மார்பில் குண்டு பாய்ந்த நிலையிலும் திருடர்களிடம் போராடிய இளம்பெண்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:டில்லியில், பக்கத்து வீட்டு பெண்ணின் செயினை திருடி விட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிய திருடர்களை, துணிச்சலாக மடக்கி பிடித்த இளம்பெண், துப்பாக்கியால் சுடப்பட்டார். ஆனாலும், துப்பாக்கியை பார்த்து பயப்படாமல், திருடர்களிடம் இருந்து செயினை மீட்ட, அந்த இளம் பெண், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


நடைபயிற்சி:

கிழக்கு டில்லி பகுதியில் வசிப்பவர், அன்சு. நேற்று முன் தினம் அதிகாலையில், இவர், நடை பயிற்சியை முடித்து விட்டு, வீட்டுக்கு திரும்பினார். மோட்டார் சைக்கிளில் வந்த, இரு மர்ம நபர்கள், அவரை பின் தொடர்ந்தனர். பீதியடைந்த அன்சு, வேகமாக நடந்து, தன் வீட்டுக்கு அருகில் வந்தார். அந்த மர்ம நபர்கள், அன்சு அணிந்திருந்த தங்க செயினை பறித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயற்சித்தனர்.அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் கோமல், 26, தன் வீட்டுக்கு வெளியில் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அன்சுவின் அலறல் சத்தத்தை கேட்ட அவர், மோட்டார் சைக்கிளில், மர்ம நபர்கள் தப்ப முயற்சிப்பதை பார்த்தார்.தன் கையிலிருந்த துடைப்பத்தை, அவர்கள் மீது வீசினார். இதில், திருடர்கள் நிலை குலைந்தனர். உடனடியாக, பாய்ந்து சென்ற கோமல், திருடர்கள் வைத்திருந்த செயினை பறிக்க முயன்றார். ஆத்திரம் அடைந்த திருடர்கள், தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, கோமலை நோக்கி சுட்டனர்.


துளைத்த குண்டுகள்:

இதில் ஒரு குண்டு, கோமலின் கை விரலிலும், மற்றொரு குண்டு, அவரது மார்பிலும் பாய்ந்தது. குண்டு பாய்ந்த இடங்களிலிருந்து ரத்தம் கொட்டியது. அதை பொருட்படுத்தாது, திருடர்களிடமிருந்து, அன்சுவின் செயினை பறித்தார்.அதற்குள், அக்கம் பக்கத்தில்இருந்தவர்கள், திரண்டனர். இரண்டு திருடர்களும் தப்பி ஓடி விட்டனர். அன்சுவிடம், செயினை ஒப்படைத்ததும், கோமல் மயங்கி விழுந்தார். அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.அவரின் மார்பில் பாய்ந்திருந்த குண்டு, அகற்றப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையிலும், திருடர்களிடமிருந்து, செயினை திரும்ப பறித்த, கோமலின் துணிச்சலை, டில்லி போலீசாரும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (21)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suriyaraj - pollachi  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201307:33:23 IST Report Abuse
Suriyaraj விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
omkaara sankaraa - Lyon,பிரான்ஸ்
01-ஆக-201305:38:46 IST Report Abuse
omkaara sankaraa தைரியம் கொண்ட வீரபெண்மணிக்கு தலைவணக்கம்... விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Kavee - Jeddah,சவுதி அரேபியா
31-ஜூலை-201316:11:54 IST Report Abuse
Kavee சாது மிரண்டால் காடு கொள்ளாது....
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
31-ஜூலை-201315:33:25 IST Report Abuse
K.Sugavanam இவருக்கு வீர தீரத்திற்கான குடியரசு தலைவர் விருது அளிக்க பட வேண்டும்.இவரின் மருத்துவ சிகிச்சைக்கான செலவை தில்லி அரசே ஏற்க வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Gobisaran - Chennai,இந்தியா
31-ஜூலை-201315:29:34 IST Report Abuse
Gobisaran சிறுமை கண்டு பொங்கிய பெண்மைக்கு வீர வணக்கங்கள்
Rate this:
Share this comment
Cancel
k thilak - Chennai,இந்தியா
31-ஜூலை-201314:46:17 IST Report Abuse
k thilak உங்களை மாதிரியான இளைஞர்கள் இருப்பதால்தான் இந்த இந்தியாவும் உயரிபித்துக்கொண்டுள்ளது எனது கனிவான பாராட்டுக்கள் சகோதரியே
Rate this:
Share this comment
Cancel
Sham - Ct muththur,இந்தியா
31-ஜூலை-201313:47:33 IST Report Abuse
Sham வாழ்த்துகள்.... வீரசகோதரி... விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.....
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
31-ஜூலை-201311:00:26 IST Report Abuse
suresh இவரின் வீர செயல் பாராட்டத்தக்கது. சீக்கிரம் குணமடைய வாழ்த்துகிறோம். டில்லி போலீசாரின் பாராட்டு தேவயில்லை நமக்கு. போலீசார் தயவு செய்து அந்த திருடர்களை கண்டுபிடுத்து தகுந்த தண்டனை அளிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
KUMUKKI - male,மாலத்தீவு
31-ஜூலை-201310:56:20 IST Report Abuse
KUMUKKI செயின் திருடர்களிடம் துப்பக்கி போலீசார்கள் என்னசெய்கின்றனர்??????
Rate this:
Share this comment
Cancel
Latha.K - Tiruppur,இந்தியா
31-ஜூலை-201310:56:12 IST Report Abuse
Latha.K பாரதி கண்ட புதுமை பெண்ணே.. வாழ்த்துக்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்