E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
வாலுடன் வாழும் அர்ஷத்: வழிபடும் கிராம மக்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2013
01:20

புதுடில்லி: முஸ்லிம் குடும்பத்தில், வாலுடன் பிறந்த குழந்தை யை, "அனுமனின் அவதாரம்' என கருதி, பொதுமக்கள் வணங்கிச் செல்கின்றனர்.

பஞ்சாப் மாநிலம், பதேஹ்கர் மாவட்டத்தின், நபீபூர் என்ற ஊரில், 2001ம் ஆண்டில் பிறந்த அர்ஷத் அலிக்கு, பிறக்கும் போதே, இடுப்பின் பின்பகுதியில், வால் போன்ற அமைப்பு இருந்தது. அர்ஷத்தின் தந்தை இறந்துவிட்டார்; தாய் சல்மா,33, மற்றொருவரை திருமணம் செய்துள்ளார். அர்ஷத்துக்கு வால் இருப்பதை அறிந்த அவனின் தாத்தா, இக்பால் குரேஷி, மருத்துவர்களை ஆலோசித்துள்ளார். வால் போன்று காணப்படும் அந்த உறுப்பை அகற்றினால், உயிருக்கு ஆபத்து ஏற்படும், என, டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால், அஷ்ரத்தின் வாலை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். இப்போது, 12 வயதாகும் அர்ஷத் அலியின் வாலும் நீளமாக வளர்ந்துள்ளது. அரசுப் பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும் அர்ஷத், சக மாணவர்களுடன் பழகவும், விளையாடவும் முடியாமல், வருத்தத்துடன் உள்ளான். இந்நிலையில், அர்ஷத்துக்கு, வால் மட்டுமல்லாமல், உள்ளங்காலில், தாமரை சின்னம் உள்ளிட்ட, ஒன்பது தெய்வீக குறிகள் உள்ளதை அறிந்த பொதுமக்கள், அவனை தெய்வமாக வழிபடத் துவங்கிவிட்டனர். வால் முளைத்த அர்ஷத் குறித்து, பத்திரிகைகளில் வெளியான செய்திகளைப் படித்த, உள்ளூர் மற்றும் வெளியூர்வாசிகள், ஆயிரக்கணக்கானோர், அச்சிறுவனிடம் ஆசிபெற்று செல்கின்றனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
31-ஜூலை-201309:07:47 IST Report Abuse
Srinivasan Kannaiya குரங்கில் இருந்துதான் மனிதன் தோன்றினான் என்பதற்கு அர்ஷத் அலிதான் சாட்சி
Rate this:
9 members
0 members
1 members
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
31-ஜூலை-201308:53:06 IST Report Abuse
Chenduraan அந்த குழந்தையை வாழ விடுங்கள் இன்னும் கொஞ்ச நாளில் கோவில் கட்டி விடுவார்கள் நம்மவர்கள்
Rate this:
2 members
0 members
9 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.