E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கூடங்குளம் மின்சாரத்தில் பங்கு கேட்டு தென் மாநிலங்கள்போட்டா போட்டி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

31 ஜூலை
2013
00:19
பதிவு செய்த நாள்
ஜூலை 30,2013 23:34

"கூடங்குளம் அணுமின் நிலையத்தில், உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தையும், தமிழகத்துக்கு தரக்கூடாது' என, தென் மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இந்த மின்சாரத்தில், தங்களுக்கும் அதிக பங்கு தரவேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளன.

இதுதொடர்பாக, டில்லியில் நேற்று மத்திய அரசின் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:பலத்த எதிர்ப்புகளையும், தடைகளையும் தாண்டி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில், மின் உற்பத்தி துவங்கியுள்ளது. ஆனாலும், முழுவீச்சில் உற்பத்தி துவங்க, இன்னும் சில நாட்களாகும். இங்கு உற்பத்தியாக உள்ள, மின்சாரம் அனைத்தையும், தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதா உட்பட, பலரும், மத்திய அரசிடம் இதை வலியுறுத்தி வருகின்றனர்.

ஆந்திரா :



ஆனால், "கூடங்குளம் அணுமின் நிலையத்தில், உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தையும், தமிழகத்திற்கே வழங்கக் கூடாது' என, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இதுதொடர்பான கோரிக்கை மனுக்களும், மத்திய அரசுக்கு வந்துள்ளன. இந்த விவகாரத்தில், முன்னணியில் நிற்பது ஆந்திர மாநிலமே.கூடங்குள மின்சாரத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, 2001ல், ஒப்பந்தம் ஒன்று போட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில், இரண்டு பிரிவுகளில், உற்பத்தியாக உள்ள, 2,000 மெகா வாட் மின்சாரத்தில், 540 மெகாவாட்டை, ஆந்திராவுக்கு தர, மத்திய அரசு முன்வந்தது.ஆனால், "கிருஷ்ணா - கோதாவரி படுகையில், நிறைய எரிவாயு கிடைப்பதால், எங்களுக்கு கூடங்குளம் மின்சாரத்தில் பங்கு வேண்டாம்' என, அப்போது ஆந்திரா கூறிவிட்டது.தற்போது, கிருஷ்ணா - கோதாவரி படுகையில், எரிவாயு உற்பத்தி குறைந்து, நின்று போகும் அளவுக்கு, நிலைமைகள் உள்ளதால், கூடங்குளம் மின்சாரத்தில், தங்களுக்கு பங்கு தர வேண்டும் என, ஆந்திரா வலியுறுத்தி வருகிறது.

360 மெகா வாட்:



அதேபோல், கர்நாடக அரசும், "கூடங்குளம் மின்சாரம் அனைத்தையும், தமிழகத்திற்கே வழங்கக் கூடாது. எங்களுக்கும், 360 மெகா வாட் மின்சாரம் தர வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளது.கூடங்குளத்தில், விரைவில் உற்பத்தியாக உள்ள, 1,000 மெகா வாட் மின்சாரத்தில், தற்போதைய நிலவரப்படி, 440 மெகா வாட் தமிழகத்துக்கு வழங்கப்பட உள்ளது. இது மேலும் அதிகரிக்கப்பட்டு, 600 மெகா வாட் வரை, தமிழகத்துக்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.கேரளாவுக்கு, 100 மெகா வாட்டும், புதுச்சேரிக்கு, 35 மெகாவாட்டும், கர்நாடகாவுக்கு, 225 மெகா வாட்டும் வழங்குவது என, தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது போதாது என்று கூறி, மத்திய அரசுக்கு, கர்நாடக காங்., அரசு நெருக்கடி கொடுக்கத் துவங்கியுள்ளது.தென் மாநிலங்களைப் பொறுத்தவரை, ஆந்திராவில், 20 சதவீதமும், கர்நாடகாவில், 17.8 சதவீதமும், தமிழகத்தில், 19.4 சதவீதமும், மின் பற்றாக்குறை உள்ளது. எனவேதான், கூடங்குளம் அணுமின் நிலைய மின்சாரத்திற்காக, தென்மாநிலங்கள், போட்டா போட்டியில் இறங்கிஉள்ளன.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது டில்லி நிருபர் -



தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (32)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
malai alangaram - coimbatore,இந்தியா
01-ஆக-201305:45:26 IST Report Abuse
malai alangaram கூடங்குளத்தின் மின்சாரத்தை கேட்கும் இவர்கள் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான தண்ணீரை நமக்கு கொடுக்கமாட்டார்கள். நெய்வேலி, கல்பாக்கம் மற்றும் பிற மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து பிற மாநிலங்களுக்கு கொடுக்கும் மின்சாரத்தையும் நிறுத்த வேண்டும். தண்ணீர் கொடுத்தால் தான் மின்சாரம் கொடுப்போம் என்று தமிழகமும் நெருக்கடி கொடுக்கவேண்டும். இது தான் தமிழகத்திற்கு சரியான தருணம். நதி நீரையும் மின்சாரத்தையும் தேசியமயமாக்கவேண்டும். இப்பொழுது நாம் பிரச்சினையை கிளப்பினால் தான் பிற மாநிலங்கள் வழிக்கு அல்லது ஒரு உடன்பாட்டிற்கு வரும். இத்தனை மெகாவாட்டிற்கு இத்தனை டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்று ஒப்பந்தங்கள் போட்டால் தான் அவர்கள் வழிக்கு வருவார்கள். தமிழகத்திற்கு பக்கத்து மாநிலங்களை அரசியல் ரீதியாக, தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைக்காமல் வழிக்கு கொண்டு வர இது தான் சரியான தருணம். மக்களும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டால் தமிழகத்தின் எதிர்காலத்திற்கு சரியான நீதி கிடைக்கும். தமிழக முதல்வரும் மற்ற அரசியல் கட்சிகளும் இந்த பிரச்சினையை கவனிப்பார்களா?
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Cancel
Bala - Singapore,சிங்கப்பூர்
31-ஜூலை-201316:03:53 IST Report Abuse
Bala முதலில் கர்நாடகஅரசை காவிரி ஆற்றில் தண்ணீர் விட உத்தரவு இட்ட பிறகு மின்சாரம் வழங்குவது பற்றி யோசிக்கலாம். தயவு செய்து தமிழக அரசியல்வாதிகள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை மறந்துவிட்டு தமிழக மக்களின் நலனை கருத்தில்கொண்டு ஒன்றுபட்டு போராடவேண்டும். ஒன்றுபடுவர்களா?????????
Rate this:
0 members
0 members
37 members
Share this comment
Cancel
Peppeppe - GH,இந்தியா
31-ஜூலை-201315:31:18 IST Report Abuse
Peppeppe Kannadiga 's துளி தண்ணீர் கெட தரமாடாங்கலாம், மல்லு's ஆணை கட்டுறேன்னு அதுக்குள்ளேயே Internal Tank டிசைன் ல அணைகட்டி எங்ககிட்டயே தண்ணி இல்லேன்னு கணக்கு கான்பிபாங்கலாம். நாங்க மட்டும் என்ன "DASH " கு கரண்ட் குடுக்கணுமாம்..எங்க அம்மா வும் உங்கள மாதிரியே ஒரு கணக்கு சொல்லுவாங்க அத கேட்டு மனச தேதிகொங்க..இது ஒரு கொடுமை என்ன னா? ஒருவேளை மலை அதிகமா வந்துச்சுனா இவனுங்களாலே தண்ணி யெ முட்டு குடுத்து நிறுத்த முடியாது ...ஆன நாங்க நினைச்ச ஸ்டாப் பண்ணுவோம் நினைச்ச produce பண்ணுவோம்...இல்ல அதுக்கு பொய் கணக்கு காட்டுவோம் என்ன கரண்ட்தான் தண்ணீர் மாதிரி கண்ணுக்கு தெரியாதே.. yeppuuuudddiiii ...
Rate this:
0 members
0 members
33 members
Share this comment
Cancel
Ma. PARAIYARAIVON - Thoothukudi,இந்தியா
31-ஜூலை-201315:21:33 IST Report Abuse
