Advertisement
அத்வானி வருகையால் பரபரப்பு : போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் சேலம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

31 ஜூலை
2013
00:20
பதிவு செய்த நாள்
ஜூலை 30,2013 23:35

சேலம்: சேலம் பா.ஜ., பிரமுகர், ஆடிட்டர் ரமேஷ் படுகொலையை கண்டித்து, நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள, அத்வானி வருவதால், சேலம் மாநகரம், போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சேலத்தில், ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்கவும், கொலையை கண்டித்து நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும், பாரதிய ஜனதா தேசிய தலைவர்களில் ஒருவரான அத்வானி, நாளை, சேலம் வருகிறார்.சேலம், விமான நிலையத்தில் இருந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சேலம் மரவனேரியில் உள்ள, ஆடிட்டர் ரமேஷ் வீட்டுக்கு அழைத்து வரப்படுகிறார். தொடர்ந்து, கொலை நடந்த இடத்தை பார்வையிடுகிறார்.அத்வானி வருகையால், பாதுகாப்பு கருதி, அப்பகுதியில் உள்ள வீடுகள், அலுவலகங்களுக்கு வந்து செல்பவர், தங்குபவர்கள் குறித்த விவரங்களை, போலீசார் சேகரித்து வருகின்றனர். வெளியாட்கள் அப்பகுதிகளில் தங்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. மரவனேரி பகுதிக்குள் செல்வோரிடம், கடும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஆடிட்டர் ரமேஷின் வீடு உள்ள முதல் கிராஸ், அலுவலகம் செயல்படும் இரண்டாவது கிராஸ் பகுதி, "சீல்' வைக்கப்பட்டு உள்ளது. இங்கு, 24 மணி நேரமும், ஆயுதம் தாங்கிய போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இதே போல், கண்டன பொதுக்கூட்டம் நடக்கும், மூன்று ரோடு ஜவஹர் மில் திடலும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள், கொண்டு வரப்பட்டுள்ளது. சேலம் மாநகரம் முழுமையும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நகரில், பல இடங்களில், தடுப்புகள் அமைத்து, வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.டில்லி, சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், நிகழ்ச்சி நடக்கும் இடங்களில், நேற்று காலை, சோதனைகளை மேற்கொண்டனர். சேலம் மாநகர், புறநகரில் மட்டும், 6,400 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த, போலீஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.வெளிமாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வரும் போலீசார், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்களில், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்வானி வருகை குறித்த ஒத்திகை நிகழ்வு, இன்று காலை நடத்தப்படுகிறது. இதனால், போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்படுகிறது.அத்வானி வரும் சாலை, நிகழ்ச்சி நடக்கும் இடம், தங்கும் இடம் ஆகிய பகுதிகளில், நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த இடங்களில், இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை, வெடி குண்டு தடுப்பு பிரிவு போலீசார், தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்வானி தங்குமிடத்தில் சிக்கிய மர்ம ஆசாமி :



சேலத்தில், அத்வானி தங்கும், இரும்பாலை சுற்றுலா மாளிகைக்கு அருகே, "பேட்டரி, கன்டன்சருடன்' திரிந்த ஒருவரை பிடித்த போலீசார், ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம், ஆடிட்டர் ரமேஷ் படுகொலையை கண்டித்து, சேலத்தில் நடத்தப்படும் கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி, நாளை வருகிறார். அவர் தங்கும், இரும்பாலை சுற்றுலா மாளிகையில், துப்பாக்கி ஏந்திய போலீசார், 24 மணி நேர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்; சிறப்பு புலனாய்வு குழு போலீசாரும், கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.சுற்றுலா மாளிகை அருகே, நேற்று பகல், 12:00 மணியளவில், சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த, 45 வயது மதிக்கத்தக்க ஆசாமியை, பாதுகாப்பு பணி போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்த மஞ்சள் பையில், பேட்டரி மற்றும் கன்டன்சர் உள்ளிட்ட பொருட்கள் சிக்கின.பிடிப்பட்ட ஆசாமியை, சேலம் எஸ்.பி.,யிடம் ஒப்படைத்தனர். ரகசிய இடத்தில் விசாரணை நடத்தியதில், முகமது அலி, 45, என, தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.



தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.SURIYANARAYANAN - chennai,இந்தியா
31-ஜூலை-201316:25:17 IST Report Abuse
K.SURIYANARAYANAN நாட்டில் தீவிரவாதிகள் அதிகரித்து விட்டனர். ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட தீவிரவாதிகளை கண்காணிக்காமல் விட்டுவிட்டதே இத்தனை துன்பத்திற்கும் காரணம். இவர்களை ஒடுக்குவதற்கு பொடா போன்ற சட்டத்தை மீண்டும் கடுமையாகவேண்டும். அப்படி இல்லை என்றால் உடலில் சென்சர் பொருத்தி செயற்கை கோள்கள் மூலம் அவர்களை கண்காணிக்கவேண்டும். இந்த மாதிரி செய்தால் தான் இவர்கள் திருந்துவார்கள்.
Rate this:
6 members
0 members
14 members
Share this comment
Cancel
Venkatesan - Poompuhar,இந்தியா
31-ஜூலை-201315:00:03 IST Report Abuse
Venkatesan இவர் போன்ற தலைவர்கள் தமிழக மீனவர்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். அன்றுதான் பி ஜே பி யை தேசிய கட்சி என்று கருதி அவர்களை பிரதமர் ஆக்கலாம்.
Rate this:
1 members
0 members
11 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
31-ஜூலை-201313:40:47 IST Report Abuse
Pugazh V அத்வானி வந்து என்ன கண்டனம் தெரிவிக்கப் போகிறார்? கவனமாக மாநில அரசை விமர்சிப்பதைத் தவிர்த்தும், காவல் துறையின் கவனமின்மைகளை சுட்டிக் காட்டாமலும், சம்பந்தமே இல்லாமல், மத்திய அரசை வம்பிழுத்தும் ஹிந்தியில் பேசுவார். யாராவது ஒரு லோகல் அதை மொழி பெயர்ப்பார். மாநலத்தில் ஆளும் கட்சியின் தயவு பா ஜ க விற்குத் தேவை என்பதால் வழ வழா கொழ கொழா என்று பேசிவிட்டுப் போவார். இதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம். எந்த வட மாநில தலைவர்கள் வந்தாலும் அன்றைய தினம் ஆபீசுக்கு லேட் தான்.
Rate this:
21 members
0 members
20 members
Share this comment
Cancel
Mr. Right - Delhi, ,இந்தியா
31-ஜூலை-201306:18:35 IST Report Abuse
Mr. Right அத்வானி அவர்கள் தமிழகம் வரும்போதெல்லாம் (கோவை குண்டு வெடிப்பு, மதுரை பைப் வெடிகுண்டு) பல அசம்பாவிதங்களை சில இயக்கங்கள் செய்து வருகின்றன... அது போன்று எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க காவல்துறை விழிப்புடன் இருப்பது நல்லதே....
Rate this:
7 members
1 members
52 members
Share this comment
Cancel
Mr. Right - Delhi, ,இந்தியா
31-ஜூலை-201306:10:23 IST Report Abuse
Mr. Right அத்வானி வருகிறார் என்றவுடன் 2 அடுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வளையங்களை போடும் காவல்துறை இந்துக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கி இருந்தால் ஆடிட்டர் ரமேஷ் கொலையும் நடந்திருக்காது..... அத்வானி வரவேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது....
Rate this:
58 members
0 members
148 members
Share this comment
Cancel
p.mohamed rafik,kuruvadi - hafar al batin,இந்தியா
31-ஜூலை-201304:13:01 IST Report Abuse
p.mohamed rafik,kuruvadi மக்களின் வரி பணம் மக்களின் பாது காப்புக்கு மட்டும் செலவு செய்யப் பட வேண்டும்.இப்படி தனி மனிதர்களின் பாதுகாப்பிற்கே செலவு செய்தால் நாட்டில் வறுமையை எப்படி போக்க முடியும்.
Rate this:
156 members
0 members
86 members
Share this comment
Mr. Right - Delhi, ,இந்தியா
31-ஜூலை-201306:46:43 IST Report Abuse
Mr. Rightஇதுக்கே இவ்வளவு வருத்த படுகிறீறே... பிரதமரின் காருக்கு 3 அடுக்கு பாதுகாப்பு... அதுக்கு என்ன சொல்ல போறீங்க........
Rate this:
12 members
0 members
39 members
Share this comment
p.mohamed rafik,kuruvadi - hafar al batin,இந்தியா
01-ஆக-201301:50:04 IST Report Abuse
p.mohamed rafik,kuruvadiநாட்டின் பிரதமர் ஒருவர்தான்.அவருக்கு பாதுகாப்பு அளிப்பதில் தவறு இல்லை.அவருக்கு அவசியம் பாதுகாப்பு கொடுக்கப் பட வேண்டும்.அதற்காக மற்ற எல்லா தனி மனிதர்களுக்கும் அது போல் கொடுக்கப் பட வேண்டும் என்றால் எப்படி....
Rate this:
12 members
0 members
39 members
Share this comment
Cancel
Rss - Mumbai,இந்தியா
31-ஜூலை-201301:23:04 IST Report Abuse
Rss இஸ்லாமியர்களால் பாஜக வுக்கு மட்டும் அல்லாது இந்திய நாட்டுக்கும் ஆபத்து அதிகம்
Rate this:
278 members
0 members
282 members
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
31-ஜூலை-201301:18:45 IST Report Abuse
விருமாண்டி ஒரு சில நல்ல இஸ்லாமியர்களை தவிர மற்ற அனைவரும் மத வெறிபிடித்த மனிதர்களே இவர்களால் இந்திய நாட்டுக்கு தொல்லையே அதிகம்
Rate this:
213 members
2 members
233 members
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
31-ஜூலை-201301:08:16 IST Report Abuse
Ab Cd கண்டன கூட்டம் என்று கூறி, கலவர காண்டத்தை ஆரம்பித்து விடுவார்கள். காவல் துறை மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும்
Rate this:
250 members
1 members
279 members
Share this comment
Cancel
Karthi - Kerala,இந்தியா
31-ஜூலை-201300:32:18 IST Report Abuse
Karthi முதல்ல எல்லாருமே ஒரிஜினல் போலீஸ் தானான்னு செக் பண்ணுங்க,,,,,,,,,,,,,,, Uniform குறைஞ்ச வாடகைல கிடைக்குது,............... பாகிஸ்தான்ல போலீஸ் உடையில வந்துதான் 300 தலிபான்களை தப்பிக்க வச்சானுங்க இந்தியாவ காப்பத்தனும் ஈரான், ஈராக், பாகிஸ்தான், எகிப்த், சிரியா,etc போன்ற நாடுகள்ள காவி தீவிரவாதம் பெருகிவிட்டது.
Rate this:
133 members
0 members
87 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.