பாக்., தீயில் கருகி 17 பேர் பரிதாப பலி| Dinamalar

பாக்., தீயில் கருகி 17 பேர் பரிதாப பலி

Updated : ஜூலை 31, 2013 | Added : ஜூலை 31, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

இஸ்லாமாபாத்:வடமேற்கு பாகிஸ்தானில் லாரி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பெஷாவர் நகரில் இருந்து பன்னு நகர் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் கரக் பகுதி அருகே செல்லும் போது எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்நிலையில் உள்ளே இருந்த கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 17 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்கள் உடல்கள் உருக்குலைந்து அடையாளம் தெரியாத நிலையில் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை