தீரன்சின்னமலை ஆடிப்பெருக்கு விழாசொத்தை சேதப்படுத்தினால் நடவடிக்கை| Dinamalar

தமிழ்நாடு

தீரன்சின்னமலை ஆடிப்பெருக்கு விழாசொத்தை சேதப்படுத்தினால் நடவடிக்கை

Added : ஜூலை 31, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஈரோடு: தீரன்சின்னமலை நினைவஞ்சலியான ஆடிப்பெருக்கு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு, போலீஸார் சார்பில் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா, அரச்சலூர் அடுத்த ஓடாநிலை கிராமத்தில், ஆகஸ்ட், 3ம் தேதி, தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா, அரசு விழாவாக நடக்கிறது. அதற்காக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு, நினைவஞ்சலி செய்வதற்கான, கால அட்டவனை போலீஸார் சார்பில் வெளியிடப்பட்டு, அதில் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.அதன் விபரங்கள் வருமாறு:அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், விதிமுறைக்கு உட்பட்டு, அஞ்சலி செலுத்த வேண்டும். பின், மண்டப வளாகம், ஓடாநிலை கிராமத்தை விட்டு சென்றுவிட வேண்டும்.பொதுஇடத்தில் விளம்பர பலகை, தட்டி போர்டு, சுவரொட்டி, கொடி, பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது. பட்டாசு, வாணவேடிக்கை வெடிக்க அனுமதி கிடையாது. அரசின் சார்பில் வைக்கப்படும் ஒலிப்பெருக்கி தவிர, மற்றவர்கள் எவரும் ஒலிப்பெருக்கி வைக்கக்கூடாது.வாகன தணிக்கை செய்யும் போது, போலீஸாருடன் ஒத்துழைப்பு தரவேண்டும். ஆயுதங்கள் எடுத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், வாகனங்களை நிறுத்த வேண்டும்.
தீரன் சின்னமலை நற்பணி மன்றத்தார் சார்பில் வழங்கப்படும் அன்னதானம் தவிர, மற்ற அமைப்பு மற்றும் கட்சிகளுக்கு அன்னதானம் வழங்க அனுமதியில்லை. வடபழனி - ஓடாநிலை சாலை, ஒருவழிப்பாதை என்பதால், வாகனங்களை நிறுத்தக் கூடாது.ஓடாநிலை வரும் வாகனங்கள், ஜெயராமபுரம், கஸ்தூரிபா கிராமம், கந்தசாமிபாளையம், மோளப்பாளையம் வழியாக, வெவ்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டும். ஈரோடு, சங்ககிரி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், காவிரி பாலம், காவிரி ரோடு, கிருஷ்ண தியேட்டர், மார்க்கெட், மணிக்கூண்டு, மரப்பாலம், மூலப்பாளையம், அரச்சலூர் வழியாக ஓடாநிலைக்கு வர வேண்டும்.உச்சநீதிமன்ற உத்தரவுபடி, பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தாலோ, சீர்குலைவு ஏற்படுத்தினாலோ, சம்பந்தப்பட்ட நபரின் அரசியல் கட்சி அல்லது அமைப்பின் மீது வழக்குப்பதிவு செய்து, இழப்பீடு தொகை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ksv - chennai,இந்தியா
31-ஜூலை-201316:15:19 IST Report Abuse
ksv நல்லதொரு துவக்கம் நமது நாட்டிற்கு தேவையான ஒரு சட்டம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை