E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மேட்டூர் அணை நீர் ஆக., 2ம் தேதி திறப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2013
23:50

மேட்டூர் :மேட்டூர் அணை நீர்மட்டம், மளமளவென, உயர்ந்து வருவதால், ஏற்கனவே அறிவித்ததற்கு 10 நாட்கள் முன்னதாக, ஆக., 2ம் தேதியே, பாசனத்துக்கு நீர் திறக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில், பருவமழை தீவிரம் அடைந்ததால், கர்நாடகா அணைகள் நிரம்பின. இவற்றில் இருந்து வெளியேறும் உபரி நீர், மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால், மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று, 101 அடியாகவும், நீர் இருப்பு, 66 டி.எம்.சி.,யாகவும் அதிகரித்தது. அணைக்கு, 88,988 கன அடி நீர் வந்தது. 35 நாட்களில், மேட்டூர் அணை நீர்மட்டம், 86 அடியும், நீர் இருப்பு, 63 டி.எம்.சி.,யும் அதிகரித்துள்ளது.நீர்மட்டம் குறைவாக இருந்ததால், மேட்டூர் அணை, கடந்த ஜூன் 12ம் தேதி, டெல்டா குறுவை சாகுபடிக்கு, திறக்கப்படவில்லை. அணை நிரம்ப, கால தாமதம் ஏற்படும் என, கணக்கிட்டு, டெல்டா சம்பா சாகுபடிக்கு, ஆக., 12ம் தேதி, மேட்டூர் அணையை பாசனத்துக்கு திறக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.ஆனால், கனமழையால் நீர்வரத்து அதிகரித்து, அணை நீர் இருப்பு அதிகரித்தது. அணை நிரம்ப இன்னும், 27.5 டி.எம்.சி., தண்ணீர் தான் தேவை. நீர்வரத்தில் இதே நிலை நீடித்தால், ஆறு நாட்களில் அணை நிரம்பிவிடும். அதன் பின், உபரி நீரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும்.உபரி நீர் திறந்த பின், ஆக., 12ல் பாசனத்துக்கு நீர் திறந்தால், டெல்டா விவசாயிகள் அதிருப்தியை, தமிழக அரசு சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே, 10 நாட்களுக்கு முன், ஆக., 2ம் தேதியே, பாசனத்துக்கு திறக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று உத்தரவிட்டுள்ளார்.இதன் மூலம் இந்த ஆண்டு, டெல்டா மாவட்டங்களில், 12 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யும் சம்பா பயிர்களுக்கு, பற்றாக்குறையின்றி தண்ணீர் கிடைக்கும். இது, விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




ஒகேனக்கல் நீர் வரத்து சரிவு :





தமிழக எல்லையான பிலிகுண்டலுவில், தண்ணீர் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம், 80 ஆயிரம் கன அடி நீர் வந்தது; நேற்று காலை, 9:00 மணிக்கு, 76 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.நேற்று காலை, கே.ஆர்.எஸ்., அணையில், 38,800 கன அடியும், கபினியில், 25,000 கன அடியும் என, 63,800 கன அடி உபரி நீர், திறக்கப்பட்டது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில், பருவமழை நீடிப்பதால், உபரி நீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஒகேனக்கல், காவிரியாற்றில், அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தொடர்ந்து தண்ணீர் செல்கிறது. இதனால், ஒன்பதாவது நாளாக, நேற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.



தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (24)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sadique - Tiruvarur,இந்தியா
31-ஜூலை-201300:35:10 IST Report Abuse
Sadique இந்த ஆண்டாவது விளைசல் இருக்கட்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
V Nath - PCMC,இந்தியா
30-ஜூலை-201321:14:23 IST Report Abuse
V Nath கர்நாடகாவில் அபரிமிதமாக மழை. அங்குள்ள அணைகள் நிரம்பினால் உபரி நீர் தமிழ்நாட்டுக்குத்தான் வரும். மேட்டூர் அணை 120 அடி கொள்ளளவு என்றாலும் 100 அடிக்குள்ளாகவே திறந்து விட்டுத்தான் ஆகவேண்டும். இதற்கு முதல்வர் உத்தரவு தேவையில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளே திறந்து விடுவார்கள். முதல்வர் உத்தரவு என்பது ஒரு சம்பிரதாயத்துக்குத்தான். குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க செய்திருந்தால் பாராட்டலாம். 2 ஆண்டுகளாக குறுவை சாகுபடி அம்போ. 2014 பிப்ரவரி வரை விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்க ஆவன செய்வதுதான் புத்திசாலித்தனம். சம்பா சாகுபடி செய்துவிட்டு பயிருக்கு தேவையானபோது தண்ணீர் கிடைக்கவில்லையெனில் பிறகு கஷ்டம்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
SSK, Trichy - Marmul,ஓமன்
30-ஜூலை-201309:52:01 IST Report Abuse
SSK, Trichy இந்த வருடம் மேட்டூர் அணை நிரம்பியது என்று தண்ணீரை வினாக்காமல், சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
Rate this:
0 members
0 members
52 members
Share this comment
Cancel
அரிகரன் Ariharan - திருநெல்வேலி,இந்தியா
30-ஜூலை-201308:36:03 IST Report Abuse
அரிகரன்  Ariharan எது எப்படியோ விவசாயம் செழித்தால் அதுவே நல்லது..
Rate this:
0 members
0 members
94 members
Share this comment
Cancel
Balasubramanian Ramamoorthy - Mumbai,இந்தியா
30-ஜூலை-201307:36:19 IST Report Abuse
Balasubramanian Ramamoorthy எல்லோருக்கும் வணக்கம், ஞாயமாரே மனசாட்சி படி கருத்தை எழுதுங்கோ எங்கேயாவது எங்கள் முதல்வர் தன்னால் தான் காவேரியில் தண்ணீர் வந்ததுன்னாரா? இந்த வருஷம் அதான் ஜூனில் தண்ணீர் எவ்வளவு இருந்தது என்று அறிக்கை விட்டு அதன் காரணமாக மும்முனை மின்சாரம் கொடுத்து சொட்டுநீர் மற்றும் புதிய யுத்திகளை அறிவித்து குறுவைக்கு வழிகாட்டினாரா இல்லையா? போன வருஷம் தண்ணீர் வராததால் எல்லா மாவட்டத்துக்கும் நிவாரணம் கொடுத்தார்களா இல்லையா? விவசாயிகளிடம் கேட்டால் பதில் வரும். சும்மா வெட்டிபயல்களிடமும் வேலையில்லாதவனிடமும் மஞ்சலாடைகளிடமும் கேட்டால் விதண்டாவாதம் தான் வளரும். அத்தைக்கு மீசை முளைத்துள்ளது ( காவிரி தீர்ப்பு கசட்டில் போடபட்டுள்ளது ) இன்னும் நிறைய வழக்குகளும் தொடர்ந்து போடபட்டுள்ளது. அதிலும் தீர்ப்பு சாதகமாக வரும்பா. அப்புரம் பாரு இப்போதைக்கு தண்ணீர் இருக்குன்னு விட்டுடமாட்டார் எங்கள் மக்கள் முதல்வர். அவர் போடும் கணக்கே வேறு. ஒருவர் சும்மா