பதிவு செய்த நாள் :
கருத்துகள் (10)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

நாக்பூர்:தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நீண்ட காலமாக போராடி வரும், பல மாநில குழுக்கள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளன. அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமானால், இந்தியா, இன்னும், 15 மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டியிருக்கும்.

தெலுங்கானா உதயம்:

ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நீண்ட காலமாக போராடி வரும் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, தெலுங்கானா மாநில அறிவிப்பு, @நற்று வெளியாகியுள்ளது.இந்நிலையில், தனி மாநில கோரிக்கைகளை வலியுறுத்தி, மேற்கு வங்கத்தில், கூர்க்கா இன மக்கள்; அசாமில் போடா பழங்குடியின மக்கள்; மகாராஷ்டிராவில் விதர்பா பகுதி மக்கள்; பல ஆண்டுகளாக போராடி வரும் நிலையில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.போராட்டம் தீவிரம் அடைந்தால், தெலுங்கானா உருவாவது போல், தங்களின் கோரிக்கையும் ஏற்கப்படும் என, அக்குழுக்கள் நம்புகின்றன.இப்போதுள்ள நிலையில், 15 புதிய தனி மாநில கோரிக்கைகள், பேச்சளவில் உள்ளன என்பதை அறியும் போது, ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கும், தனி

மாநில கோரிக்கைகளை முளையிலேயே கிள்ளாமல் விட்ட அவர்களின் அசட்டையும் தெரிய வருகிறது.

பூர்வாஞ்சல்:

உத்தர பிரதேசத்தை பிரித்து, உத்தரகண்ட் மாநிலம் ஏற்கனவே, 2000ம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ள நிலை யில், பூர்வாஞ்சல் மற்றும் ஹரித் பிரதேசம் என, மேலும் இரு மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.அது போல், பீகாரை பிரித்து, ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், "மிதிலா' என்ற பெயரில், தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை, அங்கு நிலுவையில் உள்ளது.தனி மாநிலம் கோரி, அசாம் மாநிலத்தில் பல தீவிரவாத குழுக்கள் போராடி வரும் நிலையில், "போடோலாந்து' மற்றும்,"திமாரஜி' என, இரண்டு மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று, அப்பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது.அது போல், மேற்கு வங்கத்தை பிரித்து, கூர்க்காலாந்து, மணிப்பூரை பிரித்து குகிலாந்து, மத்திய பிரதேசத்தை பிரித்து, விந்திய பிரதேசம் என, 15 புதிய, தனி மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் சில குழுக்கள் போராடி வருகின்றன.இந்த கோரிக்கைகள், துவக்கத்தில், மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்ட குழுக்களால் தான் எழுப்பப்படுகின்றன. அரசியல்வாதிகள், தூண்டி விடுவதால், கோரிக்கை வலுத்து, ஒரு கட்டத்தில் மாநிலங்கள் துண்டாடப்பட வேண்டிய நிலை

Advertisement

ஏற்படுகிறது.


விதர்பா மாநிலம் கிடைக்குமா?

மகாராஷ்டிராவை பிரித்து, "விதர்பா' மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த அரசியல் தலைவர்கள், நீண்ட காலமாக போராடி வந்துள்ளனர். இது பற்றி, பாரதிய ஜனதா முன்னாள் எம்.பி., பன்வரிலால் புரோஹித் கூறும் போது, ""1992ல், புவனேஸ்வரில் நடந்த, பா.ஜ., செயற்குழு கூட்டத்திலேயே, விதர்பா மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; தெலுங்கானாவுக்கு அனுமதி கொடுத்தால், விதர்பாவையும் உருவாக்க வேண்டும்,'' என்கிறார்.ராஜிவ் பிரதமராக இருந்த போது, விதர்பா மாநிலம் உருவாக்க வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய, அப்போதைய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த, பி.ஏ.சங்மாவை கேட்டுக் கொண்டார். சங்மாவும், பல மாதங்கள் அப்பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சாதகமான அறிக்கை அளித்தார் என கூறப்படுகிறது. இப்பகுதியை சேர்ந்த, காங்கிரஸ் எம்.பி., விலாஸ் முட்டம்வார், காங்கிரஸ் தலைவர், சோனியாவுக்கு கடிதம் எழுதி, "விதர்பா மாநிலம் உருவாக்கப்பட வேண்டும்' என, கேட்டுள்ளார்.

இதற்கிடையே, மேற்கு வங்கத்தை பிரித்து, கூர்க்காலாந்து மாநிலம் உருவாக்க கோரி, ஜி.ஜே.எம்., என்ற அமைப்பு, மூன்று நாட்கள் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து, இரண்டாவது நாளாக நேற்று, வேலை நிறுத்தம் தொடர்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivramkrishnan Gk - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஆக-201313:09:42 IST Report Abuse
Sivramkrishnan Gk தெலுங்கானா மேல காங்கிரசிற்கு திடிரென கரிசனம் ஏன்? எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கருத்து கணிப்புகள் காங்கிரசிற்கு பாதகமாக உள்ளது. ஆகவே தெலுங்கானா வெடியை கொளுத்திபோட்டார்கள். அது இப்போ எல்லா மாநிலத்திலேயும் பற்றி ஏறுகிறது. பாஜாக ஒருவேளை வெற்றி பெற்றால் இந்த நெருப்பை கட்டுபடுத்த முடியாமல் திணறும். மற்ற பிரச்சினைகளும் பாஜாகவை நெருக்கும். காங்கிரசும் சந்தில் சிந்து பாடும். எவ்வளவு நல்ல எண்ணம் காங்கிரசிற்கு. ஐயா இந்திய மக்களே உங்கள் பொன்னான வோட்டை காங்கிரசிற்கு போட்டு இந்தியாவை நாசமாக்குங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
02-ஆக-201307:59:12 IST Report Abuse
Sukumar Talpady தமிழ்நாடு இந்த பட்டியலில் விரைவில் சேர போகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. திரு.அன்பரசு தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று சொல்கிறார். ஏன் இரண்டாக பிரிக்க வேண்டும் ? தமிழ் நாட்டை முன்பு போலே,பல்லவ, சேர, சோழ, பாண்டிய மருதுபாண்டிய நாஞ்சில் மற்றும் மலை நாடுகள் என்று பிரித்து விடலாம். எல்லோரும் முதலமைச்சர்கள் ஆகலாம், அமைச்சர்கள் ஆகலாம், ஆளுநர் ஆகலாம், மற்றும் அரசியல்கட்சிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் பெருகும். மன்மோகன் சிங்க் கவனிப்பாரா ?
Rate this:
Share this comment
Cancel
Sulo Sundar - Mysore,இந்தியா
31-ஜூலை-201315:52:04 IST Report Abuse
Sulo Sundar ஹ்ம்ம்...இப்பிடி பிரிசிக்கிட்டே போங்க வெளங்கிடும்...இந்தியா சுதந்திரதுக்குமுன் 56 தேசங்களாக இருந்தது என்று சரித்ரம் சொல்லுகிறது...அப்படிப்பட்ட நிலைக்கு வெகு விரைவில் தள்ளப்படுவோம்..
Rate this:
Share this comment
Cancel
Oneindia - Bangalore,இந்தியா
31-ஜூலை-201315:19:53 IST Report Abuse
Oneindia கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வட தமிழ்நாடு என்ற தனி மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போர்க்குரல் எழுப்பினர்.
Rate this:
Share this comment
Cancel
guru - thiruvallore,இந்தியா
31-ஜூலை-201313:01:57 IST Report Abuse
guru மாவட்டமெல்லாம் மாநிலமா மாற்றிட்ட எல்லோருக்கும் பதவி கிடைக்கும்.,,
Rate this:
Share this comment
Cancel
CHERANAADAN - Thuckalay,இந்தியா
31-ஜூலை-201310:43:53 IST Report Abuse
CHERANAADAN தமிழகத்தை 2 ஆக பிரித்து விட ராமதாஸ் கேட்பாரே..
Rate this:
Share this comment
Cancel
Bala Subramani - Pittsburgh,யூ.எஸ்.ஏ
31-ஜூலை-201308:35:13 IST Report Abuse
Bala Subramani united states of india.
Rate this:
Share this comment
Cancel
Arvind Bharadwaj - Coimbatore,இந்தியா
31-ஜூலை-201307:06:21 IST Report Abuse
Arvind Bharadwaj காங்கிரஸ் கட்சி தென்னகத்தில் பத்த வைத்து விட்டது. இனிமேல் நாட்டைப் பலநூறு துண்டுகளாக உடைக்கும் வரை ஒயாது. முன்பொரு காலம் ஹைதராபாத் நிஜாமின் கீழ் இருந்த பிராந்தியத்தைப் பிரித்து இப்போது தெலுங்கானா உருவாக்கப்பட்டுள்ளதால் இந்தப் புதிய மாநிலத்தில் பாகிசாத்தான் தானும் உரிமை கோரினால் கூட வியப்படைய முடியாது.
Rate this:
Share this comment
Cancel
govind - KL,மலேஷியா
31-ஜூலை-201306:52:19 IST Report Abuse
govind சந்தோசம். தமிழ்நாடு இந்த பட்டியல் ல இல்ல .. ராமதாஸ் , மஞ்ச துண்டு ஏதும் முயற்சி வச்சு இருக்காங்களோ என்னவோ
Rate this:
Share this comment
naattamai - manama,பஹ்ரைன்
02-ஆக-201310:03:41 IST Report Abuse
naattamaiஇந்த பிரிவினை முயற்சியை கண்டிப்பாக அரசாங்கங்கள் அனுமதிக்க கூடாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.