Actress Kanaka Is Alive | இறந்துவிட்டாரா நடிகை கனகா? வீண் பரபரப்பை ஏற்படுத்திய "டிவி' சேனல்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இறந்துவிட்டாரா நடிகை கனகா? வீண் பரபரப்பை ஏற்படுத்திய "டிவி' சேனல்கள்

Updated : ஜூலை 31, 2013 | Added : ஜூலை 30, 2013 | கருத்துகள் (46)
Advertisement
Actress, Kanaka,Alive, நடிகை, கனகா, வீண், பரபரப்பு, டிவி, சேனல்கள்,

சென்னை: "புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை கனகா காலமானார்' என்று, "டிவி' சேனல்கள், நேற்று பிற்பகல் வெளியிட்ட தகவல், தமிழகம் முழுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், உயிருடன் உள்ள நடிகை கனகா, ""நான் நலமுடன் உள்ளேன். ஆண்களை பிடிக்காததால், திருமணம் செய்து கொள்ளாமல், தனிமையில் வசித்து வருகிறேன். எனக்கு புற்றுநோய் இருப்பதாக கூறி, தேவதாஸ் என்பவர், என் சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார்,'' என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

கடந்த, 1989ல் வெளியான, "கரகாட்டக்காரன்' படத்தின் கதாநாயகியாக, தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை கனகா. "புருஷன் எனக்கு அரசன், துர்கா, சாமுண்டி, கும்பக்கரை தங்கையா, தாலாட்டு கேக்குதம்மா, அம்மன் கோவில் திருவிழா, சக்கரைத்தேவன்' உட்பட பல படங்களில், நடிகர்கள், ரஜினி, பிரபு, விஜயகாந்த், கார்த்திக், மம்முட்டி, மோகன்லால் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
பழம் பெரும் நடிகை தேவிகா இவரது தாய். தேவிகா இறந்த பின், படங்களில் நடிப்பதை கனகா தவிர்த்தார். "கணவர்' என, கூறிய நபர் மற்றும் "ஆவி' அமுதா ஆகியோருடன் ஏற்பட்ட பிரச்னையால், மிகவும் வேதனைப்பட்டார். 2004ல் இருந்து, திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார்.


புற்றுநோய்?

இந்நிலையில், "நடிகை கனகா புற்றுநோயால் அவதிப்படுகிறார். கேரளா மாநிலம், ஆலப்புழாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்' என, இரண்டு தினங்களுக்கு முன், தகவல் வெளியானது. இதுகுறித்து, ஆலப்புழாவில் உள்ள தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டபோது, தகவல் உறுதியாகவில்லை. இதனால், நடிகை கனகா எங்கு இருக்கிறார் என, இரண்டு நாட்களாக பரபரப்பு காணப்பட்டது.


"பிளாஷ் நியூஸ்':

இந்நிலையில், நேற்று பிற்பகல், "நடிகை கனகா இறந்துவிட்டார்' என, சில தமிழக, "டிவி' சேனல்களில், "பிளாஷ் நியூஸ்' வெளியானது. இது, கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் நடிகை கனகா வீடு உள்ளது. அங்கு, பத்திரிகையாளர்கள் சென்றபோது, கனகா, அவர் வளர்க்கும் பூனைகளுக்கும்,கோழிகளுக்கும் நிதானமாக தீனி போட்டுக் கொண்டு இருந்தார். அதிர்ச்சி அடைந்த பத்திரிகையாளர்கள், நடந்த விஷயம் குறித்து அவரிடம் விளக்கம் கேட்டனர். அப்போது நடிகை கனகா கூறியதாவது: நான், ஆலப்புழாவில் சிகிச்சை பெற்று வந்தாக கூறப்பட்டது, தவறான தகவல். நான், சென்னை வீட்டில் தான் இருகிறேன். எனக்கு புற்றுநோய் என, வதந்தி பரவியிருக்கிறது. நல்ல வேளை, "எய்ட்ஸ்' என்று செய்தி வரவில்லை. இந்த வதந்திகளை, என் தந்தை என்று கூறிக் கொள்ளும், தேவதாஸ் என்பவர் தான் பரப்புகிறார். இதையே காரணமாக வைத்து, என்னை சந்தித்து பேசி, என் சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார். பத்திரிகைகளில் செய்தி வந்ததும், என்னை தேடி ஆலப்புழாவுக்கு அவர் செல்லாமல், என் சென்னை வீட்டிற்கு வர முயன்றதை வைத்து பார்க்கும் போது, அவர் தான் என்னை பற்றி தவறான செய்தி பரப்பியிருக்கலாம் என, சந்தேகப்படுகிறேன். என் அம்மாவுக்கு ஒரு நல்ல கணவனாக, எனக்கு நல்ல தந்தையாக அவர், எந்நாளும் நடந்து கொண்டதில்லை. அம்மா இறந்த பின், எனக்கு பல சிரமங்கள் வந்தன. அவற்றை சமாளித்து, அமைதியாக வாழ்ந்து வருகிறேன். அப்பா என்று சொல்லிக் கொண்டவருக்கு, என்னைவிட, என் சொத்து மீது தான் அதிக கவனம். இதனால் தான், எனக்கு ஆண்களை பிடிக்காமல் போனது; "இனி திருமணம் வேண்டாம்' என, முடிவெடுத்து தனிமையில் வாழ்ந்து வருகிறேன். என் வீட்டில், வேலைக்காரி மட்டுமே உடன் இருக்கிறார். எக்காரணத்தை கொண்டும் என் தந்தை என, கூறிக் கொண்டிருக்கும் தேவதாசை, என் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன். என் அம்மாவிற்கு அவர் செய்த துரோகத்தை மன்னிக்கவே மாட்டேன். சில நடிகர், நடிகைகளிடம் பேச முயற்சித்தேன். அவர்கள் பேச விரும்பவில்லை; பரவாயில்லை. பத்திரிகைகளில் எனக்கு புற்றுநோய் என செய்தி வந்தது, வருத்தமாக இருக்கிறது. தற்போது, நான் இறந்துவிட்டதாக செய்தி வந்து இருப்பது, அதிர்ச்சியாக இருந்தாலும், உங்களின் (பத்திரிகையாளர்கள்) சந்திப்பால், நான் நல்லபடியாக இருப்பது, மக்களுக்கு தெரிந்துவிடும்; இது சந்தோஷமாக இருக்கிறது; யார் மீதும் நான் வருத்தப்பட்டு என்னவாகப் போகிறது. இவ்வாறு, நடிகை கனகா கூறினார்.


பாசம் எங்கே?

நடிகை கனகா கூறியதாவது: என்னைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி கொள்பவர்களுக்கு, என்னைவிட, என் சொத்தின் மீது தான், கவனம் அதிகம் உள்ளது. அவர்களைப் பார்த்தால், வெறுப்பு தான் வருகிறது. மனிதர்களைவிட வளர்ப்புப் பிராணிகள் மீது தான் பாசம் அதிகம் இருக்கிறது. எனவே தான், 35 பூனை, 35 கோழிகளை வளர்த்து வருகிறேன். இவை என்னிடம் பாசமாக உள்ளன. இதுவே எனக்கு மன நிறைவாக உள்ளது. இவ்வாறு, கனகா கூறினார்.


தந்தை பேட்டி:

கனகாவின் தந்தை தேவதாஸ் கூறும்போது, ""கனகாவுக்கு புற்றுநோய் என, பத்திரிகைகளில் செய்தியைப் பார்த்துவிட்டு தான், கனகா வீட்டிற்குச் சென்றேன். என்னை வேண்டாதவனைப் போல நினைக்கிறாள். வேலைக்காரியை விட்டு என்னைத் துரத்திவிட்டாள். என்ன தான் அலட்சியப்படுத்தினாலும், அவள் என் மகள்; அவள் மீதான பாசம் குறையாது. தனிமை தான் அவளை இந்த நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது,'' என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Salim Sirkali - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஆக-201301:33:36 IST Report Abuse
Salim Sirkali இறந்துவிட்டார் என வதந்தி வந்து இருக்கிறாரா என யோசிக்க வைத்த கனகாவை மீண்டும் பிரபல படுத்தியதற்காக மீடியாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ksv - chennai,இந்தியா
31-ஜூலை-201316:02:31 IST Report Abuse
ksv அமைதியுடன் வாழ ஆண்டவன் அருளட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Peppeppe - GH,இந்தியா
31-ஜூலை-201314:59:35 IST Report Abuse
Peppeppe சினிமா லே எனகு தெரிஞ்சு எந்த கேட்ட பெயரும் இல்லாம வால்தவங்க இந்த கனகா, மத்த நடிகைகள் கூட husband மாத்தி, seperate ஆஹி, இந்த மாதிரி எதுவுமே இல்லாம silent ஆஹ் வாழ்ந்து வருவதற்கு வாழ்த்துகள் மற்றும் வணக்கங்கள்..ஆனா இவங்க கூட பேசத்தயாரா இல்லாத நடிகர் மற்றும் நடிகைகள் உண்மையில் வெட்கம்/மானம் கெட்டவர்கள்...
Rate this:
Share this comment
Cancel
appu - madurai,இந்தியா
31-ஜூலை-201314:58:29 IST Report Abuse
appu அப்பன நம்புறதா இல்ல புள்ளைய நம்புறதா?கனகா மேல பரிதாபம் தான் தோன்றுகிறது...அப்பன் உண்மையில் நல்லவன் என்றால் மகளின் இந்த நிலை கண்டு தகுந்த நல்ல ஆரோக்கியமான அனுகுமுறையில் பிரச்சனைகளை தீர்த்து நன்றாக வாழ வைக்க முயற்சிக்க வேண்டும்...அப்படி இல்லாமல் இது போல சால்ஜாப்பு சொல்வது என்னவோ பிரச்சனை அப்பன்காரன் மேல் இருப்பதாகவே எண்ண தோன்றுகிறது... கனகா நன்றாக நீடூழி வாழ வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
D.GANESAN - cgl,இந்தியா
31-ஜூலை-201314:54:18 IST Report Abuse
D.GANESAN ஒரு பெண் தைரியமுடன் வாழ முடியும் என்று இந்த உலகத்திற்கு காட்டும் நீங்கள் நலமுடன் நீடுழி வாழ ஆண்டவனை பிரார்த்தனை செய் வோம் .கடவுள் சக்தி உங்களுக்கு துணை நிற்கும் . ganesansai@gmail.com
Rate this:
Share this comment
Cancel
Faithooraan - Pudugai.,இந்தியா