தன் பெண்டு தன் குடும்ப தொழில் தன் சுயநலம் மட்டுமே குறிகோளாக வைத்து நமக்கு நல்லா பட்டை நாமம் சாத்தியதுபோல் நமது முதல்வர் செய்ய மாட்டார். வருங்கால சந்ததியினர் வாழ அடித்தளம் அமைத்து பிள்ளையார் சுழி போட்டுள்ளார்கள். வாழ்த்த மனமில்லாதவர்கள் மூடிக்கொண்டு இருங்கள்(வாயை). சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு மாநில அரசு இவ்வளவு நிவாரணத்தை கொடுத்ததாக நினைவில்லை. அதுக்குன்னு வரட்சியே ஏற்படளைன்னோ இல்லை பேச்சுவார்த்தையால் தண்ணீர் கிடைத்ததுன்னு சும்மா புருடா விட்டு எழுதினீர்களே. ஆனால் என்னிடம் புள்ளி விபரம் உள்ளது. மழை பொழிந்து நீர் வந்துள்ளது. பாப்போம் எப்படி போகிறதுன்னு. வரும் நாட்கள் என்று இந்த தண்ணீர் போதாது? தண்ணீர் வந்தால் இயற்க்கை என்பீர் வரலை என்றால் ஜெயலலிதாவின் பிடிவாதம் பேச்சுவார்த்தை செய்யலை என்று யாரோ ஒருவர் கூறுவதை திருப்பி கூறுவீர்கள். அதான் போனாரே பெங்களுருக்கு கோர்ட் உத்தரவின்படி. கொடுத்தானே பக்கெட்டில் இல்லை தங்க குடத்தில். எங்கள் முதல்வர் போல் ஆட்சி செய்யட்டும் மற்ற மாநிலத்தில் பிறகு சொல்லுங்களேன் குறையை செத்த பிணத்தை உயிர்கொடுத்து எழுப்பியுள்ளார் (அரசாங்கம் நிர்வாகம் கஜானா) மின்சாரம் கிடைக்கிறதா இல்லையா படி படியா சீரடைந்துள்ளதா இல்லையா? ரோடு வசதிகள் நன்றாக உள்ளதா இல்லையா? இரண்டு வருஷத்தில் இவ்வளவு சாதிக்க முடிந்தது என்றால் (அதுவும் சில புண்ணியவான்களின் முட்டுக்கட்டையை உடைத்து) இன்னும் மூணு வருஷத்தில் தமிழன் தலை நிமிர்வான் அதுவும் 2014 பாராளுமன்றமும் நம் முதல்வரின் கையில் கொடுங்கள் அப்புறம் பாருங்கள் தமிழ்நாட்டின் உயர் நிலையை. ஆகையால் எவனாவது அம்மாவை குறைகூறும் முன் காரணத்தை ஒழுங்கா எழுதணும் இல்லே வழக்கு போடுவேன்
Rate this:
257 members
0 members
209 members
Share this comment
Sivramkrishnan Gk - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஜூலை-201315:49:33 IST Report Abuse
Sivramkrishnan Gkஉங்கள் கருத்து ஓகே. நீங்கள் ஜெயாவின் அபிமானி என்பது தெரிகிறது. இருந்தாலும் உங்கள் கருத்துக்கு வாழ்த்துக்கள். உங்கள் கருத்து உண்மையின் உரைகல். ஆனால் ஜெயலலிதா சாதித்ததை ஜீரணிக்க முடியாமல் வயிர்றேரிச்சல் படுகிறார்களே அவர்களை பார்த்து நாம் பரிதாபப்படதான் முடியும்....
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Krishnaswamy - coimbatore ,இந்தியா
30-ஜூலை-201318:54:42 IST Report Abuse
Krishnaswamyபொறு மகனே. இப்பொழுது மின்சார பற்றாக்குறை இல்லையென்றால் அ தி மு க காலத்தில் எவ்வளவு ஆரம்பித்து நிறைவேற்றப்பட்டன என்று சொல்ல முடியுமா.? காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக இருக்கிறது. இப்பொழுதும் ஆகஸ்ட் 12 வரை விட்டால் அணை நிரம்பி தன்னாலயே வழிந்தோட ஆரம்பித்து விடும். அதற்காகவே தேதியை மாத்தியிருக்காங்க. உன்னை போன்ற மர மண்டைகளை தவிர மற்ற எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது....
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Balasubramanian Ramamoorthy - Mumbai,இந்தியா
30-ஜூலை-201323:08:09 IST Report Abuse
Balasubramanian Ramamoorthyநன்றி வாசககர்களே, எனது கருத்தை 457 பேர் படித்திருக்கிறார்கள் அதிகமாக படித்து பார்த்தது எனக்கு பெருமை. உண்மையை மட்டுமே எழுதியிருந்தேன். பொத்தாம் பொதுவாக கமெண்ட் அடிக்கலையே. தண்ணீர் சேமித்துவிட்டு திறந்தால் சம்பாவுக்கு ஒன்னும் பாதிப்பு வராதுவே. இன்னும் குருவையே முடியலை. எப்படி சம்பாவுக்கு நீர் கிடைக்க வழி செய்யலைன்னும் சிலர் 12ஆம் தேதிக்கு திறக்க உத்தரவிட்டதையும் பின்பு 2ஆம் தேதிக்கு மாற்றியதை குறை கூறிய arivu ஜீவிகளுக்கு முதலில் சேமிப்போம், பின்பு செலவழிப்போம்னு நினைக்கனும். சும்மா குற்றம் சுமத்த கூடாது. யார் எதிர்பார்த்தார்கள் அணை நிரம்பும் என்று? இப்போது நல்லது நடந்துள்ளது. ஆகையால் எல்லோரும் கொஞ்சம் யோசித்து மனசாட்சிபடி எழுதணும்....
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
Udaya Kumar - Singapore,சிங்கப்பூர்
30-ஜூலை-201307:19:32 IST Report Abuse
Udaya Kumar தஞ்சாவூர், திருச்சி பக்கத்துல உள்ள குளம் குட்டை எல்லாத்துலையும் தண்ணீர் தேக்கி வைக்கவும். கடலில் திறந்து விட வேண்டாம். கண்மாய்களையும், கால்வாயை தூறு வாரவும்
Rate this:
0 members
0 members
139 members
Share this comment
Cancel
காவித் தமிழன் - சென்னை ,இந்தியா
30-ஜூலை-201306:42:03 IST Report Abuse
காவித் தமிழன் தண்ணி வரத்து அதிகம் உள்ள சூழ்நிலையில், ஆடிப் பெருக்கை முன்னிட்டு முன்னமேயே திறந்து விட்டிருக்கலாம்......
Rate this:
8 members
0 members
211 members
Share this comment
Cancel
Giri Srinivasan - chennai ,இந்தியா
30-ஜூலை-201306:26:24 IST Report Abuse
Giri Srinivasan 70 அடியை எட்டிய போதே இதை செய்திருந்தால் இந்நேரம் கடைமடைகளுக்கும் நீர் சென்று இருக்கும் .
Rate this:
19 members
0 members
266 members
Share this comment
K.Sugavanam - sengkang,சிங்கப்பூர்
30-ஜூலை-201317:27:44 IST Report Abuse
K.Sugavanam90 அடியை எட்டினால்தான் திறக்க முடியும்.....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
30-ஜூலை-201306:20:21 IST Report Abuse
Samy Chinnathambi இப்பதான் அணை நிரம்பிடுச்சே....இப்பவும் நேரம் காலமா பாக்கணும்.. விவசாயிகளை கலந்து ஆலோசிச்சு எப்ப தண்ணி வேணுமோ தொறந்து விட வேண்டியது தானே...
Rate this:
2 members
0 members
140 members
Share this comment
ramasamy naicken - bermuda,பெர்முடா
30-ஜூலை-201319:51:43 IST Report Abuse
ramasamy naickenகேரளா ஜோசியக்காரன் சொன்ன நேரத்தில்தான் அம்மா தண்ணீர் திறக்க முடியும். உங்கள் இஷ்டத்திற்கு எல்லாம் அணையை திறக்க முடியாது. அது உடைந்தாலும் பரவாயில்லை....
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
30-ஜூலை-201305:31:13 IST Report Abuse
villupuram jeevithan கருணாவால் தான் பத்து நாட்கள் முன்னாடி ஆணை திறந்து விடப் படுகிறது என்று சொல்லுவார்களே?
Rate this:
4 members
249 members
50 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.