sexual harrasment for 10th student | 10ம் வகுப்பு மாணவியிடம் "சில்மிஷம்': தனியார் பள்ளி செயலருக்கு தர்ம அடி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு மாணவியிடம் "சில்மிஷம்': தனியார் பள்ளி செயலருக்கு தர்ம அடி

Updated : ஜூலை 31, 2013 | Added : ஜூலை 30, 2013 | கருத்துகள் (42)
Advertisement

திருப்பூர்: திருப்பூரில், தனியார் பள்ளியில் படித்த, 10ம் வகுப்பு மாணவியிடம், "சில்மிஷம்' செய்த பள்ளி செயலரை, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்பூர், காலேஜ் ரோடு, மாஸ்கோ நகரில், அன்னை மெட்ரிக் பள்ளி உள்ளது; எல்.கே.ஜி., முதல், 10ம் வகுப்பு வரை, 500 பேர் படிக்கின்றனர். தாளாளராக லட்சுமியும், பள்ளி செயலராக அவரது கணவர் கதிரேசனும், பள்ளி நிர்வாகத்தை கவனிக்கின்றனர். நேற்று முன்தினம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடந்தது. காலை, 7:00 மணிக்கு துவங்கிய வகுப்புக்கு, அப்பகுதியைச் சேர்ந்த மாணவி, ஏழு நிமிடம் தாமதமாக வந்துள்ளார். மாணவியை, கதிரேசன், அவருடைய அறைக்கு அழைத்துச் சென்று, தாமதமாக வந்தது குறித்து விசாரித்து கொண்டே, சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அழுத மாணவியை, மிரட்டிய கதிரேசன், "நடந்ததை யாரிடமும் கூறக் கூடாது' என, எச்சரித்து அனுப்பியுள்ளார். பள்ளி முடிந்து, வீட்டுக்குச் சென்ற மாணவி, தாயாரிடம் நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார். கணவர் வெளியூர் சென்ற நிலையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திடம், மாணவியின் தாயார் புகார் தெரிவித்தார்.
நேற்று காலை, மாணவியின் தாயார், உறவினர்கள் மற்றும் மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள், பள்ளிக்கு சென்று, செயலர் கதிரேசனின் அறையை முற்றுகையிட்டனர். தகவலறிந்த அப்பகுதி பொதுமக்களும், அங்கு படிக்கும் குழந்தைகளின் பெற்றோரும் பள்ளி முன் கோஷம் எழுப்பினர். ஆவேசமடைந்த சிலர், கதிரேசனுக்கு தர்ம அடியும் கொடுத்தனர்.

பொதுமக்களை தடுத்த, அவரது மனைவி லட்சுமிக்கும் அடி விழுந்தது. திருப்பூர் வடக்கு போலீசார், கதிரேசன், லட்சுமியை, பொதுமக்களிடம் இருந்து மீட்டு, விசாரணை நடத்தினர். திரண்டிருந்த பொதுமக்கள், கதிரேசனை கைது செய்யுமாறு கோஷமிட்டு, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். அவரை கைது செய்த போலீசார், ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, காலேஜ் ரோட்டில், சிலர் மறியலில் ஈடுபட்டனர்; அவர்களில், 18 பேரை, போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம், திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abusalih Abdul Rahman - thiruvarur, tamilnadu,இந்தியா
31-ஜூலை-201316:30:24 IST Report Abuse
Abusalih Abdul Rahman தர்ம அடி மட்டும் போடாது கடுமையான சிறை தண்டனை அவசியம் / அபு
Rate this:
Share this comment
Cancel
Kavee - Jeddah,சவுதி அரேபியா
31-ஜூலை-201316:24:21 IST Report Abuse
Kavee இவனுங்களை எல்லாம் ....ஹ்ம்ம் என்ன பண்ண?
Rate this:
Share this comment
Cancel
Sham - Ct muththur,இந்தியா
31-ஜூலை-201314:03:18 IST Report Abuse
Sham வன்மையாக கண்டிக்கத்தக்கது... பள்ளியில் படிக்கும் சிறார்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்கவேண்டிய இவனெல்லாம் பள்ளிநடத்தினால்... நம் தேசத்தில் குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படிவருவார்கள்.... கடவுளே.... யோசித்தால் பயமாக இருக்கிறது...
Rate this:
Share this comment
Cancel
suji - madurai,இந்தியா
31-ஜூலை-201313:51:42 IST Report Abuse
suji பெண்களுக்கு இங்கும் பாதுகாப்பு இல்லையா ..............
Rate this:
Share this comment
Cancel
R.Manohar - Trichy,இந்தியா
31-ஜூலை-201313:36:51 IST Report Abuse
R.Manohar இதை மக்கள் முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு, இது போல வேறு எந்த ஊரில் இது மாதிரி குழந்தைகளிடம் சில்மிஷம் செய்தால் மக்கள் அடி வெளுத்து வாங்கிவிடுங்கள். போலீஸுக்கு புகார் கொடுக்க நீங்கள் போக வேண்டியதில்லை. இந்த பொறுக்கிகளை உதைக்கும் உதையில் கூட்டிப்போக போலீஸ் தானே வரும்.
Rate this:
Share this comment
Cancel
porselvan - Chennai poovai ,இந்தியா
31-ஜூலை-201313:10:07 IST Report Abuse
porselvan என்ன 10ம் வகுப்பு படிக்கும் பாபா கிட்ட தப்பா நடந்தான நாய் பயலே உன்ன எல்லாம் என்ன தான்டா பன்றது ,,,, அவன 10 வருஷம் ஜெயில் போடுங்க மை லார்ட்.....
Rate this:
Share this comment
Cancel
S.MAHESH KUMAR - TIRUNELVELI,இந்தியா
31-ஜூலை-201311:39:09 IST Report Abuse
S.MAHESH KUMAR அடி உதவுவது போல்.கோர்ட்டின் தீர்ப்பு உதவாது.
Rate this:
Share this comment
Cancel
ksv - chennai,இந்தியா
31-ஜூலை-201310:48:44 IST Report Abuse
ksv நல்ல முறையில் விசாரித்து உள்ளனர் மக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Palanivel Naattaar - ABUDHABI,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஜூலை-201310:47:55 IST Report Abuse
 Palanivel Naattaar சில்மிஷம் செய்தது உண்மை என்று தெரிந்தால் அவர்கள் மேல் குற்றவழக்கோடு நிறுத்தாமல் பயிலும் மாணவர்களை அருகில் உள்ள வேறு பள்ளிகளுக்கு மாற்றி கல்வித்துறை உடனடியாக அந்தப்பள்ளியின் அங்கீகாரத்தை ரத்துசெய்து உத்தரவிடவேண்டும்.
Rate this:
Share this comment
murthi a - bangalore,இந்தியா
31-ஜூலை-201311:55:36 IST Report Abuse
murthi aதப்பு செய்தவனுக்கு தண்டனை சரி .., நிர்வாகம் ., பள்ளி என்ன செய்தது ?...
Rate this:
Share this comment
Cancel
karthik - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஜூலை-201310:44:06 IST Report Abuse
karthik தர்ம அடியே சிறந்த தீர்ப்பு .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை