Controversy create by Satruhan sinha | பிரதமர் பதவிக்கு தகுதியானவர் நிதிஷ் குமார்: சத்ருகன் சின்கா போட்ட "ஜால்ரா'வால் சர்ச்சை| Dinamalar

பிரதமர் பதவிக்கு தகுதியானவர் நிதிஷ் குமார்: சத்ருகன் சின்கா போட்ட "ஜால்ரா'வால் சர்ச்சை

Updated : ஜூலை 31, 2013 | Added : ஜூலை 30, 2013 | கருத்துகள் (24)
Advertisement
பிரதமர் பதவிக்கு தகுதியானவர் நிதிஷ் குமார்: சத்ருகன் சின்கா போட்ட "ஜால்ரா'வால் சர்ச்சை

பாட்னா: "பீகார் முதல்வர், நிதிஷ் குமார், பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்' என, பாலிவுட் நடிகரும், பாரதிய ஜனதா எம்.பி.யுமான, சத்ருகன் சின்காவும், பீகார் பா.ஜ., செய்தி தொடர்பாளர், ராம்கிஷோர் சிங்கும், பாராட்டியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்கா, 2009 லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில், பாட்னா, சாகெப் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி., யானார். அதற்கு முன், இரண்டு முறை, ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த சின்கா, வாஜ்பாய் தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார்."சத்ரு'வுக்கு இடமில்லை:


பா.ஜ.,வின் தேர்தல் பிரசார குழு தலைவராக சில நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்ட, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, சமீபத்தில், கட்சியில் தேர்தல் பணி தொடர்பாக பல குழுக்களை நியமித்தார். இந்தக் குழுக்கள் எதிலும், சத்ருகன் சின்கா இடம் பெறவில்லை. இதனால், அதிருப்தியில் உள்ள சின்கா, முதல்வர் மோடியை வெறுப்பேற்றும் வகையில், பீகார் முதல்வர், நிதிஷ் குமாரை நேற்று பாராட்டிப் பேசினார்.


பாட்னா விமான நிலையத்தில், அவர் கூறியதாவது: நாட்டில் நல்ல முறையில் ஆட்சி செய்யும் முதல்வர்களில், நிதிஷ் குமாரும் ஒருவர். நாட்டின் பிரதமராவதற்கான, அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளன. லோக்சபா தேர்தலில், அதிக இடங்களைப் பிடிக்கும் கட்சியைச் சேர்ந்தவரே, பிரதமராக வர முடியும். அதனால், தே.ஜ., கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், மீண்டும் அந்த கூட்டணியில் சேர வேண்டும்.நல்ல மனிதராம்:


