swepage workers adict for drunken | போதையால் அவலம்: மதுவுக்கு அடிமையாகும் துப்புரவு ஊழியர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போதையால் அவலம்: மதுவுக்கு அடிமையாகும் துப்புரவு ஊழியர்கள்

Updated : ஆக 01, 2013 | Added : ஜூலை 30, 2013 | கருத்துகள் (3)
Advertisement
போதை,அவலம், மது, அடிமை, துப்புரவு ஊழியர்கள்,swepage, worker, adict, drunken

திருப்பூர்:தினமும் துர்நாற்றத்தில் பணிபுரியும் மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள், மது போதைக்கு அடிமையாகின்றனர்; அவர்களுக்கு "கவுன்சிலிங்' அளித்து, போதை மறுவாழ்வு மையங்களில் சிகிச்சையளிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் 781 துப்புரவு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்; மகளிர் குழு உறுப்பினர்கள் 1,030 பேரும் இதில், ஈடுபடுகின்றனர். குப்பை அள்ளுதல், ரோடுகளை சுத்தம் செய்தல், சாக்கடை அடைப்பு நீக்குதல் என சுகாதாரமில்லாத இடங்களிலும், துர்நாற்றம் வீசுகிற பகுதிகளிலும் தினமும் பணியாற்றுகின்றனர். அவர்களில் பெரும் பாலானோர் மது போதைக்கு அடிமையாகி விட்டனர்.மாநகராட்சி ஊழியர்களுக்கு, மன அழுத்தத்தில் இருந்து மீட்க, யோகா பயிற்சி நடத்தும் நிர்வாகம், போதைக்கு அடிமையான துப்புரவு ஊழியர்களுக்கு "கவுன்சிலிங்' ஏற்படுத்தி, அவர்களை மது போதையிலிருந்து மீட்க வேண்டும் என்ற கோரிக்கை, ஊழியர்களின் குடும்பங்களில் வலுத்து வருகிறது.

துப்புரவு பணியில் ஈடுபடும் பெண்கள் சிலர் கூறியதாவது:குப்பையிலும், சாக்கடை கால்வாய்களிலும் பணிபுரியும் நாங்கள் பல்வேறு நோய்களால் துன்பப்படு கிறோம்; காய்ச்சல், தோல் நோய்கள், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அடிக்கடி, மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.சாக்கடை அடைப்பு நீக்குதல், கழிவறைகளை சுத்தம் செய்தல், குப்பையை வாகனங்களில் ஏற்றுதல் ஆகிய பணிகளில் ஈடுபடும் ஆண்கள், துர்நாற்றத்தை மறந்து பணியில் ஈடுபட மது அருந்துகின்றனர்; இப்போது துப்புரவு பணிசெய்யும் ஆண்களில் பெரும்பாலானவர்கள், மதுவுக்குஅடிமையாகி விட்டனர். இதனால் இப்பணியில் ஈடுபடுபவர்களில் பலர், விரைவில் உடல் நலம் இழந்து நோய் தாக்கி பாதிக்கப்படுகின்றனர்; குடிப்பழக்கத்தால், உடல் ஆரோக்கியம் குறைந்து பலவீனமடைகின்றனர்; அதிகளவில் மது குடிப்பதால், குறைந்த வயதில் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது.

துர்நாற்றம் வீசும் துப்புரவு பணி என்பதால், மது குடிக்கும் ஆண்களை, அவர்களது குடும்பத்தினர் தடுக்க முடிவதில்லை; காலையில் இருந்தே குடிக்க துவங்கி விடுகின்றனர்; போதை இல்லாவிட்டால், துப்புரவு பணி செய்ய இயலாது என்ற நிலையில், பலரும் உள்ளனர். ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைக்க பத்து நாட்கள் யோகா பயிற்சி மாநகராட்சியால் வழங்கப்பட்டாலும் மது அருந்துவது, யாரிடமும் குறையவில்லை. திருப்பூரில் மட்டுமின்றி அனைத்து ஊர்களிலும் துப்புரவு ஊழியர்கள் மதுவுக்கு அடிமையாக உள்ளனர்.மதுவுக்கு அடிமையான ஊழியர்களுக்கு, "கவுன்சிலிங்' கொடுத்தும், போதை அடிமைகள் மறுவாழ்வு மையங்களில் சிகிச்சையளித்தும், அவர்களது வாழ்வை மீட்க வேண்டும், என்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Peria Samy - chennai,இந்தியா
06-ஆக-201322:34:06 IST Report Abuse
Peria Samy நிச்சயமாக இவர்கள் பரிதாபத்துக்குரிய ஜீவன்கள்.அறிவியல் வளர்ச்சி பெற்றுள்ள இந்நாளிலும் துப்புரவுப் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தாமல் இருக்க முடியாதா? வளர்ந்துள்ள மேலை நாடுகளிலும் இந்த நிலைதான் இருக்கிறதா? ஆட்சியாளர்கள் இப்பணியை நவீனப் படுத்த முழுமூச்சில் முயற்சிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
31-ஜூலை-201306:20:10 IST Report Abuse
Baskaran Kasimani இத்தனை பேரின் கண்ணீரில்தான் இலவசங்களை கொடுக்க வேண்டியுள்ளது....
Rate this:
Share this comment
Cancel
jasmine banu - madras,இந்தியா
31-ஜூலை-201302:28:11 IST Report Abuse
jasmine banu என்ன செய்ய கடவுள் இவர்களுக்கு கொடுத்த வரம். கண்ணீர் தான் வருகிறது. இவர்களை யார் மதிக்கிறா???? இவர்கள் தான் நாட்டின் தூண்கள் இவர்கள் இல்லாவிட்டால் நாடு கழிவறை ஆகிவிடும். இவர்கள் சேவை தான் நாட்டின் முக்கிய சேவை. இவர்களுக்கு தான் சம்பள உயர்வு, இலவச கல்வி, இலவச மருத்துவம், இவை எல்லாம் கொடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு அரசு உயர் அதிகாரிகளுக்கு சம்பளம் உயர்வு......... என்ன நடக்குது நாட்டில்....?????? அரசு மது பானம் இவர்களால் தான் நன்றாக செயல்படுகிறது அது தான் உண்மை. அரசு கொடுக்கும் கூலியை இவர்கள் அரசுக்கே திருப்பி கொடுத்து விட்டு நோயை மட்டும் தனக்குள்ளே வைத்து கொள்ளுகிறனர்........... என்ன இவர்கள் வாழ்க்கை...?????????????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை