இலங்கை மீனவர்கள் அட்டூழியம்: நாகை மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலங்கை மீனவர்கள் அட்டூழியம்: நாகை மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

Added : ஜூலை 30, 2013 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இலங்கை மீனவர்கள் அட்டூழியம்: நாகை மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

நாகப்பட்டினம்: தமிழக எல்லைப் பகுதியில், மீன்பிடித்துக் கொண்டிருந்த, நாகை மீனவர்கள் மீது, பெட்ரோல் குண்டுகள் வீசி, அரிவாளால் வெட்டி, பொருட்களையும், மீன்களையும், இலங்கை மீனவர்கள் பறித்துச் சென்றது, மீனவர்களிடையே, கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம்,பெருமாள் பேட்டையைச் சேர்ந்த, ஐந்து மீனவர்கள், நேற்று முன்தினம் அதிகாலை, மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று அதிகாலை, வேதாரண்யத்தில், தமிழக கடல் பகுதியில், மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இரு படகுகளில் வந்த, இலங்கை மீனவர்கள் ஏழு பேர், நாகை மீனவர்கள் மீது, பெட்ரோல் குண்டுகளை வீசினர்; மீன் பிடி வலைகளை வெட்டினர். தடுக்க முயன்ற மீனவர்களை, பட்டாக் கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் நான்கு பேருக்கு, தலையிலும், இடது கையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. ஒருவருக்கு, கை விரல்கள் துண்டாயின. நாகை மீனவர்களின் படகில் இருந்த மீன்களை அள்ளி, மீன்பிடி வலைகளை வெட்டி, இலங்கை மீனவர்கள் எடுத்துச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் மயங்கியவர்களை, பூம்புகார் மீனவர்கள் காப்பாற்றி, நாகைக்கு அழைத்து வந்தனர். படுகாயமடைந்த ஐந்து மீனவர்களும், நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்ட மீனவ கிராமங்களில், ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீனவர்கள் மீன் பிடிக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் செல்ல முடியாத, பைபர் படகில், மீன்பிடித்த நாகை மீனவர்களை, இலங்கை மீனவர்கள் தாக்கி, பொருட்களை பறித்துச் சென்றது, நாகை மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
cris - trichy,இந்தியா
31-ஜூலை-201312:39:08 IST Report Abuse
cris மீனவ அண்ணன் மார்களே ... இலங்கை படையினரின் அட்டுளியத்தை வருட கனகாஹா நீங்களும் சொல்லி சொல்லி ஒரு பயனும் இல்லை இதுவரை. மற்றும் நடு கடலில் என்ன நடக்கிறது என்று பொது மக்களுக்கும் துல்லியமாஹா தெரியவில்லை, அதனால் ஒரு சிறு முயசியாஹா அங்கு நடப்பதை ஹிட்டென் கேமரா மூலம் பதிவு செய்து ஊடகங்கள் மூலம் வெளி இடுங்கள். இது பிரசனையை அணைத்து தமிழர்ஹளுக்கும் வட இந்தியர்களுக்கும் சீக்கிரம் சென்றடையும் ... உண்மையும் புரியும்... தமிழனை ஒடுக இனி யாரேனும் பிறந்து வரணும்... தமிழ் வாழ்க...
Rate this:
Share this comment
Cancel
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
31-ஜூலை-201310:44:58 IST Report Abuse
பி.டி.முருகன்    இலங்கை தனது மீனவர்களை கொம்பு சீவி விடுகிறது. இது சரியானதாக இருக்காது என்று நமது அரசு அவர்களுக்கு உணர்த்த வேண்டும். நமது மீனவர்களும் திருப்பி தாக்க ஆரம்பித்தால் அவர்களின் கதி என்ன ஆகும்?
Rate this:
Share this comment
Cancel
Sukumar T - Chennai,இந்தியா
31-ஜூலை-201309:31:15 IST Report Abuse
Sukumar T தமிழ்நாடு மீனவனை கொன்றால் கூட ஏன் என்று கேட்பதற்கு யாரும் வர மாட்டார்கள் எனத் தெரிந்து செய்திருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
31-ஜூலை-201307:39:17 IST Report Abuse
பி.டி.முருகன்    அவனுக புத்தி மாறப்போவதில்லை. இந்திய அரசும் ஒன்றும் பண்ண போவதில்லே. எல்லாம் நம்ம தலைஎழுத்து சாமி.
Rate this:
Share this comment
Cancel
SenthilKumar Modi - Auckland CBD,நியூ சிலாந்து
31-ஜூலை-201306:46:23 IST Report Abuse
SenthilKumar Modi விரட்டிகிட்டு வந்து அடிக்கிற அளவுக்கு இவங்க என்னத்த அங்கே பண்ணிட்டு வந்தாங்கன்னு தெரியலேயே. கடலம்மா தான் சாட்சி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை