E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
652 மேல்நிலை பள்ளி கணினி ஆசிரியர்கள் "டிஸ்மிஸ்'
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

29 ஜூலை
2013
01:35
பதிவு செய்த நாள்
ஜூலை 29,2013 00:15

சென்னை:சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையடுத்து, தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த, 652 கணினி ஆசிரியர்களை, தமிழக அரசு பணி நீக்கம் செய்தது. இதனால், ஏழு ஆண்டுகளாக, கணினி ஆசிரியர்கள் பணியில் நிலவி வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

தமிழகத்தில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 1999ம் ஆண்டு, 2,324 கணினி ஆசிரியர்கள், 1,500 ரூபாய் சம்பளத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். பின், 2004ல், 2,000 ரூபாய் தொகுப்பூதியத்திற்கு மாற்றப்பட்டனர்.இதையடுத்து, பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து, 2006ம் ஆண்டு, 1,850 கணினி ஆசிரியர் பணியிடங்களை புதிதாக தோற்றுவித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த, அரசு உத்தரவிட்டது.இத்தேர்வில், கணினி ஆசிரியர்கள், 1,714 பேர் தேர்வு எழுதினர். முதலில், தேர்வு பெற, 50 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும் என, அரசு அறிவித்தது. பின், இத்தேர்வு மதிப்பெண்ணில் விலக்கு அளித்து, 35 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும் என, அறிவித்தது. இதன்படி, 35 சதவீத மதிப்பெண் பெற்ற, 1,686 கணினி ஆசிரியர்கள், தேர்வில் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், பி.எட்., முடித்த கணினி பட்டதாரி ஆசிரியர் சங்கம், தேர்ச்சி மதிப்பெண்ணை, 50 சதவீதத்தில் இருந்து, 35 சதவீதமாக அரசு குறைத்ததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், 894 பேர் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.தொடர்ந்து, 35 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை பெற்ற 792 ஆசிரியர்கள், மறுதேர்வு எழுத வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த 2010, ஜனவரி 24ம் தேதி, 792 பேருக்கு மறுதேர்வு நடத்தியது.

அதில், 125 பேர் தேர்வு பெற்றனர்; மீதமுள்ள 667 பேர், தேர்வில் தோல்வியடைந்தனர். "வினாத்தாள் குளறுபடியால், தேர்வில், அதிகளவில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டது. எனவே, கேள்வித்தாளை சரிபார்க்க வேண்டும்' என, ஐகோர்ட்டில், மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது.இதை விசாரித்த ஐகோர்ட், வினாத்தாள் ஆய்வு செய்ய, ஐ.ஐ.டி., கணினி ஆசிரியர் குழுவை அமைத்தது. இக்குழு, 150 கேள்விகளில், 20 கேள்விகள் தவறு என்றும், ஏழு கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க முடியவில்லை எனவும் அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து, ஐகோர்ட், தேர்வெழுதிய, 667 பேரில், 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்ய உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், 667 ஆசிரியர்களில் இருந்து, 15 பேர் மட்டுமே தேர்வு பெற்றனர். இதையடுத்து, பி.எட்., ஆசிரியர் சங்க வழக்கின் அடிப்படையில், தகுதியில்லாத, 652 பேரை பணி நீக்கம் செய்ய, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தொடர்ந்து, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வந்த, 652 கணினி ஆசிரியர்களை, பள்ளிக் கல்வித் துறை நேற்று முன்தினம், பணி நீக்கம் செய்தது.

இதுகுறித்து, மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம், மாநிலத் தலைவர் செல்வகுமார் கூறுகையில், ""டி.ஆர்.பி.,யின் குளறுபடியான கேள்வித்தாள், அதிகளவிலான ஆசிரியர்கள் தோல்விக்கு காரணம். பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கணினி ஆசிரியர்களும், இப்பணிக்குரிய அனைத்து கல்வித் தகுதிகளையும் பெற்றுள்ளவர்கள். எனவே, கருணை அடிப்படையில், பணி வழங்க அரசு முன்வர வேண்டும்,'' என்றார்.



தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (23)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthiban - Namakkal ,இந்தியா
03-ஆக-201314:07:09 IST Report Abuse
Parthiban தகுதியில்லாத 652 பேரை பணி நீக்கம் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வந்த, 652 கணினி ஆசிரியர்களை, பள்ளிக் கல்வித் துறை நேற்று முன்தினம், பணி நீக்கம் செய்தது. செல்லும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Pushparaj Ramakrishnan - Mannachanallur,இந்தியா
29-ஜூலை-201313:08:00 IST Report Abuse
Pushparaj Ramakrishnan இது போல் அடிக்கடி அரசு ஊழியர்களுக்கு தகுதி தேர்வுகள் நடத்தி தகுதியற்றவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் அரசு நிர்வாகம் சிறப்பாக இயங்கும்.
Rate this:
3 members
0 members
27 members
Share this comment
Cancel
செந்தில்குமார் - திருவண்ணாமலை,இந்தியா
29-ஜூலை-201312:48:27 IST Report Abuse
செந்தில்குமார் B.Sc., M.Sc., MC.A., M.Phil., B.Ed., M.Ed., போன்ற கல்வித்தகுதிகளுடன் 13 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களை நீக்கிவிட்டு பி.எட். படித்துள்ளனர் என்ற ஒரே காரணத்திற்காக படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு பிற துறைகளில் வேலைசெய்துவரும் ஆசிரியர்களை நியமனம் செய்வதால் கல்வித்தரம் சீரழியும். மேலும் 652 குடும்பங்களின் நிலை என்னவாகும்? இன்று பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆசிரிய்ர்கள் பி.எட். படித்துள்ளனர், அவர்களில் 652 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்க உள்ளது. அதிலும் விந்தை தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களே மீண்டும் தேர்வு செய்யப்படவுள்ளனர். ஏனெனில் அவர்களில் ஒரு சிலர் பணிக்கு வரும் முன்னரே பி.எட். முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். தேர்வில் வெற்றிபெறவில்லை என தகுதிநீக்கம் செய்து மீண்டும் அவர்களையே பணியில் நியமிப்பது விந்தை. அவர்களை பணியில் தொடர அரசு வாய்ப்பளிக்கவேண்டும். மேலும் அவர்களுக்கு எதிராக செயல்படும் ஆசிரியர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த 1880 பணியிடங்களைத் தவிர்த்து சுமார் 5000 பணியிடங்களை உருவாக்க போராடவேண்டும்.
Rate this:
8 members
0 members
16 members
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
29-ஜூலை-201310:34:01 IST Report Abuse
mirudan 20 கேள்விகள் தவறு என்றும், ஏழு கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க முடியவில்லை எனவும் அறிக்கை சமர்ப்பித்தது தேர்வுத்துறை என்ன லட்சணமாக இருக்கு ?
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
Cancel
sasikumar - Chennai,இந்தியா
29-ஜூலை-201310:30:06 IST Report Abuse
sasikumar ஏழு கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க முடியவில்லை எனவும் அறிக்கை சமர்ப்பித்தது........?????????
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel
jayaraman - riyadh,சவுதி அரேபியா
29-ஜூலை-201310:15:29 IST Report Abuse
jayaraman தமிழகத்தில் கல்வித்துறை சிரிப்பாய் சிரிக்கிறது கேட்பதற்கு நாதி இல்லை
Rate this:
2 members
0 members
12 members
Share this comment
Cancel
Tamilan - Chennai,இந்தியா
29-ஜூலை-201309:57:11 IST Report Abuse
Tamilan 50% மார்க் கூட எடுக்க முடியாதவன் எல்லாம் ஆசிரியரா?
Rate this:
3 members
0 members
39 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
29-ஜூலை-201309:48:19 IST Report Abuse
kumaresan.m முழுக்க முழுக்க அரசு மற்றும் அரசு துறைகள் செய்த தவறுக்கு 652 ஆசிரியர்களின் எதிர்காலத்தை வீணடித்து உள்ளீர்கள் .....இது போன்ற தீர்ப்புகள் அரசுக்கும் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் பொருந்தும் அல்லவா ??? நீதிபதி அவர்கள் அரசு மற்றும் அதிகாரிகளின் மீது கருணை காட்டியது பல டௌட்டுகளை கிளப்புகிறதே ???
Rate this:
5 members
0 members
10 members
Share this comment
Cancel
Raju Rangaraj - Erode,இந்தியா
29-ஜூலை-201308:41:19 IST Report Abuse
Raju Rangaraj கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று ஆனந்த கும்மி அடிக்கலாம்
Rate this:
1 members
0 members
7 members
Share this comment
Cancel
Thanjai Siva .Elangovan. - Thanjavur,இந்தியா
29-ஜூலை-201308:29:42 IST Report Abuse
Thanjai Siva .Elangovan. என்ன கொடுமை சரவணன் சார் ... 652 கனவு வாழ்கையை நினைத்து பாருங்கள் .. கொடுத்தவனே எடுத்துகிட்டாண்டி என்ற பாடல் வரி போல் அமைந்துவிட்டது .
Rate this:
5 members
0 members
7 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.