E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதில் காலதாமதம்: நகர மக்கள் கடும் அதிருப்தி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2013
05:36

நாமக்கல்: பாதாள சாக்கடை இணைப்புக்கு கட்டணம் செலுத்தினாலும், இணைப்பு வழங்க, நாமக்கல் நகராட்சி நிர்வாகத்தினர் தாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நாமக்கல் நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முழுவதுமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. நகராட்சி எல்லை விரிவாக்கம் செய்வதற்கு முன் இருந்த, 30 வார்டுக்கு உட்பட்ட குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.குடியிருப்பு, வணிக நிறுவனம் அமைந்துள்ள பரப்பு உள்ளிட்டவற்றை பொறுத்து, இணைப்பு வழங்குவதற்கான கட்டணத்தை நகராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்து, வசூலித்து வருகிறது. பாதாள சாக்கடை இணைப்பு பெற்றால் மட்டுமே வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படும், என்பது போன்ற பல்வேறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.அதன் காரணமாக, பாதாள சாக்கடை இணைப்பை நகர மக்கள் பெற்று வருகின்றனர். இந்நிலையில், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் செலுத்தினாலும் உடனடியாக இணைப்பு வழங்குவதில்லை.ஒரு வீதியில் ஐம்பது வீடுகள் இருந்தால், அனைத்து குடியிருப்பு வாசிகளும் முழுமையாக கட்டணம் செலுத்தினால் மட்டுமே இணைப்பு வழங்கப்படுகிறது. இல்லையெனில், இணைப்பு வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. அதனால், பாதாள சாக்கடை இணைப்புக்காக கட்டணம் செலுத்தியும் பயன் இல்லை. இணைப்புக்காக நிர்ணயம் செய்த தொகையும் அதிகமாக உள்ளது என, நகர மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதை நகராட்சி நிர்வாகத்தினர் கவனத்தில் கொண்டு பாதாள சாக்கடை இணைப்பை, கட்டணம் செலுத்துபவர்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.