பழமையான கட்டடங்கள் தொல்லியல் துறைக்கு மாறுமா: சிறப்புகள் தெரியாமல் சிதையும் நினைவிடங்கள்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (1)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

மதுரை : மதுரையில் பொதுப்பணித்துறை, மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழமையான கட்டடங்களை, தொல்லியல் துறையின் பராமரிப்பின் கீழ் கொண்டு வரவேண்டும்.

வரலாற்று பின்புலம் இல்லாத பல நகரங்கள் இருக்கும் போது, அங்கெல்லாம் சில அடையாளம் இருந்தாலே, அதை பொக்கிஷமாக கருதியும், அதை ஒரு பெரிய சுற்றுலா தலமாகவும், மாநில அரசுகள் மாற்றி வருகின்றன.ஆனால், மதுரையில் எந்த திசை திரும்பினாலும் பழமையான கட்டடங்களும், வரலாற்று சிறப்புகள் நிகழ்ந்த நினைவிடங்களாகவும் உள்ளன. இவை மாநகராட்சி, பொதுப்பணித்துறை, தொல்லியல் துறை, மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகங்களின் கீழ் உள்ளன.கோயில் நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ள கட்டடங்கள், பெயர் சொல்லும் அளவிற்கு இல்லாமல் இருந்தாலும், ஓரளவாவது அதன் கட்டமைப்புகளும், வரலாற்று சிறப்புகளும் அழிந்து

விடாமல் காப்பாற்றி வருகின்றன. ஆனால், பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சியில் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடங்களின் கதி வேறுவிதமாக உள்ளது. இந்த துறைகள், இக்கட்டங்களில் ஏதாவது ஒரு அலுவலகத்தை அமைத்து, அதற்கு ஏற்றவகைகளில் கட்டமைப்புகளை மாற்றிவிடுகின்றனர்.

மேலவாசல் கோட்டை, ராணி மங்கம்மா சத்திரம், ராணி மங்கம்மா அரண்மனை, பத்திர அலுவலகம்,போலீஸ் கமிஷனர், பழைய எஸ்.பி., அலுவலகம், விட்டவாசல் என அடுக்கிக்கொண்டே போகலாம். இதில் பழமையின் பெருமையாக இருந்த குன்னத்தூர் சத்திரம் இருந்த இடம் தெரியவில்லை. ராணிமங்கம்மா சிறைவைக்கப்பட்ட அரண்மனை, "மார்க்கெட்' செல்லுத்துரையால் சிதைக்கப்பட்டது. காலப்போக்கில், "இவை பழமையான கட்டடங்கள் தானே. இவற்றால் என்ன பயன்' என, எந்த வரலாற்று சிறப்பும் தெரியாமல், மாநகராட்சியும், பொதுப்பணித்துறையும் அலட்சியம் காட்டியதன்

Advertisement

விளைவாக, சில கட்டடங்களை இழந்துள்ளோம். மதுரையில் இந்த இரண்டு துறைகளின் கீழ் உள்ள பழமையான கட்டடங்களை தொல்லியல் துறையின் பராமரிப்பின் கீழ் கொண்டுவந்தால், அவை இன்னும் பல காலம் எதிர்கால சந்ததியினர், இந்நகரின் சிறப்புகளை தெரிந்து கொள்ள வாய்ப்பாகஅமையும்.சுற்றுலா பயணிகள் வியந்து பாராட்டும் இடமாக இருக்கும் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள யூதர்கள் தெருவை, ஒருமுறை இந்த துறை அதிகாரிகள் சென்று கட்டாயம் பார்க்க வேண்டும். அங்கு பழமையான எந்த கட்டடத்தையும், அதன் தற்போதைய உரிமையாளர் நினைத்தால் கூட அதில் ஒரு செங்கலை கூட அகற்ற முடியாது. அப்படி அரசு கண்காணித்து சிறப்பித்து வருகிறது. அது போன்ற ஒரு நிலை, இப்போது மதுரைக்கு அவசியம் தேவை. மாவட்ட நிர்வாகம் இதில் தனிக்கவனம் செலுத்தி, பழமையான கட்டடங்களை காப்பாற்ற வேண்டும்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
29-ஜூலை-201307:27:03 IST Report Abuse
ஆரூர் ரங் பாரதமே பழைமை வாய்ந்த நாடுதான் எனவே மொத்த நாட்டையும் தொல்பொருள் துறைக்கு மாற்றிவிட்டு நாம் கடலுக்குள் குதித்துவிடலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.