31-ஜூலை-201314:38:32 IST Report Abuse
Faithooraan தேவிகா அவர்களின் ஆசைப்படி நீங்க சினி திரையை விட்டு வாழ பழகவும். திருமணம் செய்து கொண்டு வாழ்வை பூர்த்தி செய்யுங்க... தடம்... ரொம்ப முக்கியம். கோழியும் மைனாவும் வாழ்வின் அலங்காரங்கள் அஸ்திவாரங்கள் அல்ல.மனிதன் மனிதனாகத்தான் தடம் பதிக்கணும்.
Rate this:
Share this comment
Cancel
Conjivaram Rajan Gopalkrishnan - Chennai,இந்தியா
31-ஜூலை-201314:07:36 IST Report Abuse
Conjivaram Rajan Gopalkrishnan இந்த நாட்டில் மனித நேயம் குறைந்து வருகிறது .. உயிருடன் உள்ளவரை இறந்துவிட்டார் என்று டீவீ சாநேல்கள் வெளியிட்ட செய்தி எந்த அளவுக்கு இவர்கள் உண்மையை கண்டறியாமல் அவசரப்பட்டு BREAKING NEWS என்று பரபரப்பு ஏற்படுத்துகிறார்கள் .. மேலும் சம்பந்தப்பட்டவர் ஒரு நடிகை என்றால் இன்னும் இளக்காரம் .. கனகா அவர்களின் தாய் தேவிகா அவர்கள் மிகவும் மரியாதைக்குரிய நடிகை தமிழ்நாட்டில் older generation பாராடகூடிய அளவில் நல்ல இயக்குனர்கள் படங்களில் நடித்து நற்பெயர் சம்பாதித்தார் .. தேவதாஸ் தேவிகா அவர்கள் நடித்த சில படங்களுக்கு cameraman ஆக இருந்தவர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் .. குறிப்பாக நடிகைகள் தனக்கு கணவராக வருபவரை சரியாக தெரிவு செய்ய தவறிவிடுகிறார்கள் .. வாழ்க்கையில் பிற்பாடு வருந்துகிறார்கள் .. கனகா அவர்களே .. இந்த உலகம் மிகவும் பொல்லாதது .. உங்கள் வாழ்கை ஒரு போராட்டம் ஆகி விட்டது .. இனி எஞ்சிய நாட்கள் நிம்மதியாக செல்ல கடவுள் தான் உங்களை காப்பாற்ற வேண்டும் .. நடிகர் சங்கம் இவருக்கு போதிய ஆதரவும் பாதுகாப்பும் தரவேண்டும் ..
Rate this:
Share this comment
Cancel
AlaguMuthu - riyadh,சவுதி அரேபியா
31-ஜூலை-201313:32:04 IST Report Abuse
AlaguMuthu அம்மா கனகா, உலகத்தில் உள்ள அத்தனை ஆண்களையுமா உனக்கு பிடிக்கல. நீ வளர்ந்த விதம், வாழ்ந்த விதம் உன்னை உன் அம்மா வளர்த்த விதம் சரியில்லை.அதனால் தான் இப்படி பேசுகிறாய். முதலில் நீ நடிகை என்கிற ஒளிவட்டத்தில் இருந்து வெளியே வா. புகழும் பணமும் மட்டுமே நிம்மதியையும் நல்ல வாழ்க்கையையும் கொடுத்து விடாது. நல்ல குடும்பம் குழந்தை குட்டிகள்,சுற்றம் நிறைந்தது தான் வாழ்க்கை. காலம் கடந்த பின் என்னத்த சொல்லி என்ன செய்ய.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
31-ஜூலை-201312:05:13 IST Report Abuse
villupuram jeevithan Nelson Mandela was reported as died in an article on the Deutsche Welle website on June 14, 2013
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
31-ஜூலை-201312:00:57 IST Report Abuse
villupuram jeevithan நோபிள் பரிசு பெற்ற எழுத்தாளர் Ernest Hemingway யும் அவரது மனைவியும் விமான விபத்தில் இறந்துவிட்டதாக பத்திரிக்ககைகள் 1954ல் செய்தி வெளியிட்டன. ஆனால் அவர் 1986 வரை உயிரோடு தான் இருந்தார்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை