Advertisement
கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தடையில்லை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2013
23:48

சென்னை:கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதியளித்த உத்தரவை, ரத்து செய்யக் கோரிய மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

"பூவுலகின் நண்பர்கள்' என்ற அமைப்பின் அறங்காவலரான, சென்னை, வடபழனியைச் சேர்ந்த, சுந்தரராஜன் என்பவர், தாக்கல் செய்த மனு:சுப்ரீம் கோர்ட் தன் உத்தரவில், 15 பரிந்துரைகளைக் குறிப்பிட்டிருந்தது. முக்கியமாக, "கூடங்குளத்தில் அமைதி திரும்ப, போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட, கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும்; பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் சரிபாரக்காமல், இம்மாதம், 11ம் தேதி, அணுமின் நிலையம் செயல்படுவதற்கு, ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.சுப்ரீம் கோர்ட் உத்தரவு, முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. எனவே, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறக் கோரி, வழக்கறிஞர் புகழேந்தி என்பவரும், மனுத் தாக்கல் செய்து இருந்தார்.இம்மனுக்களை, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வில்சன், தமிழக அரசு சார்பில், அட்வகேட் - ஜெனரல் சோமயாஜி, சிறப்பு அரசு பிளீடர் இன்பதுரை ஆஜராகினர்.

மனுக்களை விசாரித்த, "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
கோர்ட்டில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆராயும் போது, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்பட்டு உள்ளதும், அதற்கான அறிக்கை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதும், தெரிகிறது."அறிக்கையின் நகல்கள் தனக்கு வழங்கப்படவில்லை' என, மனுதாரர் தரப்பில் கூறப்படுவதில் தகுதியில்லை. ஏனென்றால், நகல்களை வழங்கும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிடவில்லை.சுப்ரீம் கோர்ட் உத்தரவுகள், முழுமையாகப் பின்பற்றப்படவில்லை எனவும், மனுதாரர் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. அதுப்பற்றி, சுப்ரீம் கோர்ட்டில் தகுந்த மனுவைத் தாக்கல் செய்து, அதன் கவனத்துக்குக் கொண்டு வருவது என்பது, மனுதாரரைப் பொறுத்தது. மேலும், அறிக்கையின் நகல்களை பெறுவதற்கும், உரிய மனுவைத் தாக்கல் செய்வது, மனுதாரரைப் பொறுத்தது.மனுவில் கூறியுள்ள முகாந்திரங்களைப் பார்க்கும் போது, ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட்டில் முடிவுக்கு வந்த பிரச்னையை, மீண்டும் எழுப்புவது போல் உள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு, புதிய விளக்கத்தை, இந்த கோர்ட் பிறப்பிக்க முடியாது.
மேலும், நிவாரணம் கோரும் மனுதாரரின் வாய்ப்பு, முடிந்து விடவில்லை. மனுதாரர் கோரிய நிவாரணத்தை, இந்த கோர்ட் வழங்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. போராட்டக்காரர்கள் மீது, 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சட்ட - ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு, தமிழக அரசுக்கு உள்ளது. கூடங்குளம், அதைச் சுற்றிய இடங்களில் நிலவும் சூழ்நிலை, அங்கு நடக்கும் தொடர் போராட்டங்கள் ஆகியவற்றைப் பரிசீலித்து, வழக்குகள் வாபஸ் பெறுவதைத் தள்ளி வைப்பது என, தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது.வழக்கின் தன்மை, சூழ்நிலையைப் பார்க்கும் போது, மாநில அரசின் எண்ணம் நியாயமற்றது என்றோ, உள்நோக்கம் கொண்டது என்றோ கூற முடியாது. வழக்குகள் வாபஸ் பெறுவதைப் பொறுத்தவரை, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுப்படி, தமிழக அரசு செயல்பட வேண்டும்.இவ்வாறு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது.



தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kuchipudi gumma - chennai,இந்தியா
30-ஜூலை-201321:25:28 IST Report Abuse
kuchipudi gumma நொய்ய நொய நு உதயகுமார் ஆளுங்க இம்ச இருக்கே , தங்கப்ப.... தக்கம் என்று நடிகர் சரத்குமார் வடிவேலுக்கு விளக்கம் கொடுத்த மாதிரி, அணு விஞ்ஞானிகள் இவங்களுக்கு விளக்கம் கொடுத்து அடக்கணும்
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
Cancel
Pushparaj Ramakrishnan - Mannachanallur,இந்தியா
30-ஜூலை-201319:13:40 IST Report Abuse
Pushparaj Ramakrishnan விரைவாக மின் உற்பத்தியை தொடங்க வேண்டும். அதற்கு ஏற்படும் தடைகளை உடைத்தெரிய சட்டத்தை தமிழக அரசு துணிச்சலாக பயன்படுத்த வேண்டும்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
30-ஜூலை-201316:45:08 IST Report Abuse
K.Balasubramanian மும்பையிலும் டிராம்பே அணு ஆலை எத்தனையோ வருஷங்கள் தொடர்ந்து வருகிறது . கூடங்குளம்வாசிகள் அதனையும் அறிய வேண்டும் .தற்போது உயர் நீதி மன்றம் உள்ளூர்வாசிகளை வழக்கில் இருந்து விடுவிக்க பரிந்துரை செய்துள்ளது .எல்லோரும் அமைதி காக்க நாடு முன்னேறட்டும் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
30-ஜூலை-201311:04:09 IST Report Abuse
Pugazh V இது மக்கள் நலப் போராட்டமல்ல என்று உறுதியாகத் தெரிகிறது. கல்பாக்கத்தில் வசிப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா அவர்கள் என்ன முட்டாள்களா? கூடங்குளத்தில் வசிக்கும் மீனவர்கள் தான் அறிவாளிகளா? காங்கிரஸ்-திமுக விற்கு நல்ல பெயர் வந்துவிடுமோ என்கிற பயத்தில் அரசியல் செய்கிறார்கள். மின் உற்பத்தியைக் கூட்டி மாநிலம் முன்னேறும் வழியைப் பாருங்கள்.
Rate this:
14 members
0 members
3 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
30-ஜூலை-201310:42:35 IST Report Abuse
kumaresan.m " தமிழக அரசு அணைத்து வழக்குகளிலும் இருந்து இவர்களை விடுவிக்க ஒரே வழிதான் உள்ளது .....வரும் பொது தேர்தலில் போராட்டக்காரர்களின் ஓட்டுகள் அனைத்தும் அதிமுகாவிர்க்கு தான் என்று மறை முகமாக எழுதி கொடுத்தார்கள் ஏனெனில் தேர்தல் முடிவு தெரிந்தவுடன் இவர்கள் அணைத்து வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்பது திண்ணம் ....ஜெயாவின் ராஜதந்திரங்களில் இதுவும் ஒன்று ....அரசியல் என்றால் சும்மாவா ??? பதவியா ??? அதிகாராமா ??? பிறகுதான் மக்கள் "
Rate this:
6 members
0 members
4 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
30-ஜூலை-201310:38:16 IST Report Abuse
kumaresan.m " இந்த போராட்டகாரர்கள் கூண்டில் அகப்பட்ட எலிகள் போன்று தவிக்கிறார்கள் ....போராட்டம் வேண்டாம் வெளியில் திறந்து விட்டால் ( வழக்கில் இருந்து வாபஸ் ) உயிர் பிழைத்து ஓடி ஒளிந்து கொள்ளவோம் என்பது கூறுவது போல் உள்ளது "
Rate this:
6 members
0 members
5 members
Share this comment
Cancel
appu - madurai,இந்தியா
30-ஜூலை-201308:49:32 IST Report Abuse
appu எவனுக்காகவும் கவலை படமால் நாட்டின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு இந்த திட்டம் நல்லபடி செயல்படட்டும்..உதயகுமார் போன்ற தேச துரோகிகளின் முகத்தில் கரி பூசி அவரை இயக்கும் மேலை நாட்டின் முகத்தில் சாணி பூசி நாட்டின் முன்னேற்றம் வெற்றியை கொண்டாடுவோம்...
Rate this:
10 members
1 members
17 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
30-ஜூலை-201305:37:21 IST Report Abuse
Thangairaja அதான் எங்களுக்கு ஆரம்பத்திலேயே தெரியுமே............
Rate this:
2 members
0 members
3 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
30-ஜூலை-201305:34:27 IST Report Abuse
villupuram jeevithan கூடான்குளம் அணு மின்நிலையம் உறுதியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்கு சிலர் நாட்டு வெடி குண்டை வீசி பார்த்திருக்கிறார்களாம். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உத்தரவு வரவில்லையா?
Rate this:
10 members
1 members
10 members
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
30-ஜூலை-201301:51:14 IST Report Abuse
Vettri கல்லெறிதல், தீயிட்டு கொளுத்துதல், மரங்களை வெட்டி போட்டு இடையூறு செய்தல் என்று பொது சொத்துகளை சேத படுத்தினால் மட்டும் தான் நஷ்ட ஈடு வசூலிக்க வேண்டுமா? அப்பாவி மக்களை தவறாக வழி காட்டி போராட்டங்களை தூண்டியதாலும் அரசிற்கு பெருத்த செலவு/நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை யாரிடம் வசூல் செய்வது. இந்த கும்பல் மீது ஒரு நடவடிக்கையும் வராது என்றால் அது நியாயமற்ற செயலே.
Rate this:
15 members
1 members
19 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.