Ma. PARAIYARAIVON யாரு வீட்டுல ஆக்கின சோத்துக்கு எவனெல்லாம் பங்கு போடுவீங்க?. தண்ணி கேட்டா குடுக்க மாட்டீங்க, டேம்'ஐ உடைக்க வருவீங்க, கரண்ட் மட்டும் வேணுமோ?,
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
Cancel
PM Rani - new delhi,இந்தியா
31-ஜூலை-201315:18:34 IST Report Abuse
PM Rani அய்யாக்களே.. மின்சாரம் தயாரிக்க செலவான ரூபாய் 17,0000 கோடியைக் கொடுத்தது மத்திய அரசு. மத்திய அரசுக்கு பணம் எல்லா மாநிலங்களில் இருந்து கிடைக்கிறது. அதனால் இந்தப் பிரிவினை கருத்தை கூறாதீர்கள். எல்லோரும் நன்றாக இருந்தால் நமக்கென்ன கெடுதல். ஏன் இப்படி தாழ்ந்த மனப்பான்மையுடன், குறுகிய நெஞ்சத்துடன் கெடுதல் நினைத்து கருத்து கூறுகிறீர்கள். சுயநலமிகளா நாம்?
Rate this:
29 members
0 members
4 members
Share this comment
Mirun Ragu - Cold Lake,இந்தியா
01-ஆக-201305:21:08 IST Report Abuse
Mirun Raguகாசு கொடுத்தது மத்திய அரசு சரி , எந்த மாநிலமாவது அணு உலை அமைக்க முன்வருமா , தமிழனின் பாதுகாப்பை பறிகொடுத்து அடுத்தவனுக்கு வாழ்வா , தமிழ்நாட்டுக்கு போக உதிரி இருந்தால் கொடுக்கலாம் ,...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
INTHIRAN - singapore,சிங்கப்பூர்
31-ஜூலை-201315:16:50 IST Report Abuse
INTHIRAN பேசாம...ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியா...அணுமின் நிலையம் கட்டிக்கொடுத்துட்டா...பிரச்சினை இல்லை பாருங்க....
Rate this:
0 members
0 members
18 members
Share this comment
Cancel
umarfarook - dindigul,இந்தியா
31-ஜூலை-201315:13:42 IST Report Abuse
umarfarook அந்த அணுக்கழிவுகளை கொட்ட அனுமதிப்பவர்களுக்கு அதிக மின்சாரம் தரப்படும்னு சொல்லிடுங்க நா சா (நாராயண சாமி )
Rate this:
0 members
0 members
39 members
Share this comment
Cancel
jeya - Alagarkovil Madurai,இந்தியா
31-ஜூலை-201311:07:37 IST Report Abuse
jeya என்னடா நொன்னைகல அணு உற்பத்தி நிலையம் வேண்டாம் உங்க மாநிலத்திற்கு அதில் இருந்து உற்பத்தி ஆகும் மின்சாரம் மட்டும் வேண்டுமா ????????
Rate this:
0 members
0 members
44 members
Share this comment
Cancel
Sathyamoorthy - Bangalore,இந்தியா
31-ஜூலை-201310:46:52 IST Report Abuse
Sathyamoorthy ஆந்திராவை ஓரளவு கணக்கில் வைக்கலாம். ஆனால் மலையாளத்தானையும், கன்னடத்தவனையும் அனுமதிக்க கூடாது. அய்யா, தமிழர்களே, ஜாதி மதம் இனம் கடந்து இதிலாவது எல்லோரும் ஒன்று படுங்கள். காங்கிரஸ் அரசுக்கு ஆப்பு அடியுங்கள். இது ஒரு புறமிருக்க, கடந்த பிஜேபி ஆட்சி ஓரளவுக்காவது நியாயமாக நடந்தது என்பதே உண்மை. தண்ணீர் முழுதாக கொடுக்க விட்டாலும், கொஞ்சம் தண்ணீர் திறந்து விட்டது.
Rate this:
148 members
2 members
104 members
Share this comment
Cancel
பி.டி.முருகன் - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
31-ஜூலை-201310:42:40 IST Report Abuse
பி.டி.முருகன்    என்ன கூட்டலோ? என்ன குளமோ? ஒரே குழப்பமாக இருக்கு.
Rate this:
5 members
1 members
5 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.