Advertisement
ரூ.100 கோடிகொடுத்தால் ராஜ்யசபா எம்.பி., சீட் கிடைக்குமாம்: காங்கிரஸ் மூத்த எம்.பி.,
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2013
23:46

புதுடில்லி:""நூறு கோடி ரூபாய் இருந்தால், ராஜ்யசபா எம்.பி., சீட் வாங்கிவிடலாம்,'' என, காங்கிரஸ், எம்.பி., ஒருவர் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அரியானா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியில் உள்ளது. அந்த மாநிலத்தை சேர்ந்த, காங்கிரஸ், ராஜ்யசபா எம்.பி., பிரேந்தர் சிங்.

பதவி கிடைக்கவில்லை:



முதல்வர், ஹூடாவின் எதிர்ப்பாளராக விளங்கும் இவரை சமாதானப்படுத்த, மத்திய அரசு, மத்திய இணையமைச்சர் பதவி வழங்க இருந்தது. சமீபத்தில், மாற்றியமைக்கப்பட்ட, மத்திய அமைச்சரவையின் போது, பிரேந்தர் சிங்குக்கு, அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது; ஆனால், வழங்கப்படவில்லை.காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் போது, இவரிடம் இருந்த, பொதுச் செயலர் பொறுப்பு பறிக்கப்பட்டது. இமாச்சல பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்த அவர், இந்த மாற்றங்களுக்குப் பிறகு, கட்சிக்கு எதிராக பேசத் துவங்கியுள்ளார்.

ரூ.20 கோடி மிச்சம்:



அரியானாவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பிரேந்தர் சிங் பேசியதாவது:நான் எம்.பி.,யாக ஆன போது, அந்தப் பதவியைப் பெற, நூறு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றனர். நான், 80 கோடி ரூபாய் கொடுத்து, எம்.பி., பதவியைப் பெற்று, 20 கோடி ரூபாய் மிச்சப்படுத்தி விட்டேன். நூறு கோடி ரூபாய் கொடுத்து, எம்.பி., பதவியைப் பெறுபவர்கள், ஏழை மக்களைப் பற்றி சிந்திப்பார்களா?ராஜ்யசபாவில் இருக்கும், எம்.பி.,க்களில் பலர் கோடீஸ்வரர்கள். அவர்களுக்கு, எம்.பி.,யாவது ஒன்றும் கடினமானதல்ல. இந்த காலத்தில், கோடீஸ்வரர்களால் தான், ராஜ்யசபாவுக்குள் நுழைய முடியும்.ஜனநாயகத்தில், பண ஆதிக்கம் அதிகரித்து விட்டதால், ஏழைகளின் குரல் மூழ்கடிக்கப்பட்டு விட்டது.இந்தக் கருத்து, என் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல. கட்சியின், ஆயிரக்கணக்கான தொண்டர்கள், இந்தக் கருத்தைக் கொண்டுள்ளனர். இப்படி ஏராளமானோர் கூறும் போது, ஆட்சியில் உள்ள கட்சியும், அரசும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.இப்படி ஒவ்வொரு முறையும், ஒவ்வொருவர் கூற முடியாது. அப்படி பேசுபவர், கட்சிக்கு எதிராக பேசியுள்ளார் என கூறி, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதால், பலரும் கட்சிக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை.இவ்வாறு, காங்கிரஸ் எம்.பி., பிரேந்திர் திங் பேசி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது பற்றி, பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர், பிரகாஷ் ஜாவடேகர் கூறும் போது, ""ராஜ்யசபா எம்.பி., பதவியை, காங்கிரஸ் விலைக்கு விற்கிறது என்பதற்கு, பிரேந்தர் சிங் தான் உதாரணம். அரசியலை மிகவும் கீழ்தரமான நிலைக்கு, காங்கிரஸ் கொண்டு சென்று விட்டது,'' என்றார்.

இந்தக் கருத்து, என் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல. கட்சியின், ஆயிரக்கணக்கான தொண்டர்கள், இந்தக் கருத்தைக் கொண்டுள்ளனர். இப்படி ஏராளமானோர் கூறும் போது, ஆட்சியில் உள்ள கட்சியும், அரசும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்



தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (53)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - trichy,இந்தியா
31-ஜூலை-201302:21:31 IST Report Abuse
sankar மேல் சபை போல், நாடு சபை அல்லது சுப்ரீம் சபை ஒன்றை நிறுவி, அதற்கு ஓர் 200 பரிதி நிதிகள் தேர்ந்தெடுக்கலாம். அந்த 200 பதவிகளும் ஏலத்தில் விடலாம் , வருமானத்தை பெருக்க அரசியலில் மிக மிக நேர்மையாளர், நிதி மந்திரி சிதம்பரத்துக்கு இந்த யோசனை அனுப்புகிறேன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
muthuppandy pandian - chennai,இந்தியா
30-ஜூலை-201311:50:48 IST Report Abuse
muthuppandy pandian உண்மைய தெரியாம சொல்லிட்டரு விடுங்க ஐயா, பெரியவர தோண்டதங்க.
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel
ksv - chennai,இந்தியா
30-ஜூலை-201311:39:38 IST Report Abuse
ksv காசு துட்டு மணி துட்டு மணி மணி நல்ல வாயே சம்பாரிப்பதை நார வாய் துன்னுறான்.கணக்கு பண்ண தெரியாதவன் காச வாரி இறைக்கிறான்.இது காங்கிரஸ் மற்றும் மற்ற இத்தியாதி அரசியல் வாலாக்களுக்கு பொருந்தும்.
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Cancel
Senthil Kumar - Coimbatore,இந்தியா
30-ஜூலை-201311:22:42 IST Report Abuse
Senthil Kumar என்ன கொடும சரவணா
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
30-ஜூலை-201311:06:11 IST Report Abuse
villupuram jeevithan இப்போது தமிழ்நாட்டிலிருந்து ராஜ்ஜிய சபைக்கு சென்றவர்கள் அனைவரும் ராஜாவைத் தவிர கோடீஸ்வரர்கள் தான்.
Rate this:
1 members
0 members
13 members
Share this comment
Cancel
N.Purush Bharatwaj - Cuddalore,இந்தியா
30-ஜூலை-201310:48:07 IST Report Abuse
N.Purush Bharatwaj என்பது கோடி கொடுத்த உங்களுக்கு மட்டும் மக்கள் படும் வேதனை தெரியுமா என்ன????நல்லா டபாயிக்கரானுக...என்பது கோடி பணம் கொடுத்ததுக்கு கொஞ்ச நாள் தான் செயலாளர் மற்றும் காங்கிரஸ் பொருளாளர் பதவி கொடுப்பாங்க....வாழ் நாள் பூராவா கொடுப்பாங்க ...மத்தவங்களுக்கும் கட்சி மேலிடும் வாய்ப்பு கொடுக்கனுமுள்ள...எத்தனை பேரு பணம் வச்சிக்கிட்டு வரிசையா நிக்கறாங்கன்னு உங்களுக்கு தெரியமா???அவிங்களோட கனவு ஒரு எம்.பீ மற்றும் கட்சியில் ஒரு பதவி...
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
Cancel
samy - Coimbatore,இந்தியா
30-ஜூலை-201310:20:31 IST Report Abuse
samy 100 கோடி கொடுத்து வாங்கின எவ்ளோ கோடி சம்பாதிப்பங்க??
Rate this:
1 members
0 members
12 members
Share this comment
Cancel
mani k - trichy,இந்தியா
30-ஜூலை-201310:16:27 IST Report Abuse
mani k இவர் சொல்வதை பார்த்தால் ராஜ்ய சபா எம்பி என்பது தனி நபர் வர்த்தக பொருள் போல் இருக்கிறது. ஜனநாயக நாட்டில் மக்களுக்கு பணி செய்யும் ஒரு புனிதமான பதவி என்பதை இந்நாட்டு மக்கள் எல்றோரும் மறக்க வேண்டிய ஒன்றாக நம் நாட்டு அரசியல் வாதிகள் மாற்றிவிட்டார்கள்.கி.மணி.திருச்சி.
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
30-ஜூலை-201310:15:33 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் அப்ப என்னால MP ஆகா முடியாதா? கொஞ்சம் குறைச்சு சொல்லுங்க. மேலும் ஆடி தள்ளுபடி ஏதும் உண்டா?
Rate this:
0 members
0 members
22 members
Share this comment
Cancel
காளி. சந்திர மௌலி - Kuala Lumpur,மலேஷியா
30-ஜூலை-201310:00:29 IST Report Abuse
காளி. சந்திர மௌலி 100 கோடி கொடுத்தால் 176,00,00,00,00,0000 (இந்த சைபர் சரிதானா) சம்பாரிக்கலாமே. நம்மெல்லாம் இந்த நம்பர சீக்கிரம் மறக்கலாமா, அக்கா திரும்ப ராஜ்ய சபைக்கு போயிருக்காங்களே.
Rate this:
1 members
0 members
21 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.