E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
சேமிப்பு கிடங்கில் தானியங்களில் பூச்சிகள்: மக்கள் அலறியடித்து ஓட்டம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

31 ஜூலை
2013
00:22
பதிவு செய்த நாள்
ஜூலை 30,2013 23:36

கோவை:அரசு தானிய சேமிப்பு கிடங்கில், போதிய, பராமரிப்பு இல்லாததால், ஆயிரக்கணக்கான பூச்சிகள், தானியங்களை சேதம் செய்கின்றன. குடியிருப்புகளிலும், நுழைவதால், பொதுமக்கள் அலறியடித்து ஓடுகின்றனர்.

கோவை, பீளமேடு ஹட்கோ காலனி பகுதியில், 30 ஏக்கர் பரப்பில், மத்திய அரசின், இந்திய உணவுக்கழகத்துக்கு சொந்தமான, தானிய சேமிப்புக்கிடங்கில், கோதுமை, அரிசி உள்ளிட்ட, தானியங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது, 87,000 டன் உணவு தானியங்கள், 100 மற்றும் 75 கிலோ மூட்டைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. போதிய, பராமரிப்பு இல்லாததால், தானிய பூச்சிகள் அதிகரித்துள்ளன.மேலும், இப்பூச்சிகள், மாலை நேரத்தில், குடோனிலிருந்து பறந்து வெளியேறி, அருகே உள்ள, குடியிருப்புகளில் நுழைந்து, கண், காது, மூக்கு, வாயினுள் சென்று விடுவதால், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடிக்கின்றனர்.

பொது மக்கள் கொடுத்த புகாரையடுத்து, கோவை மாவட்ட வருவாய் அலுவலர் கற்பகம், தானியக் கிடங்கு மற்றும் குடியிருப்பு பகுதியில் விசாரணை மேற்கொண்டார். பின், அவர் கூறுகையில், "மண்டல பூச்சியியல் அலுவலர், மாநகராட்சி நகர்நல அலுவலர், சுகாதாரத்துறை இணைந்து, தானிய பூச்சியை அழிக்கும் பணியில் ஈடுபடுவர். புகை மற்றும் தெளிப்பான், மாத்திரை வடிவ மருந்துகளை கொண்டு, பூச்சிகள் இரண்டு நாளில் அழிக்கப்படும்' என்றார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் பிரபாகரன் கூறுகையில், ""உணவு தானியங்களில், பூச்சி இல்லாமல், சுத்தமான சூழலில் மட்டுமே, பொது வினியோகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது; இருப்பினும், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதாரத்துறை இணைந்து, தானிய பூச்சியை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வர்,'' என்றார்.



தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ksv - chennai,இந்தியா
31-ஜூலை-201316:08:19 IST Report Abuse
ksv இது இலவசமோ காசோ நாம் அல்லது நமது மக்கள் தான் சாப்பிடுவோம் இதனால் ஏற்படும் பாதிப்பும் நம்மை போன்ற நடுத்தர குடும்பங்களுக்குதான் எனவே சம்பத்த பட்ட அதிகாரிகள் இத்தகைய குறைபாடுகள் களைய ஈடுபாடு காட்ட வேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ramasamy naicken - bermuda,பெர்முடா
02-ஆக-201300:14:46 IST Report Abuse
ramasamy naickenஅரசாங்கம் ஏன் இந்த தொழிலை செய்ய வேண்டும்?...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ramasamy naicken - bermuda,பெர்முடா
31-ஜூலை-201304:01:48 IST Report Abuse
ramasamy naicken கம்யூனிஸ்ட் மிகவும் பெருமை பட்டு கொள்ளலாம். முந்திரிகள், அதிகாரிகள் லஞ்ச உழலில் திளைத்து, எல்லாவற்றையும் வீனடிக்கலம். ஆனால் தொழில் அதிபர்கள் மிகுந்த ரிஸ்க் எடுத்து நான்கு காசு சம்பாதிக்க கூடாது.
Rate this:
1 members
1 members
9 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
31-ஜூலை-201303:44:32 IST Report Abuse
Baskaran Kasimani "பூச்சி இல்லாமல், சுத்தமான சூழலில் மட்டுமே, பொது வினியோகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது இருப்பினும், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதாரத்துறை இணைந்து, தானிய பூச்சியை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வர்" - முரண்பாடான பேச்சு. இன்னும் இது போன்ற அதிகாரிகளிடம் இருந்து சுதந்திரம் கிடைக்கவில்லை.
Rate this:
0 members
0 members
10 members
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
31-ஜூலை-201302:08:40 IST Report Abuse
jagan இலவசம்னு சொல்லுங்க... இத வாங்க பெரிய பையோட லைன்ல நிக்கும்க......
Rate this:
1 members
0 members
14 members
Share this comment
Cancel
sairam - muscat,ஓமன்
31-ஜூலை-201300:23:33 IST Report Abuse
sairam என்ன கொடும சார்.......
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.