அரசியலில் எதுவும் நிரந்தரம் கிடையாது; அதேநேரத்தில், வளைந்து கொடுக்கும் தன்மை அவசியம். நிதிஷ் நல்ல மனிதர், சகோதர பாசத்துடன் பழகக் கூடியவர். நல்ல தலைமைப் பண்பு உடையவர். இவ்வாறு சின்கா தெரிவித்தார். இதேபோல், பீகார் மாநில பா.ஜ., செய்தி தொடர்பாளரான, ராம்கிஷோர் சிங்கும், ""பீகார் சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமாரின் ஆதரவால்தான், 35க்கும் மேற்பட்ட பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றனர். நிதிஷ் நல்ல தலைமைப் பண்பு உடையவர்,'' என, நேற்று முன் தினம் புகழ்ந்து பேசினார். நரேந்திர மோடியை விமர்சிக்கும், நிதிஷ்குமாரை, பா.ஜ., தலைவர்களே பாராட்டிப் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், முதல்வர், நிதிஷ்குமாரை பாராட்டி பேசி, குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை வசைபாடிய, பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர் ராம்கிஷோர் சிங் நேற்று அதிரடியாக, பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
31-ஜூலை-201316:30:41 IST Report Abuse
Nallavan Nallavan சத்ருகன் சின்ஹாவுக்கு என்ன கட்டாயமோ?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
31-ஜூலை-201315:57:11 IST Report Abuse
Pugazh V இவர் போலப் பலரும் பேசிவருகிறார்கள். தேர்தலுக்குப் பின் பாஜக பெரும்பான்மை இடங்களை ஜெயித்த கட்சியாக இருக்குமேயானால், பாஜக விலேயே ஒரு பகுதி எம் பி க்கள் மோடிக்கு ஆதரவுக் கடிதம்கொடுக்க மறுப்பார்களோ?
Rate this:
Share this comment
Cancel
Thamilan-indian - madurai,இந்தியா
31-ஜூலை-201315:55:12 IST Report Abuse
Thamilan-indian அரசியலில் லாலுவைப்போல் ஐவரும் ஜோக் அடிக்க கற்றுக்கொண்டுள்ளார்.
Rate this:
Share this comment
Cancel
Thamilan-indian - madurai,இந்தியா
31-ஜூலை-201315:50:12 IST Report Abuse
Thamilan-indian நடிகர்களை கட்சியில் சேர்ப்பது இப்படி கூதாகதான் அமையும். பாட்னாவில் உள்ள இன மற்றும் மத பழமைவாதிகளை தாஜா செய்ய இப்படியெல்லாம் நாடகமாடவேண்டியிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
samy - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஜூலை-201310:49:42 IST Report Abuse
samy காங்கிரஸ் ஜால்ராக்கள் சோனியாவுக்கும் ராகுல் காந் காந்திக்கும் எதிராக கருத்து சொல்ல தைரியம் இருக்கா
Rate this:
Share this comment
Cancel
mohanasundaram - chennai,இந்தியா
31-ஜூலை-201308:21:07 IST Report Abuse
mohanasundaram இதைப்போன்ற aatkalai katchilirundhu கட்டம் கட்டினால்தான் மற்றவர்களுக்கும் புத்தி வவரும் .
Rate this:
Share this comment
Cancel
காளி. சந்திர மௌலி - Kuala Lumpur,மலேஷியா
31-ஜூலை-201306:50:14 IST Report Abuse
காளி. சந்திர மௌலி இந்த பி ஜே பி கட்சியில நரேந்திர மோதியைத் தவிர எல்லார் போரையும் சொல்றாங்கப்பா. நல்ல கட்சி.
Rate this:
Share this comment
Cancel
காவித் தமிழன் - சென்னை ,இந்தியா
31-ஜூலை-201306:04:48 IST Report Abuse
காவித் தமிழன் கட்சி ஆதரவு இல்லை என்றால் நூறு வாக்கு கூட வாங்க வக்கில்லாதவர்கள் எல்லாம் பேசக் கிளம்பிட்டாங்க......இவரெல்லாம் அத்வானி அவர்களின் ஆதரவாளர்......கடந்த தேர்தலில் அத்வானி தலைமையில் போட்டி கண்டு பா.ஜ.க. தோல்வி அடைந்தது....தவிர, அத்வானியின் வயது 85.... இன்னும் எத்தனை காலத்துக்கு கட்சி அவரையே சுத்தி வர வேண்டும்?
Rate this:
Share this comment
Sethu Thangavelu - Chennai,இந்தியா
31-ஜூலை-201310:26:44 IST Report Abuse
Sethu Thangaveluஜெயலிதா ஒருவர் மட்டுமே தகுதியானவர் ,...
Rate this:
Share this comment
Cancel
Loganathan - Madurai,இந்தியா
31-ஜூலை-201305:56:53 IST Report Abuse
Loganathan பாரதியஜனதா வின் வளர்ச்சியை தடுப்பதற்கு பிஜேபி யில் ஆட்கள் உள்ளனர்.காங்கிரஸ் காரர்களுக்கு வேலை மிச்சம்.
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
31-ஜூலை-201305:55:35 IST Report Abuse
Pannadai Pandian ராம் ஜெத்மலானிக்கு பிறகு கழுத்தை பிடித்து வெளியே தள்ளவேண்டிய மனிதர் இவர். அன்று வில்லனாக நடிப்புலகில் நுழைந்தார், இன்று அரசியலில் வில்லனாக வாழ்கிறார்.
Rate this:
Share this comment
periasamy - Doha,கத்தார்
31-ஜூலை-201315:10:29 IST Report Abuse
periasamyபி ஜே பி ஒன்னும் அதிமுக கிடையாது கருத்து சுதந்திரம் உள்ள கட்சி சார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை