E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அரசு பள்ளிகளில் பெயரளவில் ஆங்கில வழி கல்வி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

28 ஜூலை
2013
01:08
பதிவு செய்த நாள்
ஜூலை 28,2013 00:01

தமிழக அரசு துவக்கப் பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கும், தமிழ்வழி அட்டை மூலமே, பாடம் நடத்துவதால், பெயரளவில் மட்டுமே ஆங்கில வழிக்கல்வி உள்ளது. இதனால் பெற்றோர் கடும் அதிருப்திஅடைந்துள்ளனர்.

நடுநிலை பள்ளி:



தமிழகத்தில், சில ஆண்டுகளாகவே துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை, கடும் சரிவை சந்தித்து வந்தது. மக்கள் தொகை அதிகரிப்பால், ஆண்டுக்காண்டு அதிகரிக்க வேண்டிய, முதல் வகுப்பு சேர்க்கை, குறைந்து கொண்டே வந்ததற்கு முக்கிய காரணம், பிரைமரி, நர்சரி பள்ளிகள்.இதனால் கட்டணம் கட்ட வழியில்லாதவர்கள் மட்டுமே, அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். ஆண்டுக்காண்டு, மாணவர்களின் எண்ணிக்கை குறைவதால், அதற்கேற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் ஆசிரியர்களின் அதிருப்தி, ஆசிரியர் சங்கங்களின் எதிர்ப்பு உள்ளிட்டவை களால், 40:1 என்ற விகிதத்தில் இருந்த மாணவர், ஆசிரியர் விகிதத்தை, 30:1 என்ற விகிதத்தில் மாற்றிஅமைத்தனர்.இருந்த போதும், மாணவர் எண்ணிக்கை அதிகரிக்காததால், பணிபுரியும் ஆசிரியர்களின் பதவியை தக்க வைத்துக்கொள்ள, "ஆங்கில வழிக்கல்வி' என்ற கோஷத்தை முன்வைத்தது. இதை அரசும் ஏற்று, அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி துவக்க உத்தரவிட்டுள்ளது.

எண்ணிக்கை:



ஆங்கில வழிக்கல்வி என்றதும், தனியார் பள்ளிகளில் பணம் கட்ட சிரமப்படும், பெற்றோர் ஆவலுடன் அரசு பள்ளிகளில் சேர்த்தனர். இதனால் கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு முதல் வகுப்பில், மாணவர் எண்ணிக்கை அதிகரித்தது.கடந்த ஆண்டு முதல் வகுப்பில், 3 லட்சத்து, 21 ஆயிரத்து, 947 மாணவர்கள் சேர்ந்தனர். நடப்பாண்டில், 4 லட்சத்து, 14 ஆயிரத்து, 567 பேர் சேர்ந்துள்ளனர். 93,000 மாணவர் எண்ணிக்கை அரசு பள்ளிகளில் அதிகமாகியுள்ளதாக கல்வி துறை அலுவலர்களும் பெருமிதப்பட்டு கொள்கின்றனர்.ஆனால், பள்ளிகளில் காணும் நிலையோ, தலைகீழாக உள்ளது. ஆங்கில வழிக்கல்வி மோகத்தில், பெரும்பாலான பள்ளிகளில் இருந்த மொத்த தமிழ் வழிக்கல்வி மாணவர்களும், ஆங்கில வழிக்கல்விக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால், தமிழ் வழிக்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்துக்கும் குறைவாக சுருங்கிஉள்ளது.நகர்ப்புற பள்ளிகளில் பெரும்பாலும், இரு ஆசிரியர் கொண்ட பள்ளிகளாகவே உள்ளதால், அவற்றில், தமிழ் வழிக்கல்வி மற்றும் ஆங்கில வழிக்கல்வி என, அனைத்து மாணவர்களையும், ஒரே வகுப்பில் அமரவைத்து, ஒரே ஆசிரியர் பாடம் நடத்துகிறார்.அதே போல், ஆங்கில வழிக்கல்விக்கென, செயல் வழிக்கற்றல் அட்டை எதுவும் வழங்கப்படாததால், அவர்களுக்கும், தமிழ் வழிக்கல்விக்கான அட்டை மூலமே கற்பிக்கப்படுகிறது. இதனால் பெயரளவில் மட்டுமே, ஆங்கில வழிக்கல்வியில் சேர்க்கப்பட்டு, வகுப்பு சூழலில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.

செயல் வழிக்கற்றல்:



இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:ஆங்கில வழிக்கல்வி என்றால், அதற்கென தனி ஆசிரியர், தனி வகுப்பறை, பாடப்புத்தகம், செயல் வழிக்கற்றல் அட்டை என, அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். ஆனால், இங்கு எல்லாமே, தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கு வழங்குவதையே, கொடுத்துள்ளனர். இதனால் தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கு பயந்து, அரசு பள்ளியில் சேர்த்த பெற்றோரின் நம்பிக்கையும் உடைக்கப்படுகிறது.இதனால், அரசுப் பள்ளிகளில் இருந்த தமிழ் வழிக்கல்வி அழிவதோடு, தனியார் பள்ளிகளுக்கு சாதகமாகவே அமைந்துவிடும். இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர்களும் அரசும், தெளிவான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -



தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
villupuram jeevithan - villupuram,இந்தியா
28-ஜூலை-201305:35:38 IST Report Abuse
villupuram jeevithan பெரும்பாலான கலை அறிவியல் கல்லூரிகளிலும் இதே நிலைமை தான். படிப்பது ஆங்கிலவழி, பாடம் நடத்தப்படுவது தமிழ் வழி, மாணவர்கள் எழுதுவது தமிழ்மொழியில் தான். இப்போது பொறியியல் கல்லூரிகளிலும் இந்த நிலைமை வந்துவிட்டது.
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
Cancel
Loganathan - Madurai,இந்தியா
28-ஜூலை-201305:24:26 IST Report Abuse
Loganathan சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்.ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் கர்ப்பிப்பது மிகவும் கடினம்.
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
28-ஜூலை-201302:59:38 IST Report Abuse
Manian Teaching of English is difficult. 99% of the teachers are not qualified to teach in English. Their pronunciation- phonetic enunciation, understanding of the English grammar etc., are so poor, it is assumed British left India. When British left India, they did not leave a large amount of best English teachers. India, Japan, China etc., teaches to how to write and read, but not how to speak nicely in English. We do not show movies and TV shows to teach the kids to speak well. Most parent do not talk either good Tamil or English. So, without an environment to speak English, we are producing graduates who can not communicate well in English, thus can not move out of Tamilnadu to get better job. Percentage wise it is high. Also,s teachers and public redicule children that try to talk in English, such as " This dorai has come to India in a damaged ship" etc. Also, when we admit candidate to education degree to prepare them to be teachers, merit is never used as an important characteristics. Saddist, middle children with unhappy childhood become teachers and all they know is how to avoid teaching, how to punish and beat the children and so on. So, let us not complain and start nonprofit foundations to do this. But political crooks and money greedy business people will never allow this to happen.
Rate this:
4 members
0 members
11 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.