்திகள் வரிந்து கட்டிக் கொண்டு பின்ணணியில் வேலை செய்வதென்னவோ நிஜம்.
Rate this:
Share this comment
Cancel
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
28-ஜூலை-201313:57:31 IST Report Abuse
GUNAVENDHAN காங்கிரசுடன் கூட்டு வைக்காவிட்டால் தப்பித்துவிடலாம் என்று கருணாநிதி நினைக்கின்றார் என்று கருதுகிறேன், திமுக காங்கிரசுடன் கூட்டு வைத்தாலும் வைக்காவிட்டாலும் மிகவும் சொல்ப தொகுதிகளில் தான் வெற்றிபெற முடியம், அல்லது ஓரிரு தொகுதிகளில் தான் வெற்றி பெற முடியும் என்கிற நிலைமை தான் இன்றைய தேதியில் உள்ளது. மனைவி மீது வெறுப்பில் உள்ள ஒருசிலர் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தபிறகு, நாம் மட்டும் ஏன் சாகவேண்டும், நமக்கு பிறகு நம் மனைவி சந்தோசமாக வேறு வாருடனாவது வாழ நாம் ஏன் சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் , கொளுத்திக்கொண்டு சாகும் போது கூட , ஓடிப்போய் தன மனைவியை பலமாக கட்டிப்பிடித்துக்கொள்வார்கள் . ஒருவேளை கருணாநிதி அப்படியொரு முடிவெடுத்து , நாம் இந்த தேர்தலில் தோற்க்கபோவது நிச்சயம், விஜயகாந்த் கட்சியை ஏன் தனியே விட்டுவிடுவது - நம்முடன் எப்படியாவது கூட்டு சேர்த்து அந்த கட்சியையும் இனி தமிழகத்தில் தலைஎடுக்காதபடி செய்துவிட வேண்டும் என்று போட்டுத்தள்ளினாலும் போட்டுத்தள்ளுவார். விஜயகாந்த் தான் இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும் . கருணாநிதி வலையில் விழுந்து , கூட்டு சேர்ந்தால் அதற்க்கு பிறகு கட்சியை காப்பாற்றுவது இன்னமும் கஷ்டமான விஷயமாகி விடும்.
Rate this:
Share this comment
Cancel
abdulrahim - dammam ,சவுதி அரேபியா
28-ஜூலை-201308:31:41 IST Report Abuse
abdulrahim ஆகா எப்படியோ இன்னைக்கு தி.மு.க எதிர்ப்பாளர்களுக்கு வேண்டிய வெடிய கொளுத்தி போட்டாச்சு இனி உயிர் போகும் வரை புலம்பி தீர்த்து விடுவார்கள்.ம்ம் சிண்டு முடியும் வேலை கன கச்சிதம் போங்க .....
Rate this:
Share this comment
Cancel
E.Manoharan - madurai,இந்தியா
28-ஜூலை-201308:29:57 IST Report Abuse
E.Manoharan திமுக ஒரு ஓட்டை கப்பல். காங்கிரஸ் ஒரு மாய கப்பல். இரண்டும் ஒன்று சேர்ந்தாலும், இந்த இரண்டும் வேறு வேறு தனி கூட்டணி அமைத்தாலும் இவர்களோடு சேர்ந்த அவர்களும் காணாமல் போவது என்னவோ நிச்சயம். இனி இந்த அரக்கர்கள் எந்த ரூபத்தில் ஒட்டு கேட்டு வந்தாலும் ஆப்பு ஆப்புதான். இதுதான் மறைக்கவோ, மறுக்கவோ முடியாத தமிழக மக்கள் மனம். இளித்தவாயர்கள் முன் சேலையை தூக்கி ஆடும் டப்பாங் குத்து ஆட்டம் எல்லாம் இனி இங்கே செல்லுபடியாகாது. பாராளுமன்ற தேர்தல் சுனாமியில் கருணா, சோனியா இருவரும் காணாமல் போவது நிச்சயம்.
Rate this:
Share this comment
Cancel
Kanal - Chennai,இந்தியா
28-ஜூலை-201308:05:24 IST Report Abuse
Kanal திமுக காங்கிரஸ் கூட்டணி ஏற்படக்கூடாது என்பது பலரின் மனக்கவலை. கலைஞரின் இராஜதந்திரத்திற்கு முன் சூழ்ச்சிகள், வீழ்ச்சி காணும். கலைஞர் வெற்றிக்கூட்டணி அமைப்பார். குறைந்தது முப்பது தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும். பொறுத்திருந்து பாருங்கள்.
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
28-ஜூலை-201310:23:09 IST Report Abuse
சு கனகராஜ் சட்டசபையில் கூட 30 வெல்ல வாய்ப்பில்லை அணைந்து போன கனல் அவர்களே ...
Rate this:
Share this comment
Shanmuga Sundaram - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஜூலை-201315:29:04 IST Report Abuse
Shanmuga Sundaramஇன்னாது? ராஜ தந்திரமா? அப்படின்னா? கொஞ்ச நாட்களுக்கு முன்னாள் காலில் விழுந்து, அழுது புரண்டு. கதறியபடி ஊட்டு கேட்டார்களே, அது போலவா? ...
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
28-ஜூலை-201305:29:55 IST Report Abuse
Samy Chinnathambi காங்கிரசாவாது திமுக இல்லை என்றால் அதிமுகவிடம் ஒட்டி கொள்ளும் இல்லை என்றால் விஜயகாந்திடமாவது ஒட்டி கொள்ளும்.ஆனால் திமுகவுக்கு தான் காங்கிரசை விட்டால் வேறு நாதி இல்லை..பிரிந்து போன மனைவி ராமதாசை கூட்டி வந்தால் கூட ஒன்னும் தேறாது...தேமுதிக திமுகவுடன் கூட்டணி சேருவதற்கு வாய்ப்பே இல்லை இப்போதைக்கு...
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
28-ஜூலை-201310:23:41 IST Report Abuse
சு கனகராஜ் பரிதாபம் அந்தோ பரிதாபம் ...
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
28-ஜூலை-201305:23:10 IST Report Abuse
villupuram jeevithan அதிக இடங்களில் நிற்கவேண்டும் என்று விரும்புகிறார் கருணா. எனவே ஜெயா போல் அகில இந்திய பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க விரும்பமாட்டார். தேர்தலுக்கு பிறகு தான் கட்டாயம் அவர்களுடன் கூட்டு?
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
28-ஜூலை-201310:24:18 IST Report Abuse
சு கனகராஜ் அதிக தொகுதிகள் என்றால் 534 தொகுதிகளிலும் நிற்பாரோ ?...
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
28-ஜூலை-201304:41:27 IST Report Abuse
Thangairaja ஒரு அவசரமும் இல்லை. காங்கிரசோ, பாஜகவோ அல்லது வேறு கட்சிகளோ அரசியல்ரீதியில் திமுகவுக்கு எதிரானவை அல்ல. தேர்தலுக்கு முன்போ, பிறகோ இந்த கட்சிகள் திமுகவை நோக்கி ஒடி வரும். காசு வாங்கிக் கொண்டு கணிப்புகளில் கிறுக்குத்தனம் செய்வோர் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு அடுத்த லோக்சபாவிலும் அக்கட்சி முக்கியத்துவம் பெரும்.
Rate this:
Share this comment
Cancel
Devanand Louis - Chennai,இந்தியா
28-ஜூலை-201303:33:43 IST Report Abuse
Devanand Louis தி.மு.க கருணாநிதியின் தலைமையில் உள்ளதால் , அவர் வயதிற்கேற்ற செயல் செய்யமாட்டார் , அப்பொழுதும் கிண்டல் , மழுப்பல் ,திரிதுபெசுவது அவரது பரம்பரி வியாதிகளில் ஓன்று ஆகையால் தி.மு.க சொல்லும் கூட்டணயில் எந்த கட்சியும் சேரவேண்டாம் என்பது தமிழக மக்களின் வேண்டுகோள் .மேலும் தி.மு.க வரும் தேர்தல்களில் மன்னைகவ்வும் என்பது நிச்சயம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்