E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கருணாநிதி மீதான அவதூறு வழக்குகள்: செப்டம்பருக்கு விசாரணை தள்ளி வைப்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2013
23:41

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி மீது, அ.தி.மு.க., அமைச்சர்கள் தாக்கல் செய்த, அவதூறு வழக்குகளின் விசாரணையை, செப்., 16ம் தேதிக்கு, சென்னை, முதன்மை செஷன்ஸ் கோர்ட் தள்ளி வைத்துள்ளது.

அ.தி.மு.க., அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து, ஒரு வார இதழில், கட்டுரை வெளியானது. அதன் அடிப்படையில், "முரசொலி' பத்திரிகையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கேள்வி - பதில் வெளியானது. இதையடுத்து, கருணாநிதி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் மீது, அமைச்சர் பச்சைமால், அமைச்சர்களாக இருந்த சிவபதி, கோகுல இந்திரா உள்ளிட்ட ஐந்து பேர், சென்னை, முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், தனித்தனியே அவதூறு வழக்குகளை தாக்கல் செய்தனர். நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெகன், இவற்றை தாக்கல் செய்தார். இவ்வழக்கு, நீதிபதி சொக்கலிங்கம் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. கருணாநிதி மற்றும் செல்வம் சார்பில், வழக்கறிஞர்கள் குமரேசன், ஷாஜஹான் ஆஜராகினர். கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி, மனுக்களும் தாக்கல் செய்தனர். இதையடுத்து, விசாரணையை, செப்., 16ம் தேதிக்கு, நீதிபதி சொக்கலிங்கம் தள்ளிவைத்தார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathish - melbourne,ஆஸ்திரேலியா
31-ஜூலை-201306:34:22 IST Report Abuse
sathish ஐயோ ஐயோ, கொடுமையிலும் கொடுமை,, இந்த கோர்ட்டுகளின் நிலைமையை நினைத்தால்,,, இவர் பாட்டுக்கு ஏதோ உளறி விடுவார்,, அது பின் கேசாகும்,, அதை கோர்ட்டு பார்த்து பதிவு செய்து ஆண்டு கணக்கில் நீண்டு,,,நீண்டு அனுமார் வால் போல் நீண்டு கொண்டே போகும்,, இது போன்ற கொடுமைகளுக்கு ஒரு முடிவே இல்லையா? கோர்டில் எத்தனை கோடி வழக்குகள் தான் இது போல் ஆமையை விட ஊர்ந்து போகின்றன,,,, தப்பு செய்தவன் இன்னும் ஜாலியாக அடுத்த விசயத்திற்கு போயி கொண்டு தான் இருக்கிறான்,,,, இவர் மேல் உள்ள கேசுகள் தான் எவ்வளவு? இவருக்கே கணக்கு தெரியுமா?
Rate this:
0 members
1 members
4 members
Share this comment
Cancel
Rajkumar - Dammam,சவுதி அரேபியா
31-ஜூலை-201300:18:47 IST Report Abuse
Rajkumar யாரைப்பார்த்து கண்ணடிக்கிறார் ? நீதிபதியையா ?
Rate this:
3 members
0 members
16 members
Share this comment
Cancel
Vanavaasam - Dallas, Fort Worth,யூ.எஸ்.ஏ
31-ஜூலை-201300:11:06 IST Report Abuse
Vanavaasam 'தபால் தலை'வரின் மக்கள் நலம் சார்ந்த பொறுப்பும், சிந்தனையும் கடந்த 2 வருடங்களாக செழுமை அடைந்திருகிறது .... இவரின் சக்தியை முதல்வராக இருந்து வீணடித்து விட்டார் ..இவர் காலம் எல்லாம் எதிர் கட்சியாக இருந்து ....தி மு க மக்கள் தொண்டு ஆற்றவேண்டும் என்று எனக்கு ஆசை வந்து விட்டது .... 2 வருடங்களாக மக்கள் நலமே பேச்சு , மூச்சாக இருக்கிறார் ..வாழ்க
Rate this:
3 members
0 members
18 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.