2 ஆயிரம் ஏக்கரில் சிறு, குறு தொழில் மையங்கள்"நீட்ஸ்' திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு: நெல்லையில் அமைச்சர் மோகன் ஆலோசனை| Dinamalar

தமிழ்நாடு

2 ஆயிரம் ஏக்கரில் சிறு, குறு தொழில் மையங்கள்"நீட்ஸ்' திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு: நெல்லையில் அமைச்சர் மோகன் ஆலோசனை

Added : ஜூலை 31, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

திருநெல்வேலி:தமிழகத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் சிறு, குறு தொழில் மையங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று நெல்லையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மோகன் தெரிவித்தார்.தமிழக முதல்வர் அறிவித்த "நீட்ஸ்' திட்டம் உட்பட அரசின் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான மானியங்கள் மற்றும் சலுகைகளுக்கான திட்டங்கள் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் விதம் குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சமயமூர்த்தி வரவேற்றார். இதில் ஊரக தொழில் துறை அமைச்சர் மோகன் பேசியதாவது:
தமிழகத்தில் 25 லட்சம் வரையிலான தொழில் குறு தொழில், 5 கோடி வரையிலான தொழில் சிறு தொழில், 5-10 கோடி வரை நடுத்தர தொழில், 10 கோடிக்கு மேற்பட்ட தொழில் பெரிய நிறுவன தொழில் என வரையறுக்கப்பட்டுள்ளது.சேவை நிறுவனங்களை பொறுத்தவரை 10 லட்சம் வரை குறு தொழில், 10 லட்சம் முதல் 2 கோடி வரை சிறு தொழில், 2 கோடி - 5 கோடி வரையிலான தொழில் நடுத்தர தொழில், 5 கோடிக்கு மேல் பெரிய நிறுவன தொழில் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் "நீட்ஸ்' திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 25 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு தொழில் மேம்பாட்டு திட்டங்களுக்கு தமிழக முதல்வர் 10 அம்ச திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார்.மானிய கடன் சதவீதம் 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் சிறு, குறு தொழில் மையங்கள் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் திருமழிசை பகுதியில் 20 கோடியில் இம்மையம் அமைக்கப்படும்.தமிழத்தில் 32 மாவட்டங்களில் தொழில் மையங்கள் மேம்பாடு மறு சீரமைப்புக்கு தனியாக திட்டம் தயாரிக்கப்பட்டு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் அறிவித்த திட்டங்கள், மானியங்கள், சலுகைகள் அனைத்தும் பயனாளிகளிடம் எளிதாகவும், விரைவாகவும் சென்றடைய அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அமைச்சர் மோகன் பேசினார்.குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை செயலாளர் தனவேல், டான்சி நிர்வாக இயக்குனர் முருககையா, கூடுதல் ஆணையாளர் ரீட்டா ஹரீஷ் தாக்கர், கூடுதல் இயக்குனர்கள் ஜோசப் ரவி தேவசகாயம், பரமேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.இதில் பொது மேலாளர்கள் மாரியம்மாள், பாக்கியம், மாயத் தேவர், சாந்தகுமார், சிட்கோ நிறுவன பொது மேலாளர் தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நலத் திட்ட உதவிகள்:
இதில் மூன்று பேர்களுக்கு 11.39 லட்சம் ரூபாய்க்கான நீட்ஸ் திட்ட மானியத்தின் செக், ஒருவருக்கு 83.40 லட்சத்திற்கு கடன் ஒப்பளிப்பு ஆணை, பாங்க் கடன் உதவியாக 4 பேருக்கு 6.24 லட்சம், ஒரு நபருக்கு 1.89 லட்சம் கடன் ஒப்பளிப்பு ஆணை ஆகியவற்றை அமைச்சர் மோகன் வழங்கினார்.இதில் வீட்டு வசதி வாரிய தலைவர் முருகையா பாண்டியன், எம்.எல்.ஏக்கள் நயினார் நாகேந்திரன், முத்துசெல்வி, கடம்பூர் ராஜூ, மேயர் விஜிலா சத்யானந்த், டி.ஆர்.ஓ உமா மகேஸ்வரி, திட்ட இயக்குனர் விஜயகுமார், முன்னோடி பாங்க் அலுவலர் அழகர்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை