விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில், தேசிய கொடி, ஒரு நூலிழையில் பறக்கிறது. விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில், பறக்க விடப்பட்டுள்ள, தேசியக் கொடி, இரு நாட்களாக, ஒரு நூலின் பிடியில், காற்றில் பறந்து வருகிறது. கம்பீரமாக பறக்க வேண்டிய தேசியக் கொடி, கிழிந்த போஸ்டர் போல் தொங்குகிறது. தேசியக் கொடியின் மேல், நடு, கீழ் என, மூன்று பகுதிகளை, கயிற்றுடன் இணைக்க வேண்டும்; ஆனால், மேல் பகுதியை மட்டும் கயிறுடன் இணைத்து, தேசியக் கொடியை ஏற்றி உள்ளனர். இதனால், காற்றின் வேகத்தில், கொடி அறுந்து விழும் நிலையில் உள்ளது.