DMDK spoke to bjp over alliance | லோக்சபா கூட்டணிக்கு தே.மு.தி.க., முயற்சி | Dinamalar
Advertisement
லோக்சபா கூட்டணிக்கு தே.மு.தி.க., முயற்சி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ராஜ்யசபா தேர்தலில் காங்.,கட்சியிடம் ஏமாந்த தே.மு.தி.க., தலைமை, லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பதற்கான ரகசிய பேச்சு வார்த்தையை துவங்கியுள்ளது.கடந்த, 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முதல், உள்ளாட்சி தேர்தல், பல தொகுதி சட்டசபை இடைத் தேர்தல்களை தனித்து சந்தித்த தே.மு.தி.க., கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், முதல் முறையாக, அ.தி.மு. க.,வுடன் கூட்டணி அமைத்தது. தே.மு.தி.க., எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. அதன்பின், உள்ளாட்சி தேர்தலில், ஏற்பட்ட கூட்டணி முறிவுக்கு பின், இவ்விரு கட்சிகளும், எலியும், பூனையுமாக இருந்து வருகின்றன.

தவிர்ப்பு:


தே.மு.தி.க., - எம்.எல். ஏ.,க்கள் ஏழு பேரையும், தங்கள் பக்கம் அ.தி.மு.க., இழுத்துள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், கனிமொழியை வேட்பாளராக அறிவித்த தி.மு.க., தலைமை, தே.மு.தி.க., ஆதரவை பெற தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. வேட்பாளரை விஜயகாந்த் வீட்டிற்கே அழைத்துச்சென்று, அவரது ஆசியை பெறுவதற்கும் தி.மு.க., முக்கியப் புள்ளிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கடந்த ஆட்சிக்காலத்தில், அக்கட்சியால் ஏற்பட்ட கசப்புணர்வை மறக்காத விஜயகாந்த், தி.மு.க., விற்கு ஆதரவளிப்பதை தவிர்த்துவிட்டார்.

காங்., ஆதரவை பெறுவதற்கான தீவிர முயற்சியில் தே.மு.தி.க., தலைமை இறங்கியது. ஆனால், கடைசி நேரத்தில், காலை வாரிய காங்., கட்சி, தன் பழைய நண்பனான தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவித்தது. இதனால், தே.மு.தி.க.,வின் வெற்றி கனவு கலைந்தது. ராஜ்யசபா தேர்தலில், காங்., ஆதரவு கிடைத்தால், அதை வைத்து, அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், புது கூட்டணி அமைக்கலாம் என்று தே.மு.தி.க., தலைமை திட்டம்போட்டிருந்தது. ஆனால், காங்., கைவிரித்ததால், ஆரம்பக் கட்டத்திலேயே அத்திட்டம் நின்று போனது.நம்ப வைத்து ஏமாற்றிய காங்., கட்சியை நம்பினால், லோக்சபா தேர்தலிலும், இதே நிலைதான் ஏற்படும் என, தே.மு.தி.க., நிர்வாகிகள் பலரும் கருத துவங்கியுள்ளனர். அதனால், பா.ஜ.,வுடன் இணைந்து லோக்சபா தேர் தலை சந்திக்க, அக்கட்சி தயாராகி வருகிறது.

மோடியுடன் பேச்சு :


பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான மோடியிடம் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. பா.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க., இணைவதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர், இதுதொடர்பாக தொடர்ந்து பேசுவோம் என்று மட்டும் கூறியதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வருடன், அவர் நட்புறவில் உள்ளதால், இங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்த பிறகே, கூட்டணி தொடர்பான முடிவை எடுப்பதற்காக, அவர் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.அதே நேரத்தில், தமிழக பா.ஜ., நிர்வாகிகள் தரப்பில், தே.மு.தி.க., மட்டுமின்றி ம.தி.மு.க., - பா.ம.க., மற்றும் சிறிய கட்சிகளை இணைத்து, புதிய கூட்டணி அமைக்க முயற்சி நடக்கிறது. ஆனால், இம்மூன்று கட்சிகளும், ஒன்றோடு ஒன்று இணைவதில், பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதனால், அவற்றை சரி செய்து, முதற்கட்ட பணிகளை தமிழக பா.ஜ.,வினர் துவங்கி உள்ளதாக தெரிகிறது. இந்த, கூட்டணி முயற்சிகளுக்கான, விடை விரைவில் தெரியவரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
28-ஜூலை-201316:01:40 IST Report Abuse
Pannadai Pandian தேமுதிக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டு வைத்தால் கண்டிப்பாக வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் அதிமுகவுக்கு செல்லும் பிஜேபி வாக்குகள் கூட்டணிக்கு கிடைக்கும். ஆனால் எந்த ஒரு தொகுதியிலும் வெல்ல முடியாது. நாயுடு கட்சிகள் ஒன்று சேர முடியாது, எனவே மதிமுக தேமுதிக கூட்டணியை மறந்து விடுங்கள். வட தமிழ்நாட்டில் ராமதாசின் மூக்கை அறுத்த விஜயகாந்த் மீது பாமக என்றும் பகையாளிதான். எனவே மதிமுக, பாமக கூட்டணி எல்லாம் நடவாத காரியம். தோழர்களும் பிஜேபியோடு கூட்டணி வைக்க மாட்டார்கள்.எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது. திமுக காங்கிரஸ் ஒன்றாக சேர்ந்து நின்றாலும் தோற்க போவது உறுதி. காங்கிரசின் மத்திய ஆட்சிக்கு மக்கள் தண்டனை கொடுக்க ரெடி ஆகிவிட்டார்கள் திமுகவின் திருட்டு ஆட்சியை மக்கள் இன்னும் மறக்கவில்லை. தற்போது தமிழகத்தில் நடப்பதோ நல்லாட்சி மக்கள் அதற்கே உரிய வாய்ப்பை தருவார்கள்.
Rate this:
233 members
2 members
80 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
28-ஜூலை-201308:57:33 IST Report Abuse
Srinivasan Kannaiya தீர்மானத்தை தண்ணீரில் எழுதலாமா....தேர்தல் ஒரு மாதம் முன்பு வரை ரப்பராகதான் விஜய காந்த் இழுப்பார்..
Rate this:
2 members
1 members
43 members
Share this comment
Cancel
தேன் தமிழ் - Salem,இந்தியா
28-ஜூலை-201308:19:37 IST Report Abuse
தேன்  தமிழ் I wish everyone watches the video Narra Modi Speech at Chennai in youtube. it will show who is narra modi and what he went through by the congress torture.
Rate this:
6 members
1 members
18 members
Share this comment
Cancel
Kanal - Chennai,இந்தியா
28-ஜூலை-201308:10:00 IST Report Abuse
Kanal இதுதான் சரியான போட்டி. மும்முனைப்போட்டி. நிருபரின் ஆசை நிஜமாகட்டும்.
Rate this:
4 members
2 members
227 members
Share this comment
Cancel
bhavani - adyar,இந்தியா
28-ஜூலை-201306:15:17 IST Report Abuse
bhavani அ.தி.மு.க. உங்களை அழிக்கும் கூட்டனி நடக்காது.
Rate this:
4 members
1 members
9 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
28-ஜூலை-201305:30:21 IST Report Abuse
villupuram jeevithan பாவம், தனது வாயால் கெடுத்துக் கொண்டுவிட்டு அலைந்து கொண்டிருக்கிறார் கோர்ட் கோர்ட்டாக? இப்போ கூட்டணிக்கு கட்சிக்காக அலைந்து கொண்டிருக்கிறார்?
Rate this:
36 members
1 members
71 members
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
28-ஜூலை-201304:59:45 IST Report Abuse
Samy Chinnathambi மிகவும் நல்லது...மூன்றாவது கூட்டணியை ஜரூரா பாருங்க கேப்டன்...பி.ஜே.பி, வைகோ, விஜயகாந்த் மற்றும் சிறு கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்க வேண்டும்..எப்படி இருந்தாலும் முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் திமுகவுடன் தான் இணைந்து நிற்கும். அவர்களுக்கு காலம் காலமாக இரண்டு திராவிட கட்சிகளின் தோளில் சவாரி செய்து தான் பழக்கம். அவைகளை நம்பி பிரயோஜனம் இல்லை..பா.ம.க விஜயகாந்தை வெளிப்படையாக விமர்சித்து வந்ததால் இந்த கூட்டணிக்குள் வருவது கஷ்டம். மீறி அவர்கள் வந்தால் கூட்டணி மேலும் வலுப்பெறும்..
Rate this:
11 members
16 members
90 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
28-ஜூலை-201304:50:26 IST Report Abuse
Thangairaja தலை பிஞ்சு பொஇட்திரியர கேப்டனை ஏன்யா கடுப்பெத்தரீங்க............அவரு தனிச்சுத்தான் நிப்பாரு........
Rate this:
19 members
0 members
38 members
Share this comment
Cancel
Good Man - Doha,கத்தார்
28-ஜூலை-201302:41:56 IST Report Abuse
Good Man Captain please take good decision..Joining BJP is good move..Please forget misunderstanding with PMK & MDMK....If four parties join hands, 40 MP seats conform..Jaihind.
Rate this:
17 members
0 members
70 members
Share this comment
Thangairaja - tcmtnland,இந்தியா
28-ஜூலை-201309:04:31 IST Report Abuse
Thangairajaஆசை, தோசை .......இது மட்டும் நடந்து விட்டால் திமுக நாற்பதையும் அள்ளிக் கொண்டு போகும். உன்னால நான் கேட்டேன்...கதையா இவர்களும், அதிமுகவும் கொக்கு மாதிரி காத்திருக்க வேண்டியது தான். நல்லது நடக்கட்டும் முயற்சி செய்யுங்கப்பா..........
Rate this:
13 members
1 members
58 members
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
28-ஜூலை-201302:25:47 IST Report Abuse
Vettri மக்களுடனும் மற்றும் கடவுள் உடன் தான் கூட்டணி என்ற கோஷம் என்னாச்சு?
Rate this:
25 members
4 members
113 members
Share this comment
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
28-ஜூலை-201308:21:50 IST Report Abuse
Samy Chinnathambiஅப்போ பி.ஜே.பி தொண்டர்கள் மக்கள் இல்லையா?...
Rate this:
18 members
1 members
59 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்