பாசனத்திற்காக மேட்டூர் அணை ஆக., 12ம் தேதி திறப்பு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை:""டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்காக, மேட்டூர் அணையிலிருந்து, ஆக., 12ம் தேதியில் இருந்து, தண்ணீர் திறந்து விடப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை:நான், மூன்றாம் முறையாக, ஆட்சி பொறுப்பேற்றதும், மேட்டூர் அணையின் நீர் இருப்பு, விவசாயிகளின் எதிர்பார்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஜூன், 12ம் தேதி, மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு, தண்ணீர் திறந்து விடுவதற்கு பதிலாக, 2011ம் ஆண்டு முன் கூட்டியே, ஜூன், 6ம் தேதி, தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டேன்.இதன் காரணமாகவும், விவசாயிகளுக்கு புதிய சலுகைகளை வழங்கியதாலும், விவசாயத்தில் புதிய உத்திகளை கையாண்டதாலும், அந்த ஆண்டு, உணவு தானிய உற்பத்தியில், தமிழ்நாடு, 101.52 லட்சம் டன் அளவை எட்டி, சாதனை படைத்தது. இதற்கான மத்திய அரசின் விருதும், தமிழகத்திற்கு கிடைத்தது.


மழை இல்லை :

கடந்த ஆண்டு, பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும், காவிரி நீரில், தமிழகத்திறகுரிய பங்கைத் தர, கர்நாடகம் மறுத்ததாலும், செப்டம்பர், 17ம் தேதி தான், மேட்டூர் அணையிலிருந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.நடப்பாண்டு, ஜூன், 12ம் தேதி, மேட்டூர் அணையின் நீர்மட்டம், 17.82 அடியாக இருந்தது. பயன்படுத்த முடியாத அளவிற்கு, மிகக் குறைந்த தண்ணீரே இருந்ததால், சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிட முடியவில்லை.


நீர்வரத்து:

தற்போது, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரடைந்துள்ளது. அங்குள்ள முக்கிய அணைகளான ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஆகியவை முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. கடந்த சில நாட்களாக, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து, உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவ மழை நன்றாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், இம்மாத இறுதிக்குள், மேட்டூர் அணை நீர்மட்டம், 55 டி.எம்.சி.,யாக உயரக்கூடும். செப். 30ம் தேதிக்குள், 90 டி.எம்.சி., தண்ணீர், அணைக்கு வரக்கூடும்.வடகிழக்கு பருவமழை மூலம், 48 டி.எம்.சி., நீர்வரத்து, தமிழகத்திற்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள், 193 டி.எம்.சி., நீர் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


உத்தரவு :

மேட்டூர் அணை நீர் இருப்பு, 60 முதல், 65 டி.எம்.சி.,யாக இருக்கிறபோது, பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். எனவே, வழக்கம் போல், 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், நீண்ட கால மற்றும் நடுத்தர கால, சம்பா சாகுபடி மேற்கொள்ள வசதியாக, மேட்டூர் அணையிலிருந்து, ஆக., 12ம் தேதியிலிருந்து, பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும்.சம்பா சாகுபடியை, விவசாயிகள் மேற்கொள்ள தேவையான, முன்னேற்பாடு நடவடிக்கைகளை, வேளாண்மைத் துறை எடுக்கும். விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து, ஆகியவை இருப்பு உள்ளன.விவசாயத்திற்கு தேவையான கருவிகளை, குறைந்த வாடகையில் வழங்க, வேளாண் பொறியியல் துறை, தயார் நிலையில் உள்ளது.இவ்வாறு, ஜெயலலிதா கூறியுள்ளார்.


40வது முறை:

கடந்த மாதம், 25ம் தேதி, 15 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று, 90 அடியாகவும், நீர் இருப்பு, 52 டி.எம்.சி.,யாகவும் உயர்ந்தது. நேற்று வினாடிக்கு, 52,710 கன அடி நீர் வந்தது. நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் குறைந்ததால், நேற்று முன்தினம், வினாடிக்கு, 36,000 கன அடியாக இருந்த கபினி உபரி நீர் திறப்பு நேற்று காலை, 30,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது.வினாடிக்கு, 62,180 கன அடியாக இருந்த கே.ஆர்.எஸ்., உபரி நீர் திறப்பு நேற்று, 64,728 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு, 94,728 கன அடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்படுவதால், மேட்டூர் அணை நீர்மட்டம் இரு நாட்களில், 100 அடியை எட்டும்.ஆடி, 18 பண்டிகைக்காக, மேட்டூர் அணையில் இருந்து, நேற்று காலை முதல், ஆக., 2ம் தேதி வரை, வினாடிக்கு, 6,000 கன அடி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் கொள்ளளவு, 93.470 டி.எம்.சி., அணை நிரம்ப இன்னமும், 40 டி.எம்.சி., நீர் தேவை. அணை கட்டி, 79 ஆண்டு ஆன நிலையில், 2010 டிசம்பர், 2ம் தேதி, 39வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. வறட்சியால் கடந்த, 2011, 2012 ஆகிய இரு ஆண்டுகள், அணை நிரம்பாத நிலையில், நடப்பாண்டு மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்புள்ளது.


ஒகேனக்கலில் 96,000 கன அடி தண்ணீர் :

ஒகேனக்கல் காவிரியாற்றில், வினாடிக்கு, 96,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று அதிகாலை முதல் வினாடிக்கு, 55,000 கனஅடியில் இருந்து, படிப்படியாக தண்ணீர் வரத்து அதிகரிக்கத் துவங்கியது.நேற்று மாலை, 4:00 மணியளவில், வினாடிக்கு, 96,000 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல் காரையேரம் உள்ள, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் நீரேற்று மையத்தை, காவிரி நீர் தொட்டுச் சென்றது.ஒகேனக்கல் அருவிக்குச் செல்லும் நடைபாதையில், 2 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் சென்றது. ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீர் அளவு மேலும் அதிகரித்து, இன்று இரவு வினாடிக்கு, 1 லட்சம் கனஅடிக்கு மேல் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வெள்ளப் பெருக்குக் காரணமாக, ஒகேனக்கல் காவிரி கரையேரங்களில் குளிக்க, பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatraman - kudavasal (tk)  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூலை-201305:50:26 IST Report Abuse
venkatraman போன சம்பா பருவ வட்டி இல்லா நகை கடனை வட்டியை தள்ளுபடி செய்யுமாறு புரட்சி தலைவி அம்மா அவர்கள் உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு கூந்தலூர் தொடக்க வேளாண்மை வங்கியில் நகை வைத்து தி்ருப்பமுடியாமல் தவிக்கும் சிறுவிவசாயிகள் இந்த செய்தி் அம்மா புரட்சி தலைவி அவர்கட்கு சென்றடைய தி்னமலர் நாளிதலும் விவசாயிகளாகிய எங்களுக்கு உதவ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் தாழ்மையுடன்
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
28-ஜூலை-201305:25:20 IST Report Abuse
villupuram jeevithan வருணபகவான் கடைக்கண் கர்நாடாகா மீது பட்டதால் தமிழ்நாட்டிற்கும் கிடைக்கிறது?
Rate this:
Share this comment
Cancel
Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா
28-ஜூலை-201300:55:44 IST Report Abuse
Vilathur Nandhiyar நன்றி முதல்வர் அவர்களே
Rate this:
Share this comment
Thangairaja - tcmtnland,இந்தியா
28-ஜூலை-201304:46:55 IST Report Abuse
Thangairajaஎன்னாத்துக்கு...............
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
28-ஜூலை-201305:25:56 IST Report Abuse
villupuram jeevithanவருண பகவானுக்கு அல்லவா நன்றி சொல்லவேண்டும்?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்