மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியானது: நீர் மின் உற்பத்தி 220 மெகாவாட்டாக அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியானது: நீர் மின் உற்பத்தி 220 மெகாவாட்டாக அதிகரிப்பு

Added : ஜூலை 30, 2013 | கருத்துகள் (2)
Advertisement
மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியானது: நீர் மின் உற்பத்தி 220 மெகாவாட்டாக அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று, 105 அடியாக உயர்ந்த நிலையில், நீர்வரத்து, நேற்று, வினாடிக்கு, 61,233 கன அடியாக சரிந்தது. காவிரியில், 10,000 கன அடி தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ளதால், அணை, சுரங்க கதவணை மின் நிலையங்களில் மின் உற்பத்தி, 220 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணை உபரி நீர் தொடர்ச்சியாக வருவதால், நேற்று முன்தினம், 101 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று, 105 அடியாகவும், 66 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, 70.5 டி.எம்.சி.,யாகவும் அதிகரித்தது. அணை நிரம்ப இன்னமும், 23 டி.எம்.சி., நீர் தேவை. நேற்று முன்தினம், வினாடிக்கு, 88,988 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, வினாடிக்கு, 61,233 கனஅடியாக சரிந்தது. வினாடிக்கு, 10,000 கனஅடி நீர், பாசனத்துக்கு வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து, வெளியேற்றத்தில், இதே நிலை நீடித்தால், நீர் இருப்பு நாள் ஒன்றுக்கு, 4 டி.எம்.சி., உயரும். இந்நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் குறைந்ததால், நேற்று, கே.ஆர்.எஸ்., உபரிநீர் திறப்பு, 39,700 கனஅடியாகவும், கபினி நீர்திறப்பு, 15,000 கனஅடியாகவும் குறைக்கப்பட்டது. இரு அணைகளில் இருந்தும், 54,700 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வரும் நாளில் நீர்வரத்து குறையும் என்பதால், மேட்டூர் அணை நிரம்ப இன்னமும் ஐந்து நாட்களாகும்.


நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு:

மேட்டூர் அணையில் இருந்து, வினாடிக்கு, 6,000 கன அடி நீர், காவிரியில் திறக்கப்பட்டது. இதனால், மேட்டூர் அணை மற்றும் சுரங்க மின் நிலையங்களில், 60 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. மேலும், மேட்டூர் முதல், கரூர் வரை, ஆறு இடங்களில், காவிரியின் குறுக்கே கட்டியுள்ள, கதவணை மின் உற்பத்தி நிலையங்களில், தலா, 12 மெகாவாட் வீதம், 72 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில், டெல்டா பாசனத்துக்கு, நேற்று முன்தினம் மாலை முதல், வினாடிக்கு, 10,000 கனஅடி நீர், காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இதனால், மேட்டூர் அணை, சுரங்க மின் நிலையங்களில்,100 மெகாவாட் ஆகவும், கதவணை மின் நிலையங்களில் தலா, 20 மெகாவாட் வீதம், 120 மெகாவாட் ஆகவும், மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் மூலம், காவிரியில், வினாடிக்கு, 6,000 கன அடி நீர் வெளியேற்றும்போது, 132 மெகாவாட் ஆக இருந்த நீர்மின் உற்பத்தி, நீர்திறப்பு, 10,000 கனஅடியாக அதிகரித்ததால், 220 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. வரும், 2ம் தேதி, மேட்டூர் அணையில் இருந்து, பாசனத்துக்கு, மேலும், கூடுதல் நீர் திறக்கப்படும். அப்போது, காவிரியில் படர்ந்துள்ள ஆகாயதாமரைகள், ஷட்டர்களில் சிக்கி, மின் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், காவிரியில் தேங்கியிருந்த ஆகாயதாமரை, நேற்று, தண்ணீருடன் கொனூர் கதவணை மின் நிலைய எமர்ஜென்சி ஷட்டர்களை திறந்து, கீழ்பகுதியிலுள்ள காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
maxim - Coimbatore,இந்தியா
31-ஜூலை-201314:09:02 IST Report Abuse
maxim Thank God
Rate this:
Share this comment
Cancel
Karthick Ram - Bangalore,இந்தியா
31-ஜூலை-201313:40:49 IST Report Abuse
Karthick Ram மேட்டூர் ஆணை மின் உற்பத்தி .. கருணா வாய்க்கு புடுபோடுமா .. அது வருணபகவான் .. ஒருவருக்கே தெரியும் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை