Karunanidhi questions tamil nadu government | இது தான் முன்னோடியா: கருணாநிதி கேள்வி| Dinamalar
Advertisement
இது தான் முன்னோடியா: கருணாநிதி கேள்வி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை:"இந்த ஆண்டு குறுவை சாகுபடி "அம்போ' ஆகிவிட்டது என்பது உறுதியாகிவிட்டது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:சம்பா சாகுபடிக்காக, மேட்டூர் அணை, ஆகஸ்ட் மாதம், 12ல் திறக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதிலிருந்து, இந்த ஆண்டு குறுவை சாகுபடி, "அம்போ' ஆகிவிட்டது என்பது உறுதியாகியுள்ளது.முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடும் வகையில், பாசன ஆதாரங்களை வலுப்படுத்துவதிலும், வேளாண் துறையில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதிலும், விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், இந்தியாவிற்கே முன்னோடியாக என் தலைமையிலான தமிழக அரசு விளங்கி வருகிறது' என, கூறியுள்ளார்.கடந்த ஆண்டு சாகுபடி பொய்த்து விட்டது. இதுவரையில் குறுவை கிடையாது.கடந்த, 2012ல் ஜூன், 12ம் தேதி, குறிப்பிட்ட நேரத்திற்குள் மேட்டூர் அணை திறக்கவில்லை. இந்த ஆண்டிலும் ஜூன், 12ல் தண்ணீர் திறக்கவில்லை.ஆகஸ்ட், 12ல் மேட்டூர் அணை திறக்கப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். இந்த லட்சணத்தில் தான் வேளாண்மையில், இந்தியாவிற்கே முன்னோடியாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இது தான் முன்னோடி என்பதற்கான இலக்கணம் போலும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (20)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A. Sivakumar. - Chennai,இந்தியா
29-ஜூலை-201311:12:47 IST Report Abuse
A. Sivakumar. ஜூன் பன்னிரெண்டாம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் வெறும் பதினெட்டு அடியாக இருந்ததும் அது குடிநீருக்குக் கூடப் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேறும் சகதியுமாகவும் இருந்தது உலகத்துக்கே தெரியும். இந்த லட்சணத்தில் எப்படி அணையைத் திறந்துவிடுவது? ஐந்துமுறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவருக்கு இதுகூடத் தெரியாதா?
Rate this:
Share this comment
Cancel
KUMUKKI - male,மாலத்தீவு
29-ஜூலை-201311:06:55 IST Report Abuse
KUMUKKI தமிழகத்தில் குறுவை சாகுபடி செய்ய இயலாமைக்கு கருணாநிதி வருத்தபடுகிறாரா?.சந்தோசபடுகிறாரா?..
Rate this:
Share this comment
Cancel
Rama Ram - singapore,சிங்கப்பூர்
29-ஜூலை-201305:35:09 IST Report Abuse
Rama Ram கலைஞரே காவிரியை தாரைவார்ததுதான் முன்னோடி திட்டம்
Rate this:
Share this comment
Cancel
K.Rajasekaran - singapore,சிங்கப்பூர்
29-ஜூலை-201305:32:38 IST Report Abuse
K.Rajasekaran அனையில் தண்ணீர் இருந்தால் தானே திறக்கமுடியும், நீர் விளம்பரத்துக்காக ஏதாவது உளறாதீர், நீர் ஒரு போலி தலைவர் என்பது மக்களுக்கு தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
Maran - SINGAPORE,சிங்கப்பூர்
29-ஜூலை-201305:17:47 IST Report Abuse
Maran அதபத்தி உங்களுக்கு என்ன கவலை...எது எப்படி ஆனாலும் எல்லா போகமும் உங்களுக்கு அமோக விளச்சலதான் இருக்கு. அது போகட்டும் அவங்களுக்கு எதாவது மரதி நோயா இருக்கும், தண்ணி திறந்து விட மறந்து இருப்பாக.....
Rate this:
Share this comment
Cancel
Maran - SINGAPORE,சிங்கப்பூர்
29-ஜூலை-201305:04:54 IST Report Abuse
Maran Oooohhh.....ooh...ஊஊஹ்ஹ்ஹ்ஹ்.....
Rate this:
Share this comment
Cancel
srajan - narasimhapuram ,இந்தியா
29-ஜூலை-201304:57:45 IST Report Abuse
srajan 2ஜீ மாதிரி முன்னோடியா தமிழ்நாடு இருக்கணும்
Rate this:
Share this comment
Cancel
srajan - narasimhapuram ,இந்தியா
29-ஜூலை-201304:56:14 IST Report Abuse
srajan காவிரி நீர் கொண்டு வர முடியவில்லை ஆனால் குறை சொல்ல மட்டும் வந்துவிடுகிறார்கள் ?
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
29-ஜூலை-201304:43:37 IST Report Abuse
Thangairaja தான் என்ற அகங்காரம் உள்ளவர்கள் எப்பவுமே இப்படித்தான் தலைவரே..........இவர்களுக்கு மட்டும் வருடா வருடம் இரண்டாம் பசுமைப் புரட்சி தான். புரட்சியை தேடிப்பிடித்து சொந்தமாக்கி கொண்டவர்களாயிற்றே.......
Rate this:
Share this comment
Cancel
kanmani - nottingham,யுனைடெட் கிங்டம்
29-ஜூலை-201303:27:39 IST Report Abuse
kanmani தண்ணியே இல்லாம எப்படி...தண்ணி உட்டருது.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்