பதிவு செய்த நாள் :
கருத்துகள் (12)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கோவை :மத்திய அரசால் வழங்கப்பட்ட "ஆதார்' அட்டைகளைச் செல்லாது என்று கூறி, "ஸ்மார்ட் கார்டு'க்காக மீண்டும் கைரேகை மற்றும் போட்டோ எடுக்கச்சொல்லி வற்புறுத்தும் நிர்ப்பந்தம், கோவை மாவட்டத்தில் தொடர்ந்து வருகிறது.

மக்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து விதமான மானியத்தையும், நேரடியாக வழங்க, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தனி அடையாள எண் மற்றும் அட்டை வழங்குவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, பல கோடி மக்களுக்கு "ஆதார்' அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தேசிய மக்கள் தொகைப்பதிவுத்துறையின் (என்.பி.ஆர்.,) சார்பில்"ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கான போட்டோ மற்றும் கைரேகைப்பதிவுகளை எடுப்பதற்கான முகாம் நடந்து வருகிறது. கோவை மாநகராட்சிப்பகுதியில், வார்டு வாரியாக இந்த முகாம் நடத்தப்படுகிறது.முகாம் நடக்கும் பகுதிகளில், வீடு தோறும் "கே.ஒய்.ஆர்.' எனப்படும் குடும்ப விபரப் படிவங்கள் தரப்பட்டு, அவர்களுக்கான முகாம் நடக்கும் தேதி, இடம் போன்ற தகவல்கள் தரப்படுகின்றன.

அப்போது, ஆதார் அட்டை வைத்துள்ள குடும்பத்தினருக்கும் இந்த படிவங்கள் வழங்கப்படுகின்றன; உண்மையில், ஆதார் அட்டை

வைத்துள்ளவர்கள், ஸ்மார்ட் கார்டுக்காக மீண்டும் போட்டோ, கை ரேகை போன்றவை எடுக்கத் தேவையில்லை; அட்டை எண் மற்றும் குடும்ப விபரப் படிவம் ஆகியவற்றை, ஸ்மார்ட் கார்டு முகாம்களில் ஒப்படைத்தால் போதும் என, மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி ஆணையர் அறிவித்துள்ளார்.ஆனால், கோவை நகரில் ஆதார் அட்டை வைத்துள்ளவர்கள், ஸ்மார்ட் கார்டுக்கான முகாம்களுக்குச் சென்று, ஆதார் அட்டை வைத்துள்ள விபரத்தைத் தெரிவித்தால், முகாமில் பணியாற்றும் கீழ்நிலை அலுவலர்கள், நாட்டாமை பாணியில் "அதெல்லாம் செல்லாது' என்று கூறி, வரிசையில் நிற்குமாறு வற்புறுத்துகின்றனர்; அவர்களுடைய ஆதார் அட்டையை வாங்கிப் பார்க்காமலே,அவர்களையும் மணிக்கணக்கில் நிற்க வைத்து, கைரேகை, போட்டோ ஆகியவற்றை எடுத்து, புதிய எண்களையும் அவர்களின் பெயர்களில் பதிவு செய்கின்றனர்.

கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலர் கதிர்மதியோன் அளித்த புகாரின்படி, கோவை கலெக்டர் கருணாகரன், ஜூலை முதல் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டார். ஏற்கனவே ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள், ஸ்மார்ட் கார்டுக்கான வரிசையில் நிற்கத்தேவையில்லை; அவர்களின் சுய விபரப் படிவம் மற்றும் ஆதார் அட்டை எண்ணைக் கொடுத்தால் போதும் என்று

Advertisement

அதில் தெளிவாக விளக்கியிருந்தார்.தமிழக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குனருக்கும், கதிர்மதியோன் மீண்டும் புகார் அனுப்பினார். அவரிடமிருந்து வந்த பதிலில், "ஆதார் அட்டை வைத்துள்ளவர்கள், மக்கள் தொகைப்பதிவுக்காக மீண்டும் வரிசையில் நிற்கத்தேவையில்லை' என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாகக் கூறியிருந்தார். முகாம் நடக்குமிடங்களில், இதற்கான அறிவிப்பை ஒட்டுமாறு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால், கோவை நகரில் இன்று வரையிலும் எந்த உத்தரவையும் மதிக்காமல், ஆதார் அட்டை வைத்துள்ளவர்களை அலைக்கழிப்பதை, "ஸ்மார்ட் கார்டு' முகாம் ஊழியர்கள்தவறாமல் கடை பிடித்து வருகின்றனர்.

"பிளக்ஸ்' வைக்க உத்தரவு:கோவை மாவட்டத்தில் "ஸ்மார்ட் கார்டு' எடுக்கும் பணிக்கான பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கிருஷ்ணகுமாரிடம் கேட்டபோது, ""ஏற்கனவே ஏராளமான புகார்கள் வந்துள்ளன; ஆதார் அட்டை வைத்துள்ளவர்கள், வரிசையில் நிற்கத் தேவையில்லை; அதுபற்றி, ஏஜென்சி ஊழியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம்; இது தொடர்பாக, முகாம் நடக்கும் பகுதிகளில் "பிளக்ஸ் பேனர்'களில் அறிவிப்பை வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளோம்,'' என்றார். அப்படியே அறிவிப்பு வைத்தாலும், அதை அவர்கள் கடை பிடிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJAN - chennai,இந்தியா
31-ஜூலை-201300:06:29 IST Report Abuse
RAJAN ஆதார் - ஆதாரமில்லாதது. ஊழல் மிகுந்த காங்கிரஸ் ஏமாற்று வேலை பார்க்கிறது. மக்களுக்கு தேவையானதை ரேஷன் கடைகள் மூலமே கொடுக்க இயலும். வங்கிகளில் நேரடியாக செலுத்துவதாக கூறுவது ஏமாற்று வேலை. மேலும் பின்னர் அதற்கு வரி போட்டு மக்களை வறுத்து எடுக்க சிதம்பரம் செய்யும் சூழ்ச்சி.
Rate this:
Share this comment
Cancel
MANUSHI - chennai,இந்தியா
30-ஜூலை-201319:10:07 IST Report Abuse
MANUSHI பேங்க் புக் இல்லாத மக்களே இன்னும் உள்ளனர்.இந்த நிலையில் இவர்கள் ........................
Rate this:
Share this comment
Cancel
sethu - Chennai,இந்தியா
30-ஜூலை-201317:59:07 IST Report Abuse
sethu முஹம்மது பின் துக்ளக் தர்பார் டெல்லில இருந்து தென்னகத்திர்க்கு வருகிறது.
Rate this:
Share this comment
Cancel
Vijayakumar Kaliyaperumal - Visakapatnam,இந்தியா
30-ஜூலை-201315:14:02 IST Report Abuse
Vijayakumar Kaliyaperumal ஆதர் அட்டையில் ஒன்றும் பெரிய அளவில் உபயோகபடபோவதில்லை....வெட்டி வேலை....பணத்தை வீனக்குகின்றனர்....ஒருவர் எத்தனை அட்டைதான் வைத்திருக்கலாம் என்றே விவஸ்தை இல்லை.... இந்த அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்க ஏதேனும் உறை ஒன்று கொடுத்தால் கூட நன்றாக இருக்கும்.... வாழக சிதம்பரனார்.... வளர்க அவரது புகழ்.....
Rate this:
Share this comment
Cancel
Shanmuga Sundaram - Bangalore,இந்தியா
30-ஜூலை-201311:51:33 IST Report Abuse
Shanmuga Sundaram what kind of English sentence? - it that looks a SSLC failed person has written that notice board...and arranging the other id-card for public?
Rate this:
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
30-ஜூலை-201310:53:02 IST Report Abuse
Chenduraan ஆடார் அட்டையிலே மக்கள் தொகைப்பதிவுத்துறையின் சார்பில்"ஸ்மார்ட் கார்டு'இக்கு தேவையான செய்திகளையும் பதிவு செய்து தரச்சொல்லி ஆடார் அட்டை நிறுவனத்துக்கு சொன்னால் எல்லாம் சரியாகிவிடுமே. இதெல்லாம் காசை கரியாக்க அரசியல் வியாதிகள் செய்யும் சதி. கொஞ்சமும் முற்போக்கு என்னாம் இல்லாத ஜந்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
காளி. சந்திர மௌலி - Kuala Lumpur,மலேஷியா
30-ஜூலை-201309:54:02 IST Report Abuse
காளி. சந்திர மௌலி இந்த அலைகழிவை நம்ம VAO, RI செஞ்சிருந்தா சந்தோசமா 50, 100 வெட்டியிருப்போம். தனியார் கம்பெனி என்பதாலே பெருசா செய்தி போட்டுவிட்டோம்.
Rate this:
Share this comment
Cancel
Raj Pu - mumbai,ஏமன்
30-ஜூலை-201305:55:53 IST Report Abuse
Raj Pu இதுதான் இந்தியா. மக்களின் மனோபாவம் அப்படி, இதில் தனியார், அரசு ஊழியர் எல்லாம் ஒன்று தான். இந்த அட்டைகள் கொடுக்க தனியாரிடம் ஒப்படைப்பு, இவர்களும் அப்படியே, பொறுப்பற்ற நிலைகள் தான். ஆனால் பத்திரிக்கைகள் தனியார் வசம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று ஒரு மாய தோற்றத்தை உண்டு பண்ண முயற்சிகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
30-ஜூலை-201305:38:57 IST Report Abuse
villupuram jeevithan ஒரு குடிமகன் எத்தனை விதமான அட்டைகள் வைத்திருக்க வேண்டியிருக்கிறது? ? ?
Rate this:
Share this comment
Rajkumar - Dammam,சவுதி அரேபியா
31-ஜூலை-201300:26:03 IST Report Abuse
Rajkumarபான் கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, நேஷனல் ஐடி கார்டு (சிகப்பு கலர்ல இருக்குமே), ஸ்மார்ட் கார்டு, முதியோர்களுக்கான பென்ஷன் கார்டு, தேர்தல் அடையாள கார்டு - இவை எல்லாம் அரசாங்கத்தால் ஒரு நபருக்கு மட்டும் வழங்கப்படும் கார்டுகள். இது தவிர atm கார்டு, கிரடிட் கார்டு, லைசன்ஸ் கார்டு. இது தவிர தனியாரால் வழங்கப்படும் பால்கார்டு... இன்னும் என்னப்பா இருக்கு நான் ரொம்ப நாளா ஊருக்கு வரல.....
Rate this:
Share this comment
Jai Hindh - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஜூலை-201311:14:33 IST Report Abuse
Jai Hindhபாஸ்போர்ட், தபால் துறை வழங்கும் அடையாள அட்டை.........
Rate this:
Share this comment
Sivramkrishnan Gk - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஆக-201313:02:11 IST Report Abuse
Sivramkrishnan Gkஎன்னங்க சீட்டு கம்பெனி, நிதி நிறுவனங்கள் கூட ஏதோ கார்டு குடுக்கறதா சொல்றாங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.