நிலச்சரிவு, மண் சரிவு தடுக்க சணலும் "ஆயுதம்': நீலகிரியில் நிரூபணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிலச்சரிவு, மண் சரிவு தடுக்க சணலும் "ஆயுதம்': நீலகிரியில் நிரூபணம்

Added : ஜூலை 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நிலச்சரிவு, மண் சரிவு தடுக்க சணலும் "ஆயுதம்': நீலகிரியில் நிரூபணம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், நிலச்சரிவு அபாய பகுதிகளில், சணல் வலையின் உதவியுடன், தாவர இனங்களை வளர்க்கும் முயற்சி, பலன் கொடுக்க துவங்கியுள்ளது.
நீலகிரியில், 2009ல் பெய்த கனமழையால், பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு உயிர்ச்சேதம் நிகழ்ந்தது. ஆய்வு நடத்திய புவியியல், கனிமவளத் துறையினர், மீண்டும் நிலச்சரிவு ஏற்படக் கூடிய இடங்கள், அவற்றை தடுப்பது குறித்த யோசனைகளை கூறினர். ஊட்டியில் உள்ள மத்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி மைய தலைவர், கோலா, முதன்மை விஞ்ஞானிகள், மணிவண்ணன், கண்ணன் ஆகியோர் குழு, நிலச்சரிவு நிகழாமல் தடுத்து, தாவர இனங்களை வளர்ப்பது குறித்த யோசனைகளை தெரிவித்தனர். நிலச்சரிவு அபாய பகுதிகளில் சிலவற்றை தேர்வு செய்து, அங்கு சணல் வலை உதவியுடன், தாவர இனங்களை வளர்க்கும் ஆய்வை மேற்கொண்டனர். ஓராண்டு கடந்த நிலையில், அங்கு சணல் வலைகளின் இடுக்கில், வாடாமல்லி செடிகள் அடர்ந்து வளர்ந்து வருகின்றன.

மத்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கூறியதாவது: சத்து நிறைந்த மேல் மண், நிலச்சரிவின் போது அடித்துச் செல்லப்படும். மீண்டும் அந்த மண் உருவாக, பல ஆண்டுகள் பிடிக்கும். சாலையோரங்களில் புல், தாவர இனங்களை வளர்த்தாலே, மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியும். அதன்படி, குறைந்த முதலீடு கொண்ட சணல் வலைகளை சாலையோரங்கள், தோட்டங்களில் விரித்து, நிரந்தர பயிர்களை வளர்ப்பதன் மூலம், சணலில் உள்ள நார்ச்சத்து உட்பட பிற சத்துக்கள், அந்த தாவர இனங்கள் வளர உதவும்.


சில ஆண்டுகளில், அந்த சணல் வலைகள், மண்ணில் மக்கி விடும். சணலில் உள்ள சத்துக்கள் மண் வளத்தை பாதுகாக்கும். அதன் மூலம், அங்கு தாவர இனங்கள் வளர்ந்து, மண், நிலச்சரிவை கட்டுப்படுத்தும். இவ்வாறு, அவர்கள் கூறினர். நிலச்சரிவு அபாயமுள்ள, மாநிலத்தின் பிற பகுதிகளிலும், இம்முறையை விரிவுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை