தவறான பாதையில் அழைத்து செல்லும் அரசியல் கட்சிகள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

எந்தவொரு கட்சியிலும் பிரச்னையான நேரங்களில், பேருந்துகளை சேதப்படுத்துவதும், பயணிகளை தாக்குவதையும், வாடிக்கை கலாசாரமாக வைத்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, 800க்கும் மேற்பட்ட, அரசு மற்றும் தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில், 600க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து கழகங்கள், இதிலிருந்து மீள முடியாமல் தவித்து வந்த நிலையில், கல்லூரி மாணவர்களால், அரசு பேருந்துகளுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது."யாரு பெரிய ஆளு?' என்கிற ஆரோக்கியமற்ற போட்டியில், மாணவர்களிடையே மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த மோதல்களிலும், அரசு பேருந்துகள் தாக்கப்படுகின்றன.

இதற்கு முடிவு கட்டுவதற்காக, துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்த இடைவெளியில், பா.ஜ.,வைச் சேர்ந்த ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதம்அடைந்து உள்ளன.
இதே போல, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பிரதான கட்சிகளும், பல்வேறு சம்பவங்களில், பேருந்துகளை சேதப்படுத்திய சம்பவங்கள் நிறையவே. பிரச்னையான நேரங்களில் அறவழியில் போராட வேண்டிய அரசியல் கட்சியினர், மக்களின் பொது சொத்தான அரசு பேருந்துகளை சேதப்படுத்தி, வன்முறை கலாசாரத்திற்கு வழி வகுக்கின்றனர்.இந்த கலாசாரமே, பேருந்துகளை சேதப்படுத்தும் எளிதான மன நிலைக்கு மாணவர்களை அழைத்து சென்றுள்ளது.

தேர்தல் அறிக்கையில், பல்வேறு திட்டங்களையும், உதவிகளையும் வழங்குவதாக உறுதிஅளிக்கும் அரசியல் கட்சியினர், வரும் காலங்களில் தேர்தலை சந்திக்கும்போது, "பேருந்துகளை சேதப்படுத்த மாட்டோம்' என்கிற உறுதி மொழியை அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan Thamotharan - Chennai,இந்தியா
02-ஆக-201318:28:47 IST Report Abuse
Nagarajan Thamotharan பொது சொத்துக்கு சேதம் விளைவித்தால் அந்தந்த அரசியல் கட்சியிலிருந்து சேதத்தொகையை இரட்டிப்பாக வசூலிக்க படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
28-ஜூலை-201308:33:42 IST Report Abuse
Thangairaja பாமகவிடம் காட்டிய வேகத்தை பாஜகவிடமும் அரசு காட்டியிருந்தால் இனி வரக்கூடிய காலங்களிலாவது இது போன்ற சம்பவங்கள் குறைய வாய்ப்பிருந்தது. ஒரு கண்ணில் சுண்ணாம்பு மறு கண்ணில் வெண்ணை வைத்தால் பலசாலி செய்தால் தவறில்லை என்றாகி விடுகிறதல்லவா......பிறகு பயம் எங்கிருந்து வரும். காவல் துறையை மட்டும் குற்றம் சொல்லி என்ன பயன்?
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
28-ஜூலை-201305:42:41 IST Report Abuse
Samy Chinnathambi அதுக்கு சாமி மாதிரியான போலிஸ் அதிகாரிகள் தேவை...பேருந்தை உடைச்சா உன் கைய ஒடிப்பேன்...கடைகளை உடைக்கிரியா உன் காலை உடைப்பேன்...பொதுமக்களை மிதிக்கிரியா உன்னை குப்புற படுக்க போட்டு மிதிப்பேன்.....இப்ப உள்ள போலிஸ் காரங்க எல்லாம் நல்ல கை நீட்டி காசு வாங்கி புல்லா குடிச்சுபுட்டு ஓசியில ஓட்டல்களை மிரட்டி சாப்பாடு வாங்கி சாப்பிட்டு தொப்பையை பெருக்க வச்சுக்கிட்டு புல்டோசர் மாதிரி நிக்கிறாங்க...மோட்டார் பைக்குல உக்காந்தா பெட்ரோல் டான்கயே தொப்பை மறைச்சுகுது..
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
28-ஜூலை-201305:32:32 IST Report Abuse
villupuram jeevithan பொது மக்கள் தங்களது பிரச்சனைகளுக்காக சாலை மறியல் செய்கிறார்கள். அரசியல் கட்சிகள் பஸ்களை அடித்து நொறுக்குகிறார்கள்? அந்த கலாச்சாரம் மக்களுக்கு தொத்திக் கொள்ளாமல் இருந்தால் சரி?
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
28-ஜூலை-201301:16:02 IST Report Abuse
Ab Cd பாமாகவை, பொது சொத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வழக்கு பதிவு செய்திருக்கும் ஜெயலலிதா, பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் சம்பத்தப்பட்ட தனது கட்சியில் இருக்கும் அமைச்சர்கள், MLA